t> கல்விச்சுடர் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்புகோரிக்கை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 January 2021

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்புகோரிக்கை



உயர்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டட வசதிக்கு ஏற்ப சுயற்சிமுறையில் மாணவர்களை வரவைத்து
சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிக்காட்டு நெரிமுறையோடு 25 மாணவர்கள் ஒரு அறையில் அமரும் விதமாக அறைகளில் இருக்கைகளை அமைக்க வேண்டும் , இட வசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் அதாவது காலை மற்றும் பிற்கல் இல்லையெனில் ஒருநாள்விட்டு ஒருநாள் மாணவர்களை வரவைக்க வேண்டும்

அரசு மேனிலைப்பள்ளிகளில் கண்டிப்பாக சுழற்சி முறையை கடைப்பிடித்தால் மட்டுமே சமூக இடைவெளியை கடைப்பிக்க முடியும் ஏனெனில் பெரும்பாலான பள்ளிகளில் அரசு அறிவித்திருப்பது போல் ஒரு அறையில் 25 மாணவர்களை அமரவைத்தால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இடவசதி போதுமானதாக இருக்காது , ஆதலால் அரசு மேனிலைப்பள்ளிகளில் சுழற்சி முறை முறையை கடைப்பிடிக்க வேண்டும் ,

அதாவது 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை ஒருநாளும் 10 ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களை அடுத்த நாளும் பள்ளிக்கு வரவைத்தால் வழிக்காட்டு நெறிமுறைப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கலாம் , அப்படி இல்லையெனில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை காலையிலும் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை பிற்பகலில் மாணவர்களை வரவைத்தால் தான் சமூக இடைவெளியை பிடிக்க ஏதுவாக இருக்கும் ஆதலால் சுழற்சி முறையில் மாணவர்களை வரவைக்க வேண்டுமென மாணவர்கள் நலன்கருதி தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்வதாக
சா.அருணன்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL