t> கல்விச்சுடர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியீடு DIRECT LINK ATTACHED - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

16 May 2025

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியீடு DIRECT LINK ATTACHED


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

LINK 1 CLICK HERE

LINK 2 CLICK HERE 

மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி.,  தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 9 மணிக்கு வெளியாகும் எஸ்.எஸ்.எல்.சி.  பொதுத் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட இருக்கின்றன.
 

JOIN KALVICHUDAR CHANNEL