பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட 28 அறிவிப்புகளை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக முதல்வரிடம் நாளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். அறிக்கையை பரிசீலித்த பின்னர் முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார்.
மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. விருப்பமிருக்கும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம். குழந்தைகளுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது, அவர்கள் பள்ளிக்கு வருவதே சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியதன் பேரிலேயே கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன.
எனவே, பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கோவை மாவட்டத்தில் மிகவும் குறைவான மாணவர்களே வருகின்றனர்.
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 87% பேர் பள்ளிக்கு வந்துள்ளனர், குறைந்தபட்சமாக கோவை மாவட்டத்தில் 67% மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டபிறகு 83 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவக் கண்காணிப்பிலேயே உள்ளனர் என்று தெரிவித்தார்.