நமது பள்ளி நமது பெருமை
அரசுப்பள்ளி நம்பள்ளி....!
சேர்த்திடுவோம் நம் குழந்தைகளை நமது அரசுப்பள்ளிகளில்.!நம் அரசுப்பள்ளிகளில்
குழந்தைகளைச் சேர்ப்பதால் கிடைக்கும் பெரும் பயன்கள் அதனால் நம் பிள்ளைகளுக்கு கிடைக்குமே பெருத்த நன்மைகள்! வாருங்கள் நம் அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்திடுவோம் அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற்றிடுவோம்!
நம் அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான
மாணவர்கள் சேர்க்கை செய்திடுவோம்! பள்ளி மாணவச்செல்வங்களின் கற்றல் திறன் & கலை இலக்கிய பண்பாட்டு திறன்களை உயர்த்திடுவோம்!
அரசுப் பள்ளியில் பயலும் மாணவச்செல்வங்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள்:-
முற்றிலும் கட்டணமில்லா கற்றல் திறன் மேம்பாடு & கலைப்பண்பாட்டை வளர்க்கும் பல்வேறு கல்வித்திட்டங்கள்
1,2,3 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்து திட்டம்.
4 & 5 வகுப்புகளுக்கான கற்றல் இடைவெளி போக்க எண்ணும் எழுத்தும் திட்ட விரிவாக்கம்.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில்
20% முன்னுரிமை இட ஒதுக்கீடு.
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஓமியோபதி மருத்துவம், சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில
7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு.
பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை உதவித்தொகை.
6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச தற்காப்பு பயிற்சி.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 உதவித்தொகை.
ஆதிதிராவிட நலத்துறை சார்பாக மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500,
ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000,
ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 உதவித்தொகை
வருவாய் குறைந்த அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் 8 ஆம் வகுப்பில் NMMS & 9 , 10 வகுப்பில் தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 உதவித்தொகை.
விலையில்லா புத்தகங்கள் ,
விலையில்லா குறிப்பேடுகள்,
விலையில்லா சீருடைகள்4 செட்,
விலையில்லா புத்தகப்பை,
விலையில்லா காலணிகள்,
வண்ண பென்சில்கள்,
கணித உபகரணப் பெட்டி,
புவியியல் வரைபட நூல். 1,2,3 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடுகள்.
தினந்தோறும் முட்டையுடன் சத்துணவு. & ஜூன் மாதம் முதல் காலை உணவு.
இலவச பேருந்து பயண அட்டை ,
விலையில்லா மிதிவண்டி,
விலையில்லா மடிக்கணினி.
கலை பண்பாடு வளர்க்கும் போட்டிகள்.
போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வட்டார, மாவட்ட அளவிலான பாராட்டுச்சான்றிதழும் பரிசுகளும். மாநில வெற்றியாளர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா.
விளையாட்டுப்போட்டிகள். சதுரங்கம் தனிப்பயிற்சிகள். மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வுகள்.
ஆண்டுக்கு இருமுறை மருத்துவ பரிசோதனைகளும் , ஆலோசனைகளும் & வாரந்தோறும் சத்து மாத்திரைகள்.
அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் & பொது அறிவுத்திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ் & கனவு ஆசிரியர் இதழ்.
நூலகம் புத்தக பயன்பாடுகள், கணினி ஆய்வகம் மூலமாக தேர்வுகள். இளம் அறிவியல் விஞ்ஞானிகளுக்கான போட்டிகள்.
பல்வேறு மன்ற செயல்பாடுகள். மாதம் ஒரு விழா நிகழ்வுகள். மாதம் ஒருமுறை பள்ளி வளர்ச்சிக்கான SMC & பெற்றோர்களின் கூட்டம்.
இவையனைத்தும் நம் அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும் பொக்கிஷங்கள். இவையெல்லாம்
" அரசுப்பள்ளி பெருமையின் அடையாளங்கள்"....
அன்பான பெற்றோர்களே,
தங்கள் குழந்தைகளை நமது அரசுப்பள்ளிகளில் சேர்த்திடுவீர்
இவர்களின் வளமான எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமிடுவீர்.....