திருக்குறள்:
குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
விளக்க உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
பழமொழி :
Every sunrise is an invitation to try again.
ஒவ்வொரு சூரியோதயமும் மீண்டும் முயற்சிக்கான அழைப்பு.
இரண்டொழுக்க பண்புகள் :
1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.
2 இயற்கை சமநிலை காப்பேன்.
பொன்மொழி :
வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் - டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
பொது அறிவு :
01.அட்லாண்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் சந்திக்கும் இடம் எது?
கேப் ஹார்ன்- தென்அமெரிக்கா
Cape ஹார்ன் -South America
02. உலகின் காபி கோப்பை (Coffee Pot) என்று அழைக்கப்படும் நாடு எது?
பிரேசில்- Brazil
English words :
Run into – meet by chance. to drive a vehicle into an object or vehicle. எதிர்பாராமல் சந்தித்தல், ஒரு பொருள் அல்லது வண்டியின் மீது ஒரு வண்டி கொண்டு மோதுதல்
Grammar Tips:
Two sounds of C
'C' sound with e, i, and y
Ex: Rice, dice, face, cereal, cent, nice
'K' sound with other letters
Ex: cake, cup, cold, cap, camel, clip
அறிவியல் களஞ்சியம் :
நமது உடலில் இருக்கும் டி என் ஏ வானது தற்போது இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் சக்தியை விட பல மடங்கு மெமரியை கொண்டுள்ளது. அதாவது நமது உடலில் இருக்கும் ஒரே ஒரு டி என் ஏ பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 08
அனைத்துலக எழுத்தறிவு நாள்
அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
நீதிக்கதை
குருவி கொடுத்த விதை
ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது.
பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான்.
சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது.
திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான்.
அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது.
இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன.
அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார்.
அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.
பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார்.
மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார்.
நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.
இன்றைய செய்திகள்
08.09.2025
⭐அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்!
⭐காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது குண்டுவீசி இஸ்ரேல் தாக்குதல் 41 பேர் உயிரிழப்பு
⭐பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறை செயலாளராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஷபானா மஹ்மூத் நியமனம்
⭐சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀2வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி
🏀கடந்த 5 ஆண்டுகளில் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் ரூ.14,627 கோடி அதிகரிப்பு
Today's Headlines
⭐Students can apply for admission to vacant seats in government arts and science colleges online till September 30
⭐Israeli airstrikes on residential buildings in Gaza killed 41 people.
⭐ Pakistani-origin Shabana Mahmood appointed as Britain's first Muslim female Home Secretary
⭐India has decided to increase trade with China and Russia.
SPORTS NEWS
🏀 2nd T20, Zimbabwe beats Sri Lanka in a stunning
🏀Cricket Board's revenue increases by Rs. 14,627 crore in the last 5 years