t> கல்விச்சுடர் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு QR Code உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு விரிவான செய்தியுடன்‌ இயக்குநர் செயல்முறைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 November 2019

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு QR Code உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு விரிவான செய்தியுடன்‌ இயக்குநர் செயல்முறைகள்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவிடுவதற்காக QR Code உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்கான பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணி நேரத்தை கணக்கிடுவதற்காக QR Code உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதையடுத்தும் அரசு பள்ளி ஆசியர்கள் மற்றும் பணியாளர்களின் முழு விவரங்கள் மற்றும் புகைப்படங்களை இம்மாதம் 25ம் தேதிக்குள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு ஆசியர்களின்  விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளத்து.








JOIN KALVICHUDAR CHANNEL