*பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile -இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும்.
*எனவே, தங்கள் பிறந்த நாள், பணியமர்த்தப்பட்ட நாள், பள்ளியில் சேர்ந்த நான், பணிபுரியும் பள்ளி / அலுவலகம், பதவி, பாடம், கைபேசி எண், IFHRMS ID போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் EMIS profile -இல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
*திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை / சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி திருத்தங்களை மேற்கொள்ளவும். குறிப்பாக நியமன வகையில் ( NATURE OF APPOINTMENT) ல் ரெகுலர் என்று இருப்பதை உறுதி செய்யவும்.
*விரைவில் இந்த தகவல்களை மாற்றம் செய்ய முடியாதவாறு முடக்கப்படும் (Freezing). அதன் பிறகு மாற்றம் செய்ய இயலாது. எனவே விரைவில் கவனமுடன் இந்த தகவல்களை சரிபார்த்து உறுதிபடுத்தி கொள்ளவும்.