ஒவ்வொருத்தர் ஒவ்வொரு உணவு பழக்கத்தை கடைபிடிப்பார்கள். நான் போதுவாக கொடுக்கிறேன்.
காலை...எழுந்ததும் 2 டம்ளர் வெது வெதுப்பான தண்ணீர்.
அல்லது
டீ, காபி தவிர்த்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ (தேவைப்பட்டால் 1 ரஸ்க் அல்லது 1 மாரி பிஸ்கெட் உடன்).
காலை உணவு 7.30 - 8.30 க்குள்
ஆவியில் வேகவைத்த உணவு ஏதாவது ஒன்று இட்லி - 4 (பெரிய இட்லி என்றால் 2), / இடியாப்பம் - 2, / புட்டு - ஒரு கப் / சிறுதானிய உப்புமா.
அல்லது
தோசை - 2 எண்ணெய் சேர்க்காமல்
அல்லது
மல்ட்டிகிரெயின் பிரெட் அல்லது ஓட்ஸ் பிரெட் (கிரிஸ்பி டோஸ்ட் செய்யப்பட்டது)
அல்லது
வெஜிடபுள் சாண்ட்விச்
அல்லது முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் பயன்படுத்திச் செய்த ஆம்லெட்
அல்லது
கோதுமை ரவை கஞ்சி
அல்லது
கோதுமை ரவை உப்புமா
அல்லது
சப்பாத்தி - 2
(இவற்றுடன் ஒரு நாள் முளை கட்டிய பயறு, ஒரு நாள் இனிப்பு சேர்க்காத Fresh Juice போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்)
காலை உணவு பழக்கம் வீட்டிற்கு வீடு மாறும் அதனால் எல்லாம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளவும்.
காலை 11 மணிக்கு...
கீரின் டீ / Fresh Juice / Biscuits /
பச்சை காய்கறி சாலட் அல்லது ஆப்பிள், மாதுளை, பப்பாளிப் பழங்களில் ஏதேனும் 1 ஒரு கப் அளவு.
மதிய உணவு 12.30 - 1.30 க்குள்
4 சப்பாத்தியுடன், 2 கப் காய்கறி
அல்லது
1 கப் அரிசியுடன் 2 கப் காய்கறி, அசைவம் என்றால் குழம்பில் போட்ட கறி இரண்டு துண்டுகள் 100 கிராம் அளவு (பொரித்த கறி மற்றும் வகைகளை தவிர்க்கவும் காய்கறிகள் என்றால் கிழங்கு கூடாது. தேங்காய் மற்றும் எண்ணெய் சேர்த்ததைத் தவிர்க்கவும், கூட்டாகவோ, பொரியலாகவோ சாப்பிடலாம். பாதி உப்பு மட்டும் சேர்த்துக் கொள்ளவும்)
அளவுக்காக கப் என்று சொல்லப்பட்டுள்ளது, சாதத்தை விட காய்கறி அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
மாலையில்... 4 மணிக்கு
1 கப் டீயுடன் 2 பிஸ்கெட் அல்லது 60 கிராம் சுண்டல்.
சுண்டல் போடும்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பயிறு சாப்பிடும்படி போடவும்.
இரவு உணவுக்கு 7 -8 க்குள்
காய்கறி சூப் அல்லது காய்கறி சாலட் அல்லது பழம்
அல்லது
2 தோசை பச்சைப் பயறு தோசை / உளுந்து தோசை / கோதுமை தோசை ஏதாவது ஒரு வகை அல்லது 2 புல்கா (எண்ணெய் இல்லாத சப்பாத்தி) உடன் காய்கறி.
படுக்கப் போகும் முன்...
கொழுப்பு நீக்கிய பால் 100 மி.லி. (கால்சியம் தேவை இருப்போருக்கு மட்டும்).
இவை தவிர...
√ 100 மி.லி. தயிரை தண்ணீர் விட்டுக் கடைந்து 1 லிட்டர் மோராக்கிக் கொண்டு, காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்.
√ 1 லிட்டர் எலுமிச்சைச்சாற்றை (மிதமான உப்பு சேர்த்தது) நாள் முழுவதும் குடிக்கலாம் (அசிடிட்டி பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கவும்).
√ தினம் 1 இளநீர் குடிக்கலாம். (நீரிழிவு இருப்போர் தவிர்க்கவும்).
* மேற்கூறிய உணவுப் பட்டியல் ஓரளவு எடை குறைக்க உதவும் என்றாலும், உடற்பயிற்சி என்பதும் மிகமிக அவசியமானது. இந்த உணவு முறையுடன் தினமும் அரை மணி முதல் 45 நிமிடங்கள் வரை நடப்பது கூடுதல் பலன் தரும்.
* சாப்பாட்டு அளவைக் குறைக்கிறதால எடை குறைஞ்சிடும்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. உண்மையில் டயட்டுங்கிறது வயசு, உடல்வாகு, அவங்களோட வேலையின் தன்மைனு பல விஷயங்களைப் பொறுத்தது.
√ அதிக இரத்த அழுத்தம் அல்லது நீரழிவு நோய் உள்ளவர்கள் குறைந்த உப்பு பயன்படுத்தும் டயட் திட்டத்தை தேர்வுசெய்யலாம்.
√ முதலில் கஷ்டமாக இருக்கும் அப்புறம் பழக்கமாகிடும். படிப்படியாக அமல்படுத்துங்கள் முதலில் காலை உணவு அது பழகியபின் மதிய உணவு அதன் பின் இரவு உணவு.
√ வாரம் 12 வேளை சிறுதானிய உணவு உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமாக வைக்கும்.