t> கல்விச்சுடர் எட்டாவது ஊதியக் குழு மூலம் உங்கள் ஊதியம் எவ்வளவு உயரும்? எளிமையான கணக்கீடு! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

14 November 2025

எட்டாவது ஊதியக் குழு மூலம் உங்கள் ஊதியம் எவ்வளவு உயரும்? எளிமையான கணக்கீடு!

எட்டாவது ஊதியக் குழு மூலம் உங்கள் ஊதியம் எவ்வளவு உயரும்? எளிமையான கணக்கீடு!


01.01.2026 அன்று உங்கள் அடிப்படை ஊதியம் + 60% DA இவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த தொகைக்கு 15% எவ்வளவு வரும்? 20% எவ்வளவு வரும்? என கணக்கீடு செய்து கொள்ளுங்கள்.

15% முதல் 20% க்குள் தான் ஊதியக் குழுவின் பணப்பலன் கிடைக்கும். அதற்கு மேல் கிடைக்க வாய்ப்பே இல்லை.

மாதிரி கணக்கீடு:

01.01.2026 ல் அடிப்படை ஊதியம் ரூ 50,000 என வைத்துக் கொள்வோம்.

ரூ 50,000 க்கு 60% DA ரூ 30,000.

மொத்தம் ரூ 50,000 + ரூ 30,000 = ரூ 80,000.

ரூ 80,000 க்கு 15% என கணக்கிட்டால், ரூ 12,000.

ரூ 80,000 க்கு 20% என கணக்கிட்டால், ரூ 16,000.

ஆகவே ரூ 50,000 அடிப்படை ஊதியம் பெறும் நபருக்கு, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை ரூ 12,000 முதல் ரூ 16,000 வரை மட்டுமே.

இதை விட கூடுதல் பணப்பயன் கிடைக்க வாய்ப்பில்லை.

HRA, CCA, MA இவற்றை தற்போது பெறும் தொகையை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள்.

HRA 4300 x 2 = 8600
CCA 720 x 2 = 1440
MA 300 x 2 = 600

இது கூடுதல் பணப்பயன்.

01.01.2026 க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் திருத்தியமைத்து கூடுதலாக்கி வழங்கும் வகையில் ஊதியக்குழுவுக்கான Terms of Reference ல் எதுவும் கூறப்படவில்லை என்பதால், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப் படுமா? அல்லது DA மட்டும் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப் படுமா? என்ற ஐயம் நிலவுகிறது.

ஊதியத்தை விட, ஓய்வூதியத்திற்கு தான் ஒன்றிய அரசு அதிகம் செலவிடுகிறது என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுவோர், மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 2029 க்கு பிறகு தான், எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL