t> கல்விச்சுடர் கல்விச்சுடர்: INDIA . -->

Now Online


Recent Posts Widget
Showing posts with label INDIA. Show all posts
Showing posts with label INDIA. Show all posts

1 January 2021

அசாம் மாநிலத்தில் பள்ளிகள் இன்று திறப்பு மாணவர்கள் வருகை குறைவு

அசாம் மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், பி.யூ.கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கியுள்ளன.


6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புறக் கல்வித் திட்டத்தின் (வித்யாகமா) மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் வகுப்புகள் நடக்காமல் இருந்தது.

இதன் காரணமாக வகுப்பறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

20 October 2019

முதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு




புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் தாமதமாக வந்ததற்காக அதில் முன்பதிவு செய்து பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.250 இழப்பீடாக வழங்கப்பட்டது.

நாட்டிலேயே முதல்முறையாக ரயில் தாமதமாக வந்ததற்காக பயணிகளுக்கு இழப்பீடு இப்போதுதான் வழங்கப்பட்டுள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பொருத்தமட்டில், ரயில் ஒருமணிநேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு 125 ரூபாயும், 2 மணி நேரத்துக்குமேல் தாமதமாக வந்தால் 250 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

லக்னோவில் இருந்து டெல்லி சென்ற தேஜஸ் ரயிலில் முன்பதிவு செய்த 451 பயணிகளுக்கும், டெல்லியில் இருந்து லக்னோ சென்ற தேஜஸ் ரயிலுக்காக காத்திருந்த 500 பயணிகளுக்கும் ரயில் 2 மணிநேரம் தாமதமாக வந்ததால் தலா 250 ரூபாய் இந்த இழப்பீடு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி தலைமை மண்டல மேலாளர் அஷ்வினி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், " அனைத்து பயணிகளின் செல்போனுக்கும் ஒருலிங்க் அனுப்பியுள்ளோம். அந்த லிங்கை கிளிக் செய்தால் இழப்பீடு கேட்டு விண்ணப்பம் வரும் அதில் பெயர், டிக்கெட் எண் குறிப்பிட்டால் இழப்பீடு வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்" எனத்தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக தனியார் மூலம் லக்னோ-டெல்லி, டெல்லி-லக்னோ இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் தாமதத்துக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணியில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதத்தால் காத்திருந்த பயணிகள் அனைவருக்கும் தேநீர், மதிய உணவு, தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டு, தாமதத்துக்கு மன்னிக்கவும் என்ற சிறிய பரிசும் வழங்கப்பட்டது.


25 September 2018

மும்பையைப் போல தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டுமா?







மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், லிட்டர் பெட்ரோல் விலை, 90 ரூபாயை தாண்டியதால், விரைவில், தமிழகத்திலும், அதே நிலை ஏற்படலாம் என, தெரிகிறது.


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நம் நாட்டில், பெட்ரோல் மீது, மாநில அரசுகள் விதிக்கும், 'வாட்' எனப்படும், மதிப்பு கூட்டு வரி, 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம். அதன்படி, அம்மாநிலத்தில் உள்ள, மும்பை, தானே, நவி மும்பையில், லிட்டர் பெட்ரோல் மீது, 39.12 சதவீதமும், மற்ற நகரங்களில், 38.11 சதவீதமும், வாட் வரிவிதிக்கப்படுகிறது.


டீசல் மீதான வாட் வரி, மும்பை, தானே, நவி மும்பையில், 24.78 சதவீதமும், மற்ற நகரங்களில், 21.89 சதவீதமாகவும் உள்ளது. தமிழகத்தில், பெட்ரோலுக்கு, 32.16 சதவீதம்; டீசலுக்கு, 24.08 சதவீதம், வாட் வரி விதிக்கப்படுகிறது.கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி வரி உள்ளடக்கிய, லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை, மஹாராஷ்டிரா அரசின் வாட் வரி, 'டீலர் கமிஷன்' சேர்த்து, அம்மாநிலத்தில் நேற்று, லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயை தாண்டி,90.08 ரூபாய்க்கு விற்பனையானது; டீசல், 78.58 ரூபாய் என்றளவில் இருந்தது.தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 85.99 ரூபாய்க்கும், டீசல்,78.26 ரூபாய்க்கும் விற்பனையாகின. தமிழகத்திலும், விரைவில், பெட்ரோல் விலை,

90 ரூபாயை நெருங்க உள்ளதால், வாகன ஓட்டிகள், கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

ரூ.15 உயர்வு!

தமிழகத்தில், ஜன., 1ல், லிட்டர் பெட்ரோல், 72.53 ரூபாய்க்கும், டீசல், 62.90 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒன்பது மாதங்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 13.46 ரூபாய் உயர்ந்து, 85.99 ரூபாயாக அதிகரித்துள்ளது. டீசல், 15.36 ரூபாய் உயர்ந்து, 78.26 ரூபாயாக உள்ளது

Source: Dinamalar

22 September 2018

திருப்பதியில் வீடுகளுக்கான கியூ.ஆர். கோடு திட்டத்தை தொடங்கிவைத்தார் சந்திரபாபு நாயுடு 


நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் கியூ.ஆர். கோடு திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கபில தீர்த்ததில் 150 ஏக்கரில் பல்வேறு மூலிகைச் செடிகளுடன் கூடிய நகர வனத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார்.

 பின்னர், என்.டி.ஆர் சந்திப்பிலிருந்து நகர வனம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பாதகைகளுடன் கூடிய மாணவ, மாணவிகள் நடத்திய பேரணியில் கலந்துகொண்டார். அப்பொழுது, மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் எண்ணுடன் கூடிய கியூ.ஆர். கோடு டிஜிட்டல் கதவு எண் திட்டத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


19 September 2018

போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!! - மத்திய அரசு


போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்’!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்டம்பர் 19) நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.


இதனையடுத்து, அரசு ஊழியர்கள் யாராவது போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தெரிவித்திருப்பதாவது:

“அரசு ஊழியர்கள் எந்தவிதத்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் நடத்தை விதிகள் 1964இன் பிரிவு 7ஆவது விதிமீறலாகக் கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, போராட்டத்தில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.”

என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


13 September 2018

சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு தடை

சாரிடன், டாக்ஸிம் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள், தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வறிக்கையின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கலவை அளவு கொண்ட மருந்து மாத்திரைகளில் எவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து பரிந்துரை செய்ய வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதனையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், மாத்திரைகள் பற்றி மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக்கழகம் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிட்ட இருமல் மருந்துகள், வலி தீர்க்கும் மாத்திரைகள் ஆகியவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆய்வில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சாரிடன், டாக்ஸிம் AZ, பன்ட்ரம் கீரிம், உள்ளிட்ட 327 மருந்து, மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்குமாறு சுகாதார அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. 2016 மார்ச் 10-ம் தேதி தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளில் 15 வகை மருந்துகள் 1988-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதிக்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால் அவற்றுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


12 September 2018

கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!'






 ''கடந்த, 25 ஆண்டுகளில், போதைப் பழக்கம், ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது. அதை கட்டுப்படுத்த, கல்வியுடன் கலைகளை வளர்த்தால், மனம் சிதறாமல் இருக்கும்,'' என, ஈஷா யோகா சத்குரு தெரிவித்தார்.


ஈஷா யோகா மையத்தின் சார்பில், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'இளைஞரும் உண்மையும்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.


இதுகுறித்து, சத்குரு அளித்த பேட்டி: இந்திய இளைஞர்களிடம், தெளிவான பார்வை, உள்நிலையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில், 'இளைஞரும் உண்மையும்' என்ற, மிகப்பெரிய முயற்சியை, ஈஷா யோக மையம் கையில் எடுத்துள்ளது.


இதன் தொடக்கமாக, சென்னையில், அண்ணா பல்கலை, டில்லி, ஸ்ரீராம் கல்லுாரியில்
நடத்தப்பட்ட கலந்துரையாடலில், நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள, 18 பல்கலைகள், கல்லுாரிகளில், தொடர்ந்து, மூன்று ஆண்டுகள், இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.


நாட்டில், இளைஞர் சக்தி, மக்கள் தொகையில், 50 சதவீதம் உள்ளது. அவர்களின் சக்தி, அவர்களுக்கே தெரிவதில்லை; ஆழ்மனதில் புதைந்துள்ளது. வாழ்க்கையில், சக்தியும், காலமும் மிக முக்கியம். காலம் போய்க் கொண்டே இருக்கும். சக்தி நிலைத்திருக்கும். அதை, தேவையான தெளிவு, சமநிலை கொடுத்தல் வழியாக, நல்வழிப்படுத்தலாம். அதை கொண்டு வருவதே, இந்த, 'இளைஞரும் உண்மையும்' நிகழ்ச்சி.


நம்மிடம் உள்ள ஒரே சொத்து, இந்த இளைஞர்கள் படை தான். இந்த நிகழ்ச்சி துவங்கியவுடன், லட்சக்கணக்கான கேள்விகள் வந்துள்ளன. அதில், இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள போதை பிரச்னை தான், பிரதானமாக இடம்பெற்றுள்ளது.


படிக்கும்போது ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவே, போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். 25 ஆண்டுகளில், போதை பழக்கத்திற்கு அடிமையானோர் எண்ணிக்கை, ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தால், மேற்கத்திய நாட்டு கலாசாரத்தை பார்த்து, நம் நாடு மாறி வருகிறது. உலகம் முழுவதும், ஒரே கலாசாரம் என்ற நிலை ஏற்படுவதால், இந்த போதை பிரச்னை அதிகரித்துள்ளது.


எனவே, சிறு வயது முதலே படிப்புடன் சேர்த்து, மற்ற கலைகளையும் கற்று வந்தால், மனம் சிதறாமல் இருக்கும். நாட்டில், குறைந்த சதவீத இளைஞர்கள் மட்டுமே, நாட்டுப் பற்றுடன் திகழ்கின்றனர். இளைஞர்களின் தற்கொலை சதவீதம், வருத்தமடையச் செய்கிறது. இதற்கும் அடிப்படை, கல்வியாகவே உள்ளது.


வரும் காலங்களில், உலக அளவில் பள்ளிகள், ஆசிரியர்கள் இருக்கப் போவதில்லை. இந்நிலை, இந்தியாவில் வருவதற்கு, சற்று காலம் ஆகலாம். விவசாய கல்வி, நம் நாட்டிற்கு மிக அவசியமான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

JOIN KALVICHUDAR CHANNEL