வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்கு உதவிடும் வகையில் நிறைய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், டெலிகிராம் செயலியைப் போன்று வாட்ஸ்அப்பிலும், சேனல் வசதி கொண்டுவருகிறது.
இதில் பயனர்களுக்கு போன் நம்பர் எதுவும் காணப்படாது. அப்டேட் செய்யப்படும் அனைத்தும் 30 நாட்கள் மட்டுமே காணப்படும். இந்தியா உட்பட 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சேவையை மெட்டா நிறுவனம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.