காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அக்.2 வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விடுமுறை குறுகிய நாளே இருப்பதால் விடைத்தாளை திருத்த கூடுதல் நாள் தேவை என ஆசிரியர்கள் காேரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்து விடுமுறையை நீட்டித்து, அக். 7இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.