t> கல்விச்சுடர் கையேந்தி நிற்கின்றோம் இறைவா! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 March 2020

கையேந்தி நிற்கின்றோம் இறைவா!


கையேந்தி நிற்கின்றோம் இறைவா................
மெய்யேந்தும் உயிர்காப்பாய் இறைவா.................
                       (கையேந்தி)

நீதந்த புவியில்
ஆனந்தம்கொண்டு
வாழ்ந்துவந்த வேளையிலே............

நோய்வந்து எங்கள்
உயிர்கொண்டு செல்ல வேடிக்கைப்
பார்க்கிறாயோ இறைவா...................

கண்ணுக்குத் தெரியாத உயிரொன்று பெருகி
மண்ணுக்குள்
வேராக
மனிதருக்குள்
இறங்கி
நடத்துகின்ற
நாடகம்
நீஅறியாததா?
அதைத் தடுக்க
உன்னால்
முடியாததா?

(கையேந்தி)


வாவாவா வாவாவா இறைவா
உலகைக் காத்திடவே விரைந்து
வாவாவா வாவாவா இறைவா!
சோலைவனம் அழைக்கிறது இறைவா!
பாலைவனம் ஆக்காதே இறைவா!

(கையேந்தி)

த.ஹேமாவதி
கோளூர்

JOIN KALVICHUDAR CHANNEL