11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அன்பில் மகேஷ் அறிவிப்பு
1 முதல் 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணாக்கரும் தேர்ச்சி நடைமுறை தொடரும்.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டார். இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இனி 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாது. நடப்பு ஆண்டு முதல் இது ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார். மேலும், “8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடரும்” என விளக்கம் கொடுத்தார்.