ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது பல்வேறு ஆசிரியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் இறுதியாக அளித்துள்ளது என்று கருதப்படுகிறது. எனவே இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது என்று கருதப்படுகிறது
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் எனும் பட்சத்தில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக மட்டும் தனியாக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது
அவ்வாறு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இரண்டு ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 4 தகுதித் தேர்வு நடத்தி தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களின் நலனை காக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 40 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை