25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்!
UPS ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள்
மத்திய அரசு உறுதியான ஓய்வூதியத்தை அறிவிக்கிறது...
யுபிஎஸ் அம்சங்கள்
*ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், அவர் இறக்கும் போது பெறப்படும் ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை அவரது குடும்பம் பெறும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு வேலையை விட்டுவிட்டால், பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
பணியாளர்கள் தனி பங்களிப்பு செய்ய வேண்டியதில்லை, மத்திய அரசு 18 சதவீத பங்களிப்பை வழங்கும், ஊழியர்களின் பங்களிப்பு என்பிஎஸ் போன்று பத்து சதவீதமாக இருக்கும்.
பணவீக்க குறியீட்டு பலன் கிடைக்கும்
ஓய்வூதியத்தின் மீதான கருணைத் தொகையைத் தவிர, சேகரிக்கப்பட்ட தொகையிலிருந்து தனித்தனியாக
*ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும், ஓய்வு பெறும்போது மாதச் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு (சம்பளம் + DA) சேர்க்கப்படும்.
UPS ஓய்வூதிய திட்டத்தின் கீழ், கடைசி
12 மாத பேசிக் சம்பளத்தில் 50% பணம் உறுதியாக ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இதற்கு அந்த அரசு ஊழியர் 25 ஆண்டுகள்
பணியில் இருந்திருக்க வேண்டும். ஒரு
வேளை அவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு 60% பணம் ஓய்வூதியமாக
வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு உறுதியாக
மாதம் ரூ10,000 வழங்கப்படும். இதில் மத்திய
அரசின் பங்களிப்பு 18%ஆக உயர்த்தப்படும்.