. -->

Now Online

FLASH NEWS


Thursday 6 June 2019

தமிழ்நாட்டில் தமிழ்ப் புலவர்கள் தமிழ் பண்டிதர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை-தமிழுக்குத் தடை ? முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :

செம்மொழியான தமிழ்மொழி காலங்காலமாக உலகமே போற்றி  வணங்குகின்ற உன்னத மொழி தமிழ்
தமிழ்மொழி என்பது பேசவும் எழுதவும் பயன்படும் மொழிமட்டுமல்ல. உணர்ச்சி, பண்பாடு, கலை,இலக்கியம்,வீரம்,விவேகத்தை உணர்த்தும் மொழி. தாய் எப்படியோ தமிழும் அப்படியே தாய்மையுணர்வை ஊட்டும் தமிழ்மொழி இன்று தமிழ்நாட்டில் நிராகரிக்கப்பட்டிருப்பது    வேதனையளிக்கிறது. 

           உன்னத  மொழியான தமிழ் மொழியை போதிக்கின்ற கல்வித் தகுதி (பி ஏ ,பி .எட்.,) இணையான தமிழ்ப்புலவர் (பி லிட்.,) தமிழ்ப் பண்டிதர் (Tpt)என்னும் கல்வித்தகுதிபட்டதாரி
தமிழ்  ஆசிரியராகப் பணிபுரிந்திட கல்வித்தகுதியாக  தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்து வந்ததை.தற்பொழுது தமிழ்நாடு அரசு  ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 இல் தமிழ் புலவர் தமிழ் பண்டிதர் படிப்புகள்  தேர்வு எழுத தகுதி இல்லை என  அறிவித்துள்ளது தமிழுக்கு கிடைத்த அநீதியாகும். .இதனால் தமிழ்நாட்டில் தமிழ் புலவர் தமிழ் பண்டிதர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு 2019  விண்ணப்பிக்கத் தகுதி அற்றவர்கள் என்று  தனித்தமிழ் படித்த ஆசிரியர்கள் தமிழ்நாட்டிலே புறந்தள்ளப்படும் அவல நிலை.
  இந்த தமிழ்ப்பண்டிதர் பயிற்சியை 4 பல்கலைக்கழகங்களும், அரசு கல்லூரியும் தொடர்ந்து  பாடத்திட்டம் செயல்பாட்டில் இருந்துவருகிறது.மேலும், கல்விக் கொள்கயில் அந்தந்த மாநில மொழிகளுக்கு அவரவர் முக்கியத்துவம் வழங்கி கொள்ளலாம் என்று இருக்கின்ற நிலையில் ,ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில்அவரவர் மாநில மொழி பண்டிதர்களுக்கு அம்மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது. 
     தனித்தமிழ் படித்த தமிழ் புலவர் தமிழ்ப் பண்டிதர்கள் 40.000 பேர்கள் தேர்வு எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் வருகின்ற 8.06.2019 மற்றும்  9 .6. 2019 ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது.இருப்பினும்  தனித்தமிழ் படித்த தமிழ்ப் புலவர்கள் தமிழ் பண்டிதர்கள், அவர்களின் உரிமைகள் காப்பாற்றிடவும், தமிழின் தனித்தன்மையினை நிலை நாட்டிடவும் , தமிழ்மொழியினை காப்பாற்றிடவும் தமிழாசிரியர் கல்வித்தகுதியான புலவர், பண்டிதர் படிப்புகளை நடைமுறையிலிருந்ததை தொடர்ந்திட மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன்  கேட்டுக்கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.