காமராஜர்
🪶🪶🪶🪶🪶🪶🪶
வெட்டவெளி
பொட்டல் காடு
சுட்டெரிக்கும்
உச்சி வெயில்
மஞ்சனத்தி
மர நிழலில்
கொண்டு வந்த
கூல் கரைத்து
அப்பனோடு
பசி யாரும்
இல்லாத
ஏழைப் பிள்ளை
யார் கொடுக்க
கல்வி பயிலும்.
காடு மேடு
ஓடி அலைந்து
கலையத்தில்
சோறு வைத்து
இன்னைக்கு படிக்கலைன்னா
என்னைக்கும் விடியாதே !?
பச்சை புள்ள படிக்கலைன்னா
மிச்ச வாழ்வு எதுக்குன்னே !
எல்லா புள்ளையும் தவறாம
இன்னைக்கே படிக்கணும்.
என்றானே
சிவகாமி
பெத்த புள்ள
அவ்வளவு சீக்கிரத்தில்
மறந்துடுமா
பள்ளிக்கூடம்
காமராஜ் ன்குற
ஒத்த சொல்ல.
பெருந்தலைவர் போற்றுவோம்.
✒️வெ.மருது.