| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
5 July 2022
9 December 2021
10 April 2021
ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை
1 March 2021
21 October 2019
ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை...
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பு பட்டியலிடப்படாததால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பாணையில் விஷூவல் கம்யூனிகேசன் பிரிவில் 21 இடங்கள், ஜர்னலிசம் பிரிவில் 11 இடங்களும் இடம் பெற்றுள்ளன.
இவற்றுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா முடித்து பி.எச்.டி. அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக்குழு விதியாக உள்ளது.
ஆனால் டி.ஆர்.பி. இணையதளத்தில் விஷூவல் கம்யூனிகேசன் பாடங்களுக்கு எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படியே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசு அனுப்பிய இணையான படிப்புகள் பட்டியலில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா குறித்த தெளிவான வரையறை எதுவும் இல்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Polimer News
12 October 2018
82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!
82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - காலிப்பணியிடங்கள் வரும் போது
ஆசிரியர் பணிக்கான TRB மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
25 September 2018
PGTRB தேர்வுக்கு தயார் ஆவது எப்படி? Article by Mr. அல்லா பக்ஸ்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வர வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்று யோசித்து கொண்டு இருக்க வேண்டாம்.
தேர்வு வரும் என்ற நம்பிக்கையோடு தேர்வுக்கு எப்படி தயார் ஆவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வானது 150 மதிப்பெண்களை கொண்டது.
150 மதிப்பெண்களில் 110 மதிப்பெண்கள் உங்கள் பாட சம்பந்தமான கேள்விகளை கொண்டு இருக்கும். மீதம் உள்ள 40 மதிப்பெண்களில் 30 கேள்விகள் சைக்காலஜி மற்றும் கல்வியியல் சம்பந்தப்பட்டவை. இன்னும் இருக்கும் 10 மதிப்பெண்கள் பொது அறிவு சம்பந்தமானவை.
தேர்வை பற்றி பார்த்தோம். இனி பாடத்திட்டம் பற்றி பார்ப்போம்.
கீழ்காணும் லிங்கை பயன்படுத்தி தேர்வுக்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.tn.gov.in/trb/
(பழைய லிங்க் தான்)
பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் பாடத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பள்ளி புத்தகம் முதல் இளநிலை மற்றும் முதுகலை புத்தகங்கள் அனைத்தும்(உங்கள் முக்கிய பாட சம்பந்தமானவை) தேவை.
பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்தாகிவிட்டது. புத்தகங்கள் எடுத்து வைத்தாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறிர்களா…
பாடதிட்டத்தில் உங்கள் மேஜர் (major subject) பாடமானது பத்து Unit ஆக இருந்தால் அதற்கு ஏற்ப பத்து நோட்டுகளை வாங்குங்கள். பாடத்திட்டத்தில் முதல் யூனிட்டில் முதல் தலைப்பை பாருங்கள். அந்த தலைப்பு ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இருப்பின் அந்த தலைப்பில் புத்தகங்களில் உள்ள குறிப்புகளை எடுத்து உங்கள் நோட்களில் எழுதி வைத்து கொள்ளுங்கள். இப்படியே அனைத்து யூனிட்களுக்கும் குறிப்புகள் எடுத்து வாருங்கள். இப்படி எடுக்கப்படும் குறிப்புகள் தேர்வு நெருங்கும் நேரத்தில் மீண்டும் திருப்புதல் செய்யவும் மற்றும் எளிதாக நினைவில் நிறுத்தவும் உதவும். மேலும் குறிப்பட்ட தலைப்பை இணையத்தில் தேடி அதில் இருந்தும் குறிப்புகளை எடுத்து கொள்ளுங்கள்.
உங்களிடம் போதுமான புத்தகங்கள் இல்லையா… கவலையே வேண்டாம். உங்கள் மாவட்ட பொது நூலகங்களை நாடுங்கள். அங்கு அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும். அவற்றில் இருந்து முக்கிய பகுதிகளை நகல் எடுத்து கொள்ளலாம்.
இப்படி தரமான பாட குறிப்புகளை நீங்களே தயார் செய்து படிப்பது உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதுடன், அதிக மதிப்பெண்களை பெறவும் உதவும்
13 September 2018
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு
65 வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் வேலை பார்த்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 56 பேர் கடந்த கல்வி ஆண்டில் (2017-2018) ஓய்வு பெற்றனர். 240 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக 80 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளது. தொடக்க கல்வி இயக்குனரின் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அதிகாரிகள் ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.
இப்போது அந்த முறை அடியோடு மாற்றப்பட்டு விட்டது. தொடக்க கல்வி இயக்குனர் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (முன்பு உதவி கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள்) ஆகியோர் உள்ளனர். ஆனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோரும் தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் ஆகியோருக்கு கீழும் பணியாற்றுவார்கள். அரசுபள்ளிகளில் 6-வது வகுப்பில் இருந்து ஆங்கிலவகுப்பு பல பள்ளிகளில் உள்ளது.
மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அரசுபள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. அவ்வாறு ஆங்கில வகுப்புகள் கொண்டுவந்தால் கண்டிப்பாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
இப்போதைய நிலையில் 65 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக எழுத்துத்தேர்வு நடத்துவது குறித்து விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடும். இந்த தகவலை சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாக கல்வி அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
1 September 2018
PGTRB Exam மூலம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக
உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.15 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட இரு வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.
அதன் பின்னர், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் 2 வகையிலான புதிய வண்ண பள்ளிச் சீருடைகள் இந்த ஆண்டுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுக்குப் பின்னர், கலந்தாய்வு முறையில் அவை நிரப்பப்படும். அதுவரை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்தப் பகுதிகளில் ரூ.7,500 சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் யோகா கற்றுத் தரும் பணிகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஆழியாறு வாழ்க-வளமுடன் அமைப்பு, சேவை அடிப்படையில் யோகா கற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி முழுமையாகக் கிடைக்கும் வகையில், அந்த பயிற்றுநர்களுக்கு போக்குவரத்துச் செலவு போன்ற இதர படிகள் பெற்றுத் தருவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1.3 லட்சம் அளவுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. 1, 250 பள்ளிகளில் 10 -க்கும் கீழ் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலை மாறி, 285 பள்ளிகளில் சேர்க்கை மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க முன்வந்தால், அதற்கான இடங்களை அரசு அளிக்க ஆவன செய்யும். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில், 192 பேரின் மதிப்பெண்களில் தவறு கண்டறியப்பட்டுள்ளது. அதில் எட்டு பேர் மீது கடுமையான நடவடிக்கை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
16 August 2017
12 August 2017
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆக.28, 29-ல் சான்றிதழ் சரிபார்ப்பு
கடந்த ஜூலை 2-ம் தேதி நடை பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரி யர் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2016-2017-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிகளில் 3375 காலியிடங்களை நிரப்ப ஜூலை 2-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) ஜூலை 17-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்களிட மிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு பாடவல்லுநர்களைக் கொண்டு இறுதி விடை குறிப்பு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விவரங் களை அறிந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதி்மன்றம் பிறப் பித்த உத்தரவின்படி நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதன் முழுவிவரமும் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது கடந்த ஜூலை 2-ம் தேதி நடை பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரி யர் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2016-2017-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிகளில் 3375 காலியிடங்களை நிரப்ப ஜூலை 2-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) ஜூலை 17-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்களிட மிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு பாடவல்லுநர்களைக் கொண்டு இறுதி விடை குறிப்பு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விவரங் களை அறிந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதி்மன்றம் பிறப் பித்த உத்தரவின்படி நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதன் முழுவிவரமும் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது
26 July 2017
TRB ANNOUNCED 1325 SPECIAL TEACHERS POSTS - NOTIFICATION
Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016
19 July 2017
PGTRB OFFICIAL ANSWER KEY PUBLISHED
Please click here for Tentative Key Answers
30 June 2017
1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் 1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 1,663 பணியிடங்களுடன் மொத்தம் 3,375 இடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும். தேர்வர்கள் தங்களுடன் கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டி கார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
16 June 2017
டிஆர்பி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குனர் நிலை - i பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குனர் நிலை - ஐ பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 02.07.2017 அன்று நடத்த உள்ளது. இத்தேர்வு எழுத 2,18,591 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (hall ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in/) பதிவிக்கம் செய்து கொள்ளாலாம். 16.06.2017 காலை 10.00 மணி முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
10 May 2017
TRB- PG POST- INSTRUCTIONS FOR ONLINE REGISTRATION பதிவு செய்வதற்கான அறிவுரைகள்
In order to register online for the Direct Recruitment of PG Assistants, the candidate has to visit the website http://trb.tn.nic.in.Read fully the instructions given therein and click Apply Now.The registration page opens up wherein, the candidate has to fill-in the online application form.முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழி விண்ணப்பத்தினை பதிவுசெய்ய தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.அங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து, அதன்பின் Apply Now -ஐ கிளிக் செய்யவும்.பதிவு செய்வதற்கான விண்ணப்ப பக்கம் திரையில் வரும், அதில் தேர்வர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.
9 May 2017
PG TRB அறிக்கை வெளியீடு. (Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015-2016 and 2016-17)
Notification English Download செய்ய CLICK HERE
Syllabus Download செய்ய CLICK HERE
Online Application Link செல்ல CLICK HERE








