01.01.2026 அன்று அகவிலைப்படி 60% அல்லது 61% ஆக இருக்கலாம்.
இதன்படி,
100 பைசா (1 ரூபாய்) மாத ஊதியம் பெறுபவர் 60% அகவிலைப் படியுடன் சேர்த்து 160 பைசா மாத ஊதியம் பெறுவார். அதாவது 1.6 ரூபாய்.
( PAY + 60% DA மட்டும். - HRA, CCA, MA, SA இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது.)
ஊதியக் குழு பரிந்துரைகளின் படி 15 % முதல் 20% வரை ஊதிய உயர்வு வழங்கப் படலாம்.
இதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்க வாய்ப்பு குறைவு.
Fitment factor calculation:
15% ஊதிய உயர்வு அளித்தால், 1.6 + 0.24 = 1.84 Fitment factor ஆக இருக்கும்.
20% ஊதிய உயர்வு அளித்தால், 1.6 + 0.32 = 1.92 Fitment factor ஆக இருக்கும்.
கணிப்பு :
1.85 முதல் 1.9 க்குள் தான் Fitment factor இருக்கும்.
பல்வேறு ஊடகங்களில் வருவது போல 2.27 அல்லது 2.9 என Fitment factor இருக்க வாய்ப்பில்லை.