தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும், இதுவரை இல்லாத அளவாக 7,819 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு, தமிழக அரசு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும். 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.