t> கல்விச்சுடர் கல்விச்சுடர்: TAX NEWS . -->

Now Online


Recent Posts Widget
Showing posts with label TAX NEWS. Show all posts
Showing posts with label TAX NEWS. Show all posts

2 February 2025

ஆண்டு வருமானம் 12 லட்சம் மேல் உள்ளவர் செலுத்த வேண்டிய வரி விவரம் - கணக்கீடு


நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், புதிய வருமான வரி கட்டமைப்பின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை. அதாவது, 

14 January 2019

2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...





✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

✍நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

✍housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.கல்விச்சுடர்

✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

✍கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

✍நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

✍Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/-  ஐ 87A ல்  கழித்துக் கொள்ளலாம்.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.


Income tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரும்னு தெரிந்து கொள்ள வேண்டுமா ?







சென்னை வருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு

வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சில சேமிப்புக்கள் 80 சி பிரிவின் கீழ் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம் அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்

1. ஆயுள் காப்பீட்டு பிரிமியம்

2. பொது பிரவிடண்ட் ஃபண்ட்

3. ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்

4. சுகன்யா சம்ரிதி திட்டம்

5. தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு உண்டு)

6. வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை

7. முதியோர் சேமிப்பு திட்டம்

8. யுனிட்டுகள் மூலம் காப்பீடு

9. முதலீட்டு சேமிப்புக்கள்

10. ஓய்வூதியம்

11. குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்கு மட்டும்)

12. வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்

இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும். எனவே இவை குறித்து உங்கள் நிதி ஆலோசகரின் அறிவுரையின் படி சேமிப்பதன் மூலம் வருமான வரி விலக்கு பெற முடியும்.


15 October 2018

நிலையான வரி விலக்கு ரூ. 40,000 / - விளக்கம்

நிலையான வரி விலக்கு ரூ. 40,000 / - விளக்கம்

IT STANDARD DEDUCTION OF Rs 40,000 - CLARIFICATION


CLICK HERE TO DOWNLOAD 

2 September 2018

வருமான வரி செலுத்த தவறியவர்கள் என்ன செய்யலாம்?












2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிந்துள்ளது. ஆனால், கேரளாவிற்கு மட்டும் வெள்ளப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஆகஸ்ட் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்யத் தவறியவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமான வரியைச் செலுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் செலுத்த வேண்டும். 

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் ரூ.1000 மட்டும் அபராதமாக வசூலிக்கப்படும். 

டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ளும் வருமான வரிசையைச் தாக்கல் செய்யாவிட்டால் அபராதத்துடன், செலுத்த வேண்டிய வட்டிக்கு மாதம் தோறும் 1% வட்டி சேர்ந்துகொண்டே இருக்கும். 


ஏற்கெனவே, உரிய அவகாசத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அதில் ஏதேனும் தவறு இருந்தால் சரிசெய்யும் வசதியும் உண்டு. ஆனால் தாமதமாக தாக்கல் செய்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


1 September 2018

வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?










இது வருமான வரி தாக்கல் செய்யும் நேரம் என்றாலும் பலர் தனது வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை என்று அதனைப் புறக்கணிப்பது வழக்கம். அதே நேரம் வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் வைத்துள்ள போதிலும் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டிஸ் அனுப்பும்.

இந்தியாவில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அதனை விடக் குறைவாக உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அதனை நிராகரிக்கின்றனர். ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது அது பெரிய அளவில் பயன் அளிக்கும். அது குறித்து விளக்கமாக இங்குத் தளம் அளிக்கும் விவரங்களைப் படித்துப் பயன்பெறுக.

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்?


இந்தியாவில் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது, இதுவே 60 வயது என்றால் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் போது, 80 வயது என்றால் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது வரி தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி செலுத்துவது அவசியமா?

மக்கள் மனதில் வரி செலுத்த கூடிய அளவிற்கு வருவாய் இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாட்டில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது பின்வரும் நன்மைகளை எல்லாம் பெறலாம்.



டாக்ஸ் ரீஃபண்டு

வங்கி கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு, ஃபிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்து இருக்கும் போது எல்லாம் வங்கி நிறுவனங்கள் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. சில நிறுவனங்களில் பணிபுரியும் போது ஊழியர்கள் பெயரில் டிடிஎஸ் பிடித்தம் செய்கின்றன. இது போன்று உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள வரிப் பணத்தினை எல்லாம் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் திரும்பப் பெறலாம்.

விசா

வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகக் குடியேற விரும்பும் போது சில நாடுகள் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்கக் கேட்கும். முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் போது விசா பெற வேண்டும் என்றால் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதியாகவும் உள்ளது.

கடன்

வீட்டுக் கடன், கார் கடன் அல்லது பிற கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கடந்த இரண்டு வருடங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை வங்கிகள் கட்டாயம் எனக் கூறி வருகிறன. வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்ற காரணங்களுக்காக எல்லாம் பலரின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்தும் அளவிற்கு வரி வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது பயனை அளிக்கும்.

முன்நோக்கிய மூலதன இழப்புகள்

சொந்தமாகத் தொழில் அல்லது ஈக்விட்டி முதலீடு செய்து வரும் போது கடந்த 8 வருடங்களாக நட்டம் அடைந்து வந்தாலும் வரும் காலத்தில் லாபம் பெற வாய்ப்புள்ளதால் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. அதன் மூலம் அந்த நட்டத்தினை அடுத்த வருடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

பிற வருவாய்கள்

உங்கள் வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை, விவசாயம் மூலம் வரும் வருவாய் என்றாலும் வரி இல்லா பத்திர திட்டங்கள் அல்லது இது போன்ற பிற திட்டங்களில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்து வரும் போது வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. இது எந்த வகையில் உங்களுக்கு வந்த வருவாய் வந்தது என காண்பிக்க ஒரு அத்தாட்சியாக இருக்கும்.




28 August 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

 வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர். வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். 

இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது. அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

 வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை. மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

14 July 2018

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம்: வருமான வரித் துறை



வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசியாகும். அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரித் துறை வெளியிட்ட அறிவிப்பில், வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் பெறுவோா மூலதன மதிப்பு உயர்வு, வாத்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர். 
வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவாகள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் கட்டணம் அபராதக் கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மாாச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

மேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோா ஆகியோர் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.

வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் செயல்படும் வருமான வரி அலுவலகத்தில் முன் தயாரிப்பு கவுண்டரகள் செயல்படும். இந்த கவுண்டர்கள் அனைத்து வேலை நாட்களிலும் வரும் திங்கள்கிழமை முதல் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை செயல்படும் என்று வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 - மீறினால் 10000 ரூபாய் அபராதம்!





ஜூலை 31க்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்து அபராதத்தை தவிர்க்கும்படி வருமானவரித்துறை அறிவித்துள்ளது. வருமானவரி கணக்கை அதற்குரிய நாளாக 31க்குள் தாக்கல் செய்வோருக்கு அபராதம் ஏதுமில்லை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்து டிசம்பர் 31க்குள் கணக்கு தாக்கல் செய்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. 

வரி செலுத்துவோர் மீது நம்பிக்கை உள்ளதாகவும் அனாவசியமாக யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கம் இல்லை என்றும் வருமான வரி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பெரும் தொகையை வங்கிகளில் முதலீடு செய்திருந்தால் அதனைத் தவறாமல் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும் தவறான தகவல்களுடன் தாக்கல் செய்தாலும் தண்டனை மற்றும் அபராதத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.



4 July 2018

IT returns தொடர்பான விளக்கங்கள்...!!வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31....!!



  IT return தொடர்பாக பல சந்தேகங்களுக்கு  ஆடிட்டர் ஒருவரின் பதில்கள்:

✍🏻மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் 
சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.

✍🏻 அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்.

✍🏻 ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

✍🏻 தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் 2.5லட்சத்தை தாண்டினால் கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.

✍🏻 சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும்  ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும்.

✍🏻 அடுத்ததாக ஒரு வதந்தி, பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது

✍🏻 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் கட்டாயம் onlineலும் 5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline லோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு 5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர்.  

மேலும் ஒருசில ஊழியர்கள்

✍🏻 சம்பளம் தவிர
Fixed Deposits,
Shares,
Mutual Fund
உள்ளிட்ட  பிற முதலீடுகள்ஏதேனும் செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் வட்டி, டிவிடென்ட்போன்ற  ஆதாயத் தொகையும் 26as படிவத்தில் update ஆகும்.

✍🏻  அந்த ஆதாயத்  தொகைக்கான வரியையும் நாம் தனியாக செலுத்த வேண்டும்அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால் E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்தியிருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),
குறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
*வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31

*கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.


17 June 2018

INCOME TAX RETURNS (ITR) செய்வதற்கு முன் கவனிக்கப்பட வேண்டியவை



ஏன் ITR file செய்ய வேண்டும்?

தங்கள் பணம் சம்பளமாக அல்லது  வங்கி வட்டி விகிதம் மூலமாகவோ அல்லது வீடு வாடகை ஆகிய வழிகளின்  கிடைக்கும் பணத்தை INCOME TAX OFFICEக்கு கணக்கு காட்ட வேண்டும் அப்படி கணக்கு காட்டாத நிலையில் அவை கணக்கில் வராத பணமாக கருதப்படலாம்

BEFORE CHECK
1. சம்பள பட்டுவாடா அதிகாரி (DDO) form 16 (தருவது அவரது கடமை)  பெறப்பட்டவுடன் ITR பதிவு செய்யலாம் (original form 16 with seal and sign )

2. தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொகை மற்றும் வங்கியில் பிடிக்கப்பட்ட வரி 26As form ல் வந்தால் ITR பதிவு செய்யலாம்.


NOTICE REASON

1. மேற்கண்ட இரண்டும் இல்லாமல் ITR returns செய்தால் தங்களுக்கு INCOME TAX OFFICE NOTICE வரலாம்

2. தவறான கணக்கு தாக்கல் செய்யும்போது

3. வரி பாக்கி செலுத்தாமல் ITR FILE செய்யும்போது
4. வங்கியில் பிடிக்கப்பட்ட வரியை கணக்கு காட்டாத போது

5. அவருக்கு அதிகமான பண பரிவர்த்தனை செய்யும்போது

6. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் போது ஏற்கனவே ITR பதிவு செய்யாமல் இருந்தால்

7. அதிக பணமாக (ரூபாய்) வங்கியில் பரிவர்த்தனை செய்யும்போது

WHO IS THE AUTHORIZATION TO ISSUE FORM 16 IN SCHOOLS

1. GOVERNMENT PRIMARY, MIDDLE, AIDED      PRIMARY, MIDDLE - BEO'S

2. GOVERNMENT HIGH SCHOOL AND HIGHER SECONDARY SCHOOL -HEADMASTER

3. AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOL DEO

4. AIDED COLLEGE JOINT DIRECTOR

5. GOVERNMENT COLLEGE PRINCIPAL


மேலே செல்லப்பட்ட form 16 மற்றும் 26 As இல்லாமல் அல்லது பணம் வித்தியாசம் இல்லாமல் இருந்தால் ITR returns பதிவு செய்யலாம் இல்லை என்ற நிலையில் Auditor மற்றும் DDO வை  தொடர்பு  நலம்

தங்கள் Auditor  தொடர்பு  கொள்ளவும்


அனைத்தும் இருந்து பதிவு செய்யாமல் இருந்தால்  தொகை 1000, 5000, 10000 என செலுத்த நேரிடலாம்.

If any clarification contact

9629803339
விஸ்வநாத்


15 May 2018

INCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க


தாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO)
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு.(DEO)


1. தங்கள்  (அரசு உதவிபெறும்) உயர்நிலைப்பள்ளி DDO'S  தங்களுக்கு ORIGINAL FORM 16 கொடுத்தால் மட்டுமே  ITR செய்ய வேண்டும்.


2. AEEO OR DEO தவறும் நிலையில் தாங்கள் ITR பதிவு செய்ய வேண்டாம்.  அப்படி செய்யும்போது உடனடியாக INCOME TAX DEPARTMENT NOTICE வரும்.



3. AEEO/DEO கொடுக்க தவறும் நிலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ 200 விதம் ரூ.10000 வரை அபராதம். செலுத்த வேண்டும். மற்றும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம்.


4. AEO/DEO TDS பதிவு செய்த பின் form 16 தரமுடியாத நிலையில் தாங்கள் 26AS பார்த்து தாங்கள் கட்டிய income tax Amount வரவு வைக்கப்பட்டு இருந்தால் தாங்கள் கண்டிப்பாக ITR பதிவு செய்ய வேண்டும்.

5. தாங்கள் பணம் தங்கள் PAN எண்ணில் வரவு வைக்கப்பட்டு தாங்கள் ITR பதிவு செய்யாத போது ரூபாய் 1000 (below 500000) ரூபாய் 5000(above 500000) அபராதம் விதிக்கபடும்.



TDS LAST DATE MAY 30


ITR FILE LAST DATE JULY 30


19 April 2018

I.T.FORM 2018 - 19


1 AUTO INCREMENT

2 AUTO E.L SALARY CALCULATION WITH PARTICULAR MONTH

3 AUTO GPF /CPS DEDUCTION

4 AUTO CPS ADDITIONAL BENEFITS RS. 50000 DEDUCT REMINING AMOUNT SAVING 

5 AUTO HRA AND HOUSING LOAN CALCULATION

6 EDIT IN MONTHLY DEDUCTION SHEET

7 AUTO HRA DEDUCTED WITH CITY LEVELS

8 AUTO CCA CALCULATION WITH MULTI CITY

9. AUTO REBATE RS 2500

10 AUTO FINAL MONTH TAX AND CHESS AMOUNT

11 GOVERNMENT STAFF MONTHLY TAX DEDUCTION.

12 MANUAL ARREAR INPUT

13 TEACHER RESPONSICE SHEET AVAILABLE

14 CHALLAN SHEET AVAILABLE

I.T.FORM DOWNLOAD செய்ய  -  CLICK HERE

தவறான தகவல்கள் தரும் அரசு ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை! - வருமான வரித்துறை எச்சரிக்கை


வருமானவரி கணக்கு செலுத்தும்போது வருமானத்தை குறைத்துக் காட்டுவது, பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை அதிகரிப்பது உள்ளிட்ட தவறான தகவல்களை சமர்ப்பிக்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

மேலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதுதொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை பெற்று, செயலாற்றும் பெங்களூரில் உள்ள மத்திய செயலாக்க மையத்துறை (சிபிசி) வெளியிட்டுள்ள தனது அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

வருமான வரி ஆதாயங்களை பெறுவதற்காக தவறான கணக்கை தாக்கல் செய்ய உதவும் நேர்மையற்ற வருமான வரி ஆலோசகர்களின் வலையில் பொதுமக்கள் விழ வேண்டாம். வருமானத்தை குறைத்துக் காட்டுதல், பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை அதிகரித்துக் காட்டுதல் உள்ளிட்ட தவறான செயல்களின் மூலமாக வருமான வரி ஏய்ப்பு செய்வது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறியதாகும்.

எனவே, வருமான வரி கணக்குத் தாக்கலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்படுவதுடன், தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கு திருப்பியளிக்கப்படும் தொகையும் தாமதமாகும். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தவறான வருமான வரி தாக்கல் செய்யும் பட்சத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைகேடுகளில் ஈடுபடுவோரைக் கண்டறியும் வகையில் விரிவான இடர் ஆய்வு அமைப்பின் மூலமாக வருமான வரி கணக்குத் தாக்கல்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இது, மனிதர்கள் தலையீடு இல்லாத, தானியங்கி அமைப்பாகும். வருமான வரி ஆலோசகர்கள் வருமான வரிச் சட்டத்துக்கு உள்பட்டு, வரி செலுத்துவோருக்கு தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும். மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றிடமும் பரிந்துரைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வருமான வரி ஆலோசகர் உதவியுடன் மோசடியாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதை வருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவு சமீபத்தில் கண்டறித்துள்ள நிலையில் இதுபோன்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த மோசடி விவகாரத்தில் சிபிஐ குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


2 April 2018

வரி செலுத்தவில்லையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'



வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம். 2019 மார்ச் வரை, அபராதத்துடன் வரி செலுத்த முடியும். இந்த ஆண்டில் வரி செலுத்தாமல், அரசை ஏமாற்றுவோரை கண்டறிய, பல உத்திகளை அதிகாரிகள் செயல்படுத்த உள்ளனர்.

வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: வருவாயை காண்பிக்காமல், பல்வேறு வசதிகளை அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வர, இந்த ஆண்டு, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 


சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், பல ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பட்டியலை, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து 

பெற்று, அதற்கான வருவாய் ஆதாரம் குறித்து விளக்கம் கோரவுள்ளனர்.

இதுதவிர, வேறு சில திட்டங்களை செயல்படுத்தவும், அதன் வாயிலாக, வரி கட்டாதவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


28 March 2018

அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும் மார்ச் 29, 30, 31 தேதிகளில் வருமான வரி அலுவலகங்கள் செயல்படும்...


விடுமுறை நாட்களான மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளிலும் வருமானவரி அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 2016-17 மற்றும் 2017-18-ஆம் ஆண்டுகளுக்கான தாமதிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு மற்றும் 2016-17-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கு ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 (சனிக்கிழமை) ஆகும். 2017-18 நிதியாண்டு நிறைவடையும் மார்ச் 31-ஆம் தேதி சனிக்கிழமை ஆகும். மேலும் மார்ச் 29, 30 ஆகிய தேதிகளும் விடுமுறை நாள்களாகும்.

இருப்பினும் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யவும், அதனுடன் தொடர்புடைய பணிகளை நிறைவேற்றவும் வசதியாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்களும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செயல்படும்.

இந்த நாள்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும். வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்ய தேவையான உதவிகளை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


7 March 2018

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs



நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலாண்டுக்கும் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும்.

உங்களிடம் பிடிக்கும் வரி பணம் அரசிடம் சரியாக போய்சேருகிறதா எண்பதை கண்டுபிடிப்பது எப்படி?


டிடிஎஸ் என்னும் வரிப்பணம் ஒவ்வொருவருடைய சம்பளத்திலிருந்து கண்டிப்பாக கழிக்கப்படும். இதை அந்தந்த நிறுவனமே பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் வரியில் ரூ.3,200 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும் 447 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை அரசு கணக்கில் டெபாசிட் செய்யாமல் தங்களது தொழில் தேவைகளுக்காக பயன்படுத்தி உள்ளன என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. இப்போது ஒவ்வொரு நிறுவனமும் கண்டிப்பாக காலாண்டு (3 மாதம்) கணக்கில் வருமான வரித்துறையிடம் டிடிஎஸ்-ஐ பைல் செய்ய வேண்டும். மேலும் உங்களிடம் பிடிக்கும் வரி பணம் அரசிடம் சரியாக போய்சேருகிறதா எண்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முதிலில் tax e-filing-என்ற வலைதளம் மூலம் உள்நுழைய வேண்டும். பின்பு உங்களுடைய சரியான ஐடி மற்றும் பாஸ்வர்ட் போன்றவற்றை அந்த வலைதளத்தில் பதிவிட வேண்டும். அடுத்து ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ்(AS) என்ற இரண்டு விருப்பங்கள் இருக்கும், ஃபார்ம் 16 பொறுத்தவரை சம்பள தொகையில் பிடிக்கப்பட்ட வரி குறித்த தகவல் இடம்பெற்றிருக்கும். அதன்பின்பு ஃபார்ம் 26ஏஎஸ் பொறுத்தவரை நீங்கள் வருமான வரித்துறையினரிடம் செலுத்திய வரித்தொகை குறித்த அரசு ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும். பின்னர் நீங்கள் ஃபார்ம் 26ஏஎஸ் -எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். ஃபார்ம் 26ஏஎஸ் உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், மேலும் இரண்டு ஃபார்ம்களின் தொகையும் ஒத்துப்போகவில்லை என்றால், உங்கள் நிறுவனம் உங்கள் கணக்கில் சரியாக வரி செலுத்தவில்லை என்று அர்த்தம். குறிப்பாக டிடிஎஸ் ரிட்டர்ன்ஸ் பைல் செய்த 10 நாட்களுக்குள் இதனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஒத்துப்போகவில்லை என்றால், உடனடியாக வரி பிடித்தம் செய்பவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். பின்பு TRACES வலைத்தளத்தில் இருந்து ஃபார்ம் 26ஏஎஸ்-ஐ எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும், குறிப்பாக இது உங்களின் வரி விவரங்களை சேமித்து வைத்திருக்கும். பான் எண்ணுடன் சரியான மொபைல் எண்ணை இணைத்திருந்தால், டிடிஎஸ் ரிட்டர்ன்ஸ் குறித்த எஸ்எம்எஸ்-ஐ வருமான வரித்துறையினர்

அனுப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


JOIN KALVICHUDAR CHANNEL