டிட்டோஜாக் சார்பில் 13.10.2023 அன்று சென்னை DPI வளாகத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுருத்தி மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று உயர்மட்டக்குழு உறுப்பினர்களை தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன் DPI வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்த டிட்டோஜாக் அமைப்பில் உள்ள 11 சங்க பொறுப்பாளர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
இயக்குநரின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு வி.எஸ்.முத்துராமசாமி,மாநிலத்தலைவர் திரு சு.குணசேகரன் உட்பட டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.பேச்சுவார்த்தையை தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன்,பள்ளிக்கல்வி இயக்குநர் திரு அறிவொளி ஆகியோர் இன்று DPI வளாகத்தில் காலை 11.45 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இயக்குநர்கள் இருவரும் 30 அம்சக்கோரிக்கைகளை ஒவ்வொன்றாக படித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கைகள் பற்றி விளக்கினர்.அவர்கள் கூறிய பதில்கள் சில...
வட்டார சீனியாரட்டியை மாநில சீனியாரிட்டியாக மாற்ற நீதிமன்றம் கருத்துக்கேட்டுள்ளது.இன்னும் முடிவாகவில்லை.
அரசு உதவிபெறும் பள்ளியில் 6000 இ.நி பணியிடம் உபரியாக உள்ளது மாதம் ரூ 638 கோடி வீணாகின்றது.ஆனாலும் அவர்களை மாவட்டம் விட்டு மாறுதல் வழங்கவில்லை.
மற்ற கோரிக்கை அரசின் பாலிசி தொபர்புடையது இப்போது பதில் கூற இயலாது என்றார்.
இது போன்ற பதிலை கூறினார்.இயக்குனர்கள் ஆசிரியர்கள் மீது உளப்பூர்வமான அக்கரையில் உள்ளனர் ஆனால் உத்தரவாக வழங்காததால் டிட்டோஜாக் ஏற்கவில்லை.
ஆகவே 13.10.2023 ந் தேதி அறிவித்த மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.