. -->

Now Online

FLASH NEWS


Monday 12 August 2019

சிபிஎஸ்இ தேர்வுக்கான பதிவுக்கட்டணம் உயர்த்தப்பட்டது


சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான பதிவு மாணவரின் 9 ஆம் வகுப்பில் இருக்கும்போது செய்யப்படும். 12 ஆம் வகுப்புக்கான பதிவு மாணவரின் 11 ஆம் வகுப்பிலே பதிவு செய்யப்படும்.


இந்த ஆண்டு மத்திய கல்வி வாரியம் பதிவு செய்யும் பணியை முந்தைய ஆண்டை விட சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. பதிவுக்கட்டணம் இரட்டிப்பாக்கியுள்ளது. கடந்த ஆண்டு வரை பதிவு கட்டணம் இந்தியாவில் உள்ள பள்ளிக்கு ஒரு மாணவருக்கு ரூ. 150 ஆகவும். வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு மாணவருக்கு ரூ.250 . இந்நிலையில் அதிகரிக்கப்பட்ட கட்டணம் இந்திய பள்ளி மாணவருக்கு ரூ. 300 ஆகவும், வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு ரூ. 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 16 முதல் 31 2019க்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். தாமதமாகக் கட்டினால் ரூ. 2000 வரை கட்ட வேண்டியதிருக்கும்.


மாணவர்கள் குறைந்தபட்சம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு கட்டலாம். இது குறித்து வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் அறிவிப்புகள் கிடைக்கிறது.


2021 போர்டு தேர்வுக்கான பதிவு செயல்முறை ஆகஸ்ட் 8, 2019 அன்று தொடங்கியது. ஒரு மாணவர் பள்ளி மூலம் பதிவு செயல்முறை எளிதாக்கப்படுகிறது.