. -->

Now Online

FLASH NEWS


Thursday 22 August 2019

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்து வந்த பாதை.....




தலைமையாசிரியராக பணியேற்ற  நாள் முதல்
இன்று வரை.

பள்ளிக்கு முதலில் சென்று
கடைசியில் வந்தோம்.

நலத்திட்டங்களுக்காக  நாள்தோறும் சாக்கு தூக்கினோம்.

மூன்று பருவமும்
மூட்டைத்தூக்கும்
முதலாளியாய்
வலம் வந்தோம்.

எமிஸ்  ஆதாருக்காக
எத்தனையோ இரவுகள் விழித்திருந்தோம்.
கட்டிட வசதிக்காக
கைக்காசை செலவு செய்தோம்

கண்மூடி
கழிப்பறை சுத்தம்
செய்தோம்.

ஆண்டுவிழாகொண்டாட  ஆயிரத்தெட்டு
பிரச்சினைகளை
சந்தித்தோம்.

smc கூட்டம் போட
எத்தனையோ
கஷ்டங்கள்.
ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு விழா.
ஓய்வில்லாமல்
போட்டிகள்.

சத்துணவு மேற்பார்வை
சக ஆசிரியர்
மேற்பார்வை

வகுப்பாசிரியராக பணிசெய்தோம்.
வராத ஆசிரியருக்கும்
பணிசெய்தோம்.

பெற்றோர் சண்டையில்
பிள்ளைகளை
மீட்டெடுத்தோம்.

சுற்றுபுறத்தூய்மையில்
சுறுசுறுப்பாய்
ஈடுபட்டோம்.

ஆய்வுக்கூட்டங்களுக்கு  ஆளாய்
பறந்தோம்.

பர்டிக்குலர் கொடுக்க  பம்பரமாய்  சுழன்றோம்.

வாரம்தோறும்
வாக்காளரைச் சேர்த்தோம்.

மாணவர்களுக்காக
ஆடினோம் பாடினோம்
படைத்தோம்
நடித்தோம்.

இப்படி எத்தனையோ  கதாபாத்திரங்கள்
ஏற்று  வாழ்ந்து வந்தோம்.

இத்தனை உழைப்பிற்கும்
ஊக்க ஊதியம்
3%தான்.

இதனால் தான்
அரசிற்கு பணநெருக்கடி
ஏற்பட்டு விட்டதோ?

அதனால் தான்
தலைமைப் பொறுப்பை
பிடுங்கிக் கொண்டதோ!

தொடக்கப்பள்ளிக்கான அடையாளம் ஆக்கப்பட்டது என
கர்மவீரரின் வரலாறு பேசும்.

அழிக்கப்பட்டது
.......................
வரலாறு பேசும்.

ஆசிரியர் பணி
அறப்பணி
அதற்கே உன்னை அர்ப்பணி!

என்பதற்கு இலக்கணமாய்
எடுத்துக்காட்டாய்
வாழ்பவர்கள்

தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர்களே!
இதை எவராலும் மறுக்கவோ  மறக்கவோ
முடியாது.