10, +1, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
10, 11, 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதன்படி, மார்ச் 6-ல் தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த செய்முறைத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்கும், செய்முறைத் தேர்வுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே நடத்த திட்டம் என தகவல் வெளியகியுள்ளது. இதனால் செய்முறைத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்குமாறும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கூறுகையில், 10, 11, 12- ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மார்ச் 1 முதல் 9-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.