இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
தேசிய அளவில் 11.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி
தமிழக மாணவர்கள் 78 ஆயிரத்து 693 பேர் தேர்வு
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண்சக்கரவர்த்தி ஆகியோர் 99.9% மதிப்பெண் பெற்று கூட்டாக தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர்.
தொடர்ந்து, முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் 1,44,516 பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர்.