. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

Now Online

Saturday, 23 November 2019

வரலாற்றில் இன்று 23.11.2019


   
நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.

1227 – போலந்து இளவரசன் முதலாம் லெஸ்செக் படுகொலை செய்யப்பட்டான்.

1248 – காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.

1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.

1867 – இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.

1890 – நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1936 – முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.

1955 – கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1971 – மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1978 – இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.

1985 – எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

1998 – கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

2003 – வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.

2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

2007 – ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டனர்.

*பிறப்புக்கள்*

1921 – சுரதா, கவிஞர் (இ. 2006)

1926 – சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி

*இறப்புகள்*

1973 – வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

1990 – ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916)

1990 – லெப்டினன்ட் கேணல் போர்க், விடுதலைப் புலிகளின் மாவீரர் (பி. 1959)

2014 – செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்.


CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN