| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
19 May 2017
15 April 2017
10ம் வகுப்பு சான்றிதழில் நிரந்தர குறியீட்டு எண் வெளியிட அரசு முடிவு
தமிழகத்தில், 10ம் வகுப்பு சான்றிதழில், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண்ணைச் சேர்த்து வழங்க, அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் துவங்கின.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான சான்றிதழ்களில், போலி சான்றிதழ்களை தடுக்க, தமிழக அரசின் தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 2016ம் ஆண்டு முதல், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஹால் டிக்கெட்டில், இந்த எண் இடம் பெற்றது; சான்றிதழிலும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஆதார் எண் மற்றும் கல்வித்துறையின் மின்னணு மேலாண் தகவல் பிரிவின் சார்பில், 'எமிஸ்' எண் வழங்கப்பட்டது. எனவே, எந்த எண்ணை, சான்றிதழில்
பதிவு செய்வது என, தேர்வுத்துறை குழப்பத்தில் இருந்தது.
இந்நிலையில், எமிஸ் எண் மற்றும் ஆதார் எண்களை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், மீண்டும், நிரந்தர குறியீட்டு எண்ணைப் பயன்படுத்த, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டு முதல், மாணவரின் பெயர் மற்றும் இன்ஷியல், தமிழிலும் இடம்பெற உள்ளது. பள்ளியின் பெயர் விபரமும், சான்றிதழில் இருக்கும். இதற்காக, தேர்வு முடிந்ததும், மாணவர்களிடம் அவர்களின் பெயரை, இன்ஷியலுடன் தமிழில் எழுதி, கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த விபரங்கள், ஆன்லைனில் பதிவு செய்யும் பணி, நேற்று துவங்கியது.
5 April 2017
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் : 'சென்டம்' வழங்க கடும் கட்டுப்பாடு.
பத்தாம் வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது. இதில், 10.38 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
விடைத்தாள் திருத்தம், மாநிலம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட முகாம்களில், பல்வேறு மையங்களில், ஏப்., 1ல் துவங்கியது. முதலில் தமிழ், ஆங்கிலம் மொழி பாடத்திற்கு விடைத்தாள் திருத்தம் துவங்கியது.முதல் இரண்டு நாட்கள், தலைமை விடை திருத்துனர் மூலமும், பின், உதவி திருத்துனர்கள் மூலமும், விடைகள் திருத்தம் செய்யப்படுகிறது.மொழி பாடத்தில், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கப்பட்டால், அதற்கு இரண்டு வகை, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. முதன்மை தேர்வாளரும், பின் முகாம் அலுவலரும், பின், முதலில் விடைத்தாளை திருத்தியவரை தவிர, வேறு இரு ஆசிரியர்கள் மூலமும், ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.அதன் பின்னும், ஒரு மாணவர் சென்டம் எடுத்தால், அந்த விடைத்தாள், சென்னையில் உள்ள தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு, கண்காணிப்பு கமிட்டி மூலம், மறு ஆய்வு செய்த பின், மதிப்பெண் இறுதி செய்யப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள், கல்வியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.'மதிப்பீடு சரியாக இருந்தால் தான், அடுத்தகட்டமாக, மாணவர்கள் தேர்வு செய்யும் துறைகளும் சரியாக இருக்கும்' என, பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.அதே நேரம், விடை திருத்தத்தில் மறுமதிப்பீடு, மதிப்பெண் இன்றி பக்கம் விடுபடுவது போன்ற குளறுபடிகள் இன்றி, விடை திருத்தம் நடக்குமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
ஆர்வம் காட்டாத அரசு ஆசிரியர்கள் :
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விடுப்பு எடுத்து, அவர்கள் விடை திருத்தத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து, பணியிட மாற்றம், பணியில் கவனமின்மை என, பல புகார்களில், 'மெமோ' கொடுத்து,நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு விடைக்குறிப்பில் குளறுபடி : ஒன்றரை மதிப்பெண்ணில் சர்ச்சை.
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு, விடைக்குறிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின், 'சென்டம்' வாய்ப்புக்கு, 'செக்' வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது.
ஏப்., 1முதல், மொழி பாடத்திற்கான விடைத்தாள் திருத்தம் துவங்கி உள்ளது. இதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மொழி பாடத்திற்கான விடைக்குறிப்புகள், தரமான முறையில்தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய பாடங்களுக்கான, தலைமை விடைதிருத்துனர்களுக்கான விடை திருத்தம் நேற்று துவங்கியது.
இதில், தேர்வுத்துறையின் விடை குறிப்புகளை பெற்ற ஆசிரியர்கள், அவற்றை ஆய்வு செய்ததில், அறிவியல் பாட விடைக்குறிப்பு, குளறுபடியாக உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது, 50வது கேள்வியில், 'இரு வித்திலை தாவர விதையின் அமைப்பை படத்துடன் விவரிக்க' என்ற, ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, விடைக்குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், அவரை விதையின் படம் வரைந்து, நான்கு பாகங்களை குறித்தால், இரண்டு மதிப்பெண்களும், அவரை விதையை பற்றிய, ஒவ்வொரு சரியான குறிப்புக்கும், தலா அரை மதிப்பெண் வீதம், ஆறு குறிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண்களும், வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே வினா, 2014, பொது தேர்வில்வந்தபோது, மூன்று விடைக்குறிப்புகளை எழுதினாலே, ஒவ்வொன்றுக்கும், தலா ஒரு மதிப்பெண் வழங்கலாம் என, கூறப்பட்டிருந்தது. இதன்படி, படம் வரைந்து, மூன்று குறிப்புகள் எழுதினால் போதும், என, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்துள்ளனர்.
ஆனால், இந்த ஆண்டு ஆறு குறிப்புகளை எழுத வேண்டும் என, விடைக்குறிப்பில் மாற்றி கொடுக்கப்பட்டதால், பல மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.மூன்று குறிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண்களுக்கு பதில், ஒன்றரை மதிப்பெண் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, 'சென்டம்' பெறும் மாணவர்களுக்கு, ஒன்றரை மதிப்பெண், சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
4 April 2017
DGE ; SSLC PUBLIC EXAMINATION MARCH 2017 ALL SUBJECTS OFFICIAL ANSWER KEY
27 March 2017
பத்தாம் வகுப்பு - அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017 - விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணி ஏப்ரல்' 2017 - AE, SO, CE, MVO ஆகியோரது பணிகள் (PDF வடிவில்)
பத்தாம் வகுப்பு - அரசுப் பொதுத் தேர்வு - மார்ச்' 2017
விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணி ஏப்ரல்' 2017 -
AE, SO, CE, MVO ஆகியோரது பணிகள்
(PDF வடிவில்)
Click here to Download
👇
உதவித் தேர்வாளரின் பணிகள் ( AE)
கூர்ந்தாய்வு அலுவலரின் பணிகள் (SO)
முதன்மைத் தேர்வாளரின் பணிகள். (CE)
மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் & அட்டவணையாளரின் பணிகள் ( MVO )



