தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நேற்று இரவு முதலே தென் மாவட்டங்களில் கனமழை விடிய விடிய பெய்து வருகிறது.
இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாள் மட்டும் விடுமுறை
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று 16.10.2025 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் இ.ஆ.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
தென்காசி பள்ளிகளுக்கு விடுமுறை
அதேபோல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு இன்று கன மழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் உத்தரவு வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை
அதேபோல் தூத்துக்குடி மாவடட்த்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.