t> கல்விச்சுடர் தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் இல்லை: தமிழ்நாடு அரசு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 January 2025

தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் இல்லை: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம் முதலிய திட்டங்களால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை.

பிகார், அசாம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பள்ளிப்படிப்பை இடையில் விடும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் கல்வி அமைச்சக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப் பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019 - ல் 99 பேர் என்பது 2024 - ல் 100 பேர் என உயர்ந்துள்ளது.

அதேபோல, சிறுமியர் எண்ணிக்கை, 97.5 - ல் இருந்து 100 ஆக 2024 - ல் அதிகரித்து இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது புலனாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019 - ல் 81.3 என இருந்தது 2024 - ல் 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019 - ல் 89.4 சதவிகிதமாக இருந்தது 2024 - ல் 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பிகாரில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை 51.2 சதவிகிதம் என்பது, 38.8 சதவிகிதம் என 12.4 சதவிகிதம் குறைந்து இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL