t> கல்விச்சுடர் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் - பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 February 2023

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் - பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 3 பேர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் 6 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில் நிதித்துறை செயலாளரை தலைவராக கொண்டு, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவினர் இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அரசிடம் சமர்ப்பிப்பார்கள் என்றும், அந்த அரசாணையின் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாணை Download செய்ய Click Here

JOIN KALVICHUDAR CHANNEL