t> கல்விச்சுடர் அரசு ஊழியர்களுக்கு 01.07.2023 முதல் 4% அகவிலைப் படி உயர அதிக வாய்ப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 June 2023

அரசு ஊழியர்களுக்கு 01.07.2023 முதல் 4% அகவிலைப் படி உயர அதிக வாய்ப்பு!

அரசு ஊழியர்களுக்கு 01.07.2023 முதல் 4% அகவிலைப் படி உயர அதிக வாய்ப்பு!


விலைவாசி உயர்வு குறியீட்டு எண் அடிப்படையில் அகவிலைப் படி உயர்வு மே'2023 ன் படி 3% உயர்ந்திருக்கிறது.


ஜூன்' 2023 ல் இது மேலும் 1% உயர்ந்து, 01.07.2023 முதல் 4% ஆக உயரக் கூடும் என கணிக்கப் பட்டுள்ளது.


அதாவது 01.07.2023 முதல் அகவிலைப்படி 42% லிருந்து 46% ஆக உயர அதிக வாய்ப்பு உள்ளது.


*எனினும் அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்குமா? அல்லது 4% ஆக உயருமா? என்பது 31.07.2023 அன்று தெளிவாக தெரிந்து விடும்.*


இதன் பின் இதற்கான கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டு, 2023 செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரம் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும்.


 மத்திய அரசின் அறிவிப்பு வெளியான பின், மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை தனது ஊழியர்களுக்கு வழங்கும். 


ஜூலை முதல் செப்டம்பர் வரை நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும்.


 2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், காலதாமதமின்றி உரிய காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL