t> கல்விச்சுடர் கல்விச்சுடர்: WHATSAPP . -->

Now Online


Recent Posts Widget
Showing posts with label WHATSAPP. Show all posts
Showing posts with label WHATSAPP. Show all posts

29 May 2021

வாட்ஸ்ஆப் புதிய விதிகள் என்று பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்


வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்களுக்கு இனி மூன்று டிக் வரும், வாட்ஸ்ஆப்பில் நாம் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்ற தகவல்கள் அனைத்தும் பொய்யான தகவல்கள்.
 அதாவது, கடந்த சில நாள்களாக, நாளை முதல் வாட்ஸ்ஆப் செயலியில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன என்று கூறி, கீழ்க்கண்ட இந்த தகவல்கள் வேகமாகப் பரவி வருகிறது. இதில் எதிலும் உண்மையில்லை என்பதுதான் உண்மை.
 
 அதாவது, அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். பதிவான அழைப்புகள் அனைத்தும் சேமிக்கப்படும். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படும் என்பது முதல்.. 
  தகவல் அனுப்பினால் ஒரு டிக் தகவல் சென்று சேர்ந்துவிட்டால் இரண்டு டிக் என்ற தகவல்கள் மற்றும்
 தகவலுக்கு மூன்று சிவப்பு டிக் வந்தால் அதன் மீது அரசு நடவடிக்க எடுக்கிறது, விரைவில் நீதிமன்ற சம்மன் வரும் என்பது வரை அனைத்தும் தவறான தகவல்கள். இதில் எந்த அளவுக்கும் உண்மையில்லை.
 வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அனைவருக்கும், ஒரு விஷயம் மட்டும் உண்மை. இவ்வாறு வரும் அனைத்துத் தகவல்களும் பொய். வாட்ஸ் ஆப் அழைப்புகளையோ, தகவல்களையோ மத்திய அரசு கண்காணிக்காது. இது எப்போதும் அனுப்புனர் மற்றும் பெறுநருக்கு மட்டுமே தெரிந்த தகவலாகவே இருக்கும். அழைப்பாகவே இருக்கும்.
 புதிய தகவல்தொழில்நுட்ப சட்டம் 2021- இதுபோன்ற போலியான தகவல்களை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பொய்யான தகவல் பரப்பப்படும்போது, அந்த பொய்யான தகவலை முதல் முதலாக பரப்பியவர் யார், அந்த தகவலை உருவாக்கியவர் யார் என்பதை கண்டறிய அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால், அதுபோன்ற அனுமதியை வழங்க முடியாது என்றும், இது எங்கள் பயனாளர்களின் தனியுரிமையை பாதிக்கும் என்றும் கூறி, வாட்ஸ்ஆப் நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
 ஆனால் அதற்குள் நாளை முதல் புதிய விதிகள் என்ற ஒரு பொய்ச் செய்தி வாட்ஸ்ஆப்பில் வலம் வரத் தொடங்கிவிட்டது. அதையும் உண்மையா என்பதை அறியாமலேயே சிலர் பலருக்கோ அல்லது சிலருக்கோ ஃபார்வேர்ட் செய்துகொண்டிருக்கிறார்கள்.
 எனவே, வாட்ஸ்ஆப்பில் எந்தத் தகவல் வந்தாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்படியே ஃபார்வேர்ட் செய்யும் பழக்கத்தை கைவிடுவதே ஆகச் சிறந்த செயலாகும்.  

26 April 2021

வாட்ஸ்ஆப்பில் செய்திகளை மறைய வைக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

 

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும்/பெறப்படும் செய்தியை மறைய வைக்கும் வசதி அறிமுகமாகவிருக்கிறது. 

அதாவது ஒருவருக்கு அனுப்பும் செய்தியை அல்லது ஒருவரிடம் இருந்து பெறும் செய்தி மறைந்துபுகும். இதற்கான கட்டுப்பாடு பயனர்களின் கையில் இருக்கும். ‘Disappearing Messages’ என்ற வசதியை பயன்படுத்தி செய்திகளை மறைய வைக்கலாம். இதில் ‘7 நாள்கள்’ என்ற வசதி தற்போது உள்ளது. அதாவது நீங்கள் அனுப்பும் அல்லது பெறப்படும் செய்தி 7 நாள்களில் மறைந்துபோகும். 

இந்நிலையில், இத்துடன் ’24 மணி நேரம்’ என்ற நேர கட்டுப்பாட்டை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த உள்ளது. 

இதன்படி பயனர், ‘Disappearing Messages’ வசதியை ‘ஆன்’ செய்து, ’24 மணி நேரம்’ என்பதை தேர்வு செய்தால் நீங்கள் அனுப்பும்/பெறப்படும் செய்தி அடுத்த 24 மணி நேரத்தில் மறைந்து போய்விடும். ஆனால், அது மறைவதற்கு முன்பாக ஸ்கீரீன் ஷாட் எடுத்து சேமிக்க முடியும். 

24 மணி நேரத்தில் செய்திகள் மறைந்துபோகும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. 

வாட்ஸ்ஆப்பில் ஏதேனும் ஒரு தொடர்பை(Contacts) தேர்வு செய்து, மேலே தொடர்பை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த நபரின் விவரங்களுக்கு கீழே  ‘Disappearing Messages’ வசதி இருக்கும். இதனை ‘ஆன்’ செய்து செய்திகள் மறையும் இந்த வசதியை பயன்படுத்தலாம். 

12 January 2021

"வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது" - வாட்ஸ் அப் விளக்கம்


வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் - வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்

நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது

வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்

 பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம்

பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும்

என வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.








9 January 2021

வாட்ஸ் அப்பில் உங்கள் தகவல்களை பாதுகாக்க.



ஒன்றல்ல.. இரண்டல்ல...700 மில்லியன் பயனர்களை கொண்ட வாட்ஸ் அப் மேசேஜிங் சர்வீஸ்.  

இதில் அதிக பயன்கள் இருப்பினும், சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

7 January 2021

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பாலிசி - பாதுகாப்பானதா? வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பாலிசி கொள்கைகளை வெளியிட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆப்பில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்படுவது வழக்கம். அதனுடன் Privacy policy-ம் கொடுக்கப்பட்டிருக்கும். பிரைவசி பாலிசியை படிக்காமலேயே பெரும்பாலானோர் உடனடியாக Accept கொடுத்து விட்டார்கள். அந்தவகையில் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அதன் பிரைவசி பாலிசியை மாற்றியுள்ளது. இதனை படித்து பார்த்தவர்கள் அனைவரும், இனி வாட்ஸ் அப்பில் நமது தகவல்கள் பாதுகாப்பாக இருப்பது கேள்விக்குறிதானா என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இதில் மேலும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த பிரைவசி பாலிசியை Accept செய்வதை விட்டால் உங்களுக்கு வேறு வழி இல்லை. இல்லையென்றால் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியாமல் போகும். மீடியா ஃபைல்களை தங்கள் சர்வர்களில் வாட்ஸ் அப் எப்படி ஸ்டோர் செய்யப் போகிறது என்பதையும் இந்த பாலிசி விளக்கியுள்ளது.


இதுமட்டுமல்லாமல் அந்நிறுவனம் தகவல்களை ஃபேஸ்புக் உடன் பகிரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் மொபைல் எண், சேவை தொடர்பான தகவல்கள், Mobile device தகவல்கள், IP address உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் அப்பால் சேமித்து வைக்கப்பட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்படும். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் மட்டுமே பிரைவசியில் இருக்க வாய்ப்புள்ளது என்பது இதில் தெரிகிறது. முன்னர் இருந்ததை போல Encrypted வடிவில்தான் இந்த தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படவிருக்கின்றன. அதேபோல் நீங்கள் ஃபார்வேர்டு செய்யும் மெசேஜ்களையும் வாட்ஸ் அப் கண்காணிக்கவிருக்கிறது. போலி தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


இதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட அப்டேட்டில், வாட்ஸ் அப் தகவல்களை பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்ய அனுமதி அளிப்பதற்கான ஆப்ஷனை நீங்கள் வேண்டுமென்றால் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் இந்த முறை நீங்கள் Accept செய்வதை விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை. இந்த பிரைவசி பாலிசிக்கு எதிர்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.


பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?


இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்.


1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.


அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.


(For Ex.) எடுத்துக்காட்டாக

நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை (Message) WHATSAPP நிறுவனம் எடுத்து FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின் வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.


2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில் (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.


3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.


அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.


(For Ex.)எடுத்துக்காட்டாக


உங்களுடைய Location யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும்.


Location மட்டும் அல்ல உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message


(குரல் செய்தி )யும் கூட சேகரிப்பார்கள்


4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது .



அது WHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும்.


30 நாட்களுக்குப் பின் நீக்கப்படும்.


5.WHATSAPP நிறுவனம் உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால்


நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும்


என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal ) உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள்.


உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.


6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.



நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.



31 December 2020

இன்று நள்ளிரவு முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது!



  iOS 9 மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றுக்கு குறைவான இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களில்  (இன்று நள்ளிரவு) ஜனவரி 1ஆம் தேதி  முதல்  வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இந்த இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனடியாக தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும். இல்லை என்றால் தற்போதுள்ள இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL