மடம் கொன்று அறிவகற்றும் கல்வி
புதுக்கவிதை
எதிர்காலம் சிறக்கும்.
அறியாமை அகற்றும்;
அழுக்காறு நீக்கும்
கிளர்கதிர் கல்வி.
பெண்ணடிமைப் போக்கும்
தன் உரிமை உணர்த்தும்
பாதுகாப்பு அளிக்கும்
பரன் கரம் கல்வி !
அதிகாரம் அளிக்கும்
அவனியை புரக்கும்
ஆற்றல்மிகு அணுபோல்
அகிலம்தனை புரட்டும் !
சோம்பலாய் சுருளாதே
சுகவாழ்வில் மயங்காதே
அலைபேசியில் அமிழாதே
விழித்திருந்து கற்பாய் நீ
கல்வி கற்றல் கடினம் போ
என்றெண்ணி பழித்திடாமல்
ஆசையுடன் நீயும் கற்றால்
மாற்றிடலாம் மாறா விதியை !
கல்வி சுவை கற்கண்டு
கன்னல் அனைய கனித் துண்டு
மின்னல் போல் ஒளிப்பிழம்பாய்
ஒளி பெறுவாய் ஒளியே தருவாய் !
அஜந்தா தேவி