. -->

Now Online

FLASH NEWS


Friday 10 May 2024

அட்சய திரிதியை நாளில் அதிர்ச்சி தங்கம் விலை - சவரனுக்கு ரூ.360 உயர்வு

அட்சய திரிதியை நாளில் அதிர்ச்சி தங்கம் விலை - சவரனுக்கு ரூ.360 உயர்வு

தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி 11-ந்தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது.

 இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.இந்த நிலையில் அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 88 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு
அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 2 முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ₹360 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹53,640க்கும், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹6,705க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.30 உயர்ந்து ₹90க்கும், கிலோவிற்கு ₹1,300 உயர்ந்து ₹90,000க்கும் விற்கப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து..

பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. 

அண்ணா பல்கலை., மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியீடு - DIRECT LINK ATTACHED



10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்

LINK 1 CLICK HERE

LINK 2 CLICK HERE

LINK 2 Click Here (DIGI LOCKER)

Wednesday 8 May 2024

கட்டாய IT பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

கட்டாய IT பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

 தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது.



Monday 6 May 2024

உபரி ஆசிரியர் பணிநிரவல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

உபரி ஆசிரியர் பணிநிரவல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 06.05.2024




2024-2025 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு


2024-2025 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு


(பள்ளிக்கல்வித்துறை & தொடக்கக் கல்வித் துறை )

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 9:30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கடந்த மார்ச் 1 - 22 வரை நடைபெற்ற இத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது..

மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் - dge.tn.gov.in, t nresults.nic.in மற்றும் apply1.tndge.org/dge-result-list இல் பார்க்க முடியும். . முடிவுகளைச் சரிபார்க்க, மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்  12 ஆம் வகுப்பு ரோல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். 

 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு 10 மற்றும் பிளஸ் 2 முடிவுகளைப் பார்க்க, விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம். 

படி 1:  முடிவுகள் 2024 இன் அதிகாரப்பூர்வ முடிவு போர்ட்டலைப் பார்வையிடவும்

படி 2:  12th முடிவு இணைப்பை கிளிக் செய்யவும்

படி 3: ரோல் எண் மற்றும் பிற விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையவும்

படி 4: பின்னர் தங்களது மதிப்பெண்களை டவுன்லோட் செய்யலாம் 

Result தெரிந்து கொள்ள 

LINK 1 CLICK HERE

LINK 2 CLICK HERE

ARREAR RESULT தெரிந்து கொள்ள 
👇

LINK  CLICK HERE