பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இன்னோசன்ட் திவ்யா IAS நியமனம்!
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (08.09.2026) வெளியிடப்பட்ட G.O.(Rt.) No.3213 மூலம் பல்வேறு முக்கியத் துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக ஜெ. இன்னசென்ட் திவ்யா, IAS நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான CO-OPTEX-ன் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்தார். பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த டாக்டர் பி. சந்திர மோகன், IAS, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமனம்.
ஆர். லில்லி, IAS – கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கதர் துறை செயலாளராக மாற்றம்.
டாக்டர் பி. சந்திர மோகன், IAS – வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம்.
இ. சரவணவேல்ராஜ், IAS – எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையராக நியமனம்.
அஜய் யாதவ், IAS – குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக நியமனம்.
எஸ். சிவராசு, IAS – பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமனம்; ஆவின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார்.
எஸ். சிவானந்தம், IAS – நிதித்துறை துணைச் செயலாளராக நியமனம்.
இதுதவிர, என். முருகானந்தம், IAS, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் (TANSI) கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகவும்; டி.என். வெங்கடேஷ், IAS, TUFIDCO-வின் முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குநராகவும் பணியமர்த்தப்பட உள்ளனர். கே.எஸ். கந்தசாமி, IAS, தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், கவிதா ராமு, IAS, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது, துறையின் நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.