t> கல்விச்சுடர் பப்பாளி நன்மைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 November 2022

பப்பாளி நன்மைகள்

பப்பாளியை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடிங்க! இந்த அற்புத நன்மைகள் கிடைக்கும். நாம் விரும்பி உண்ணும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். இந்த பழத்தில் இதய நலன், ஜீரண மண்டலம், புற்றுநோய் எதிர்ப்பு பண்பு என பலவிதமான ஆரோக்கிய கூறுகள் உள்ளன. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பப்பாளியை தண்ணீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் உடலுக்கு வந்து சேர்கின்றது. அவை என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம். எப்படி எடுத்து கொள்ளலாம்? ஒரு முழு பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்த பப்பாளி பழம் மற்றும் தண்ணீரை குளிர வைத்து விட்டு தண்ணீர் போல குடிக்கலாம். எப்போது குடிக்கலாம்? காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் உங்களது குடலை அது சுத்தப்படுத்தும். மேலும், குடலில் உள்ள நச்சுத்தன்மைகளையும் அது நீக்கிவிடும். இந்த தண்ணீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். நன்மை பப்பாளியை சூடுபடுத்தி அந்த தண்ணீரை குடிக்கும் போது கிடைக்கும் லைகோபேன் பலவிதமான புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கும், இதய நலனை காப்பதற்கும், நரம்பு மண்டலங்களுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL