5 மாவட்டங்களுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரம், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.