வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வடகோட்ட தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் க.குரு நாதன் கூறியுள்ளார்.
பூங்காநகர் தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு, அரும்பாக்கம், அயனாவரம், சென்னை மருத்துவ கல்லூரி வளாகம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் சாலை, பூக்கடை சாலை, புனித ஜார்ஜ் தபால் அலுவலகம், ஸ்டான்லி மருத்துவமனை, ஐகோர்ட்டு, ஐ.சி.எப்., பெரியார் நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, மண்ணடி, மின்சார வாரியத்தில் உள்ள தபால் அலுவலகம், மிண்ட் பில்டிங், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர், ரிப்பன் பில்டிங், ராயபுரம், செம்பியம், ஷெனாய்நகர், சவுகார்பேட்டை, வெங்கடேசபுரம், வேப்பேரி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் இந்த சேவைகள் அளிக்கப்படுகிறது.
இதில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது என்று கூறியுள்ள க.குருநாதன், ஏற்கனவே உள்ள ஆதார் விவரங்களை ரூ.30 செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
20 May 2018
தபால் அலுவலகங்களில் ஆதார் சேவைரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்
23 April 2018
மின்னணு வடிவில் ஆதார் அட்டை
முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டையை ‘இ – -ஆதார்’ எனும் மின்னணு வடிவிலும் பயன்படுத்தலாம். இ – -ஆதார் மின்னணு வடிவ அட்டையை இதன் அதிகார பூர்வ இணையதளம் மூலம் டவுண்லோடு செய்யலாம்.
பெயர், முகவரி, 12 இலக்க எண் உள்ளிட்டவற்றை கொண்ட ஆதார் அட்டை, முக்கிய அடையாள ஆவணமாக திகழ்கிறது.
பல சேவைகளை பெற ஆதார் அட்டை அவசியமாகிறது.எனினும், சில நேரங்களில் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை மறந்து வைத்துவிடலாம்.
இது போன்ற நேரங்களில், மின்னணு வடிவிலான இ – -ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.இந்த மின்னணு வடிவிலும் பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் 12 இலக்க எண் இடம் பெற்றிருக்கும்.
இவற்றுடன் இதை டவுண்லோடு செய்த நாள் மற்றும் ஆதார் எண் உருவாக்கப்பட்ட நாள் ஆகிய விபரம் இடம் பெற்றிருக்கும்.
இந்த மின்னணு வடிவ ஆதார் அட்டையையும், தேவையான இடங்களில் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம். இ – -ஆதார் அட்டையை, யூ.ஐ.எ.டி.ஐ., அமைப்பின் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
யூ.ஐ.எ.டி.ஐ., இணைய தளத்தில் (eaadhaar.uidai. gov.in/) இதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதார் எண், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சமர்பிக்க வேண்டும். இதன் பிறகு பதிவு செய்த மொபைலுக்கு ஒருமுறை பாஸ்வேர்டு வரும். அதை உள்ளீடு செய்து இ- – ஆதார் ஆவணத்தை பெறலாம்.
18 April 2018
ஆதார் தகவலை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
ஆதார் அட்டை வழங்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்மையில், பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், முகநூலைப் (ஃபேஸ்புக்) பயன்படுத்தியவர்களின் தகவல்களை முறைகேடாகப் பெற்று பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆதார் அட்டை வழங்கும் திட்டம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனிநபர் உரிமைகளுக்கு எதிரானதா? என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தைச் சுட்டிக்காட்டி ஆதாருக்காக பெறப்படும் தகவல்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) மற்றும் குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி கூறியதாவது:
கேம்பிரிட்ஜ் அனல்டிகா பிரச்னையுடன் ஆதாரை ஒப்பிட வேண்டாம். ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களைப் போல ஆதார் அமைப்பு, தனிநபர்கள் தங்களிடம் அளிக்கும் விவரங்கள் எதையும் ஆராய்வதும் இல்லை, பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதும் இல்லை. மேலும், ஆதார் சட்டத்தின்படி பொதுமக்களிடம் இருந்து பெறும் தகவல்களை ஆய்வு செய்யவும் முடியாது. ஒரு நபரிடம் இருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் அடையாளம் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர் அந்த நபர்தானா? இல்லை வேறு நபரா? என்று அடையாளம் காணமட்டுமே ஆதாரின் போது பெரும் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
இதையடுத்து, அரசுப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாது பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஆதார் தகவல்களை பயன்படுத்த அனுமதிப்பது ஏன்? என்று நீதிபதிகள் அடுத்த கேள்வியை எழுப்பினர். இதற்கு 'டீ விற்பவர்கள், வடை விற்பவர்களுக்கெல்லாம் ஆதார் தகவல்களை உறுதிப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படுவதில்லை. சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற சில நிறுவனங்கள் மட்டுமே ஆதார் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையிலும் முதலீடு செய்துள்ளன. சில நேரங்களில் தனியார் நிறுவனங்கள் அரசு சார்ந்த பொது விஷயங்களில் பணியாற்ற நீதிமன்றமே அனுமதி அளித்துள்ளது.
ஒரு காலத்தில் ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர், தனது நாட்டு மக்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று தனித்தனியாக அடையாளம் காண அட்டை வழங்கினார். ஆனால் ஆதார் அட்டைக்காக மதம், ஜாதி, மொழி, இனம் என்ற எந்த விவரத்தையும் நாம் கோரவில்லை. எனவே, ஆதாருக்கு எதிராக தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம்' என்று ராகேஷ் பதிலளித்தார்.
1 April 2018
பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் - மத்திய அரசு
சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வெளியாகும்வரை பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இணைப்பிற்கான புதிய அவகாச தேதி கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைக்க அவகாசம்
27 March 2018
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு : ஜூன் 30 வரை நீட்டிப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது.இந்நிலையில்அதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
7 March 2018
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க... 31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வரும் 31ம் தேதிக்கு பின்னரும், செல்போன், வங்கிக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு நீட்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, கன்வில்கர், சந்திராசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் கே.ேக.வேணுகோபால், ‘‘கடந்த காலத்தில் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரையில் காலக்கெடுவை நீட்டித்துள்ளோம். அதேபோல், இம்முறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், இம்மாத இறுதியில்தான் அதை அறிவிக்க முடியும்
இதன் மூலம் மனுதாரர்கள் தங்கள் இறுதிவாதத்தை முன்வைக்க முடியும்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘அட்டர்னி ஜெனரல் சிறப்பான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் மூலம் மனுதாரர்கள் மீண்டும் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க முடியாது’’ என்றனர்.
இம்மாதம் 31ம் தேதிக்குள் செல்போன், வங்கிக் கணக்குகள், கேஸ் இணைப்புகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் ஆதாரை இணைக்காத ஏராளமானவர்கள் நிம்மதி மூச்சு விடலாம்.
5 March 2018
மார்ச் 31 தான் கடைசி நாள்! மறந்திடாதிங்க....!!
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும். இதுவரை 87 கோடி வங்கிகணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டதாக ஆதார் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.
ஆதார் அட்டை
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கியாஸ் மானியம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி கணக்கு, ‘பான்கார்டு’ செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
80 சதவீத வங்கி கணக்குகள்
அந்த வகையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் இம்மாதம்(மார்ச்) 31-ந்தேதி ஆகும். மேலும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கும் இதுவே கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில், நாட்டின் ஒட்டு மொத்த வங்கி கணக்கு களில் 80 சதவீத வங்கி கணக்கு களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதாக ஆதார் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நாட்டில் சுமார் 109.9 கோடி வங்கி கணக்குகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. அதில் 58 கோடி வங்கி கணக்குகளுக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டன” என்றார்.
85.7 கோடி செல்போன் எண்கள்
இதுகுறித்து ஆதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் புஷ்கான் பாண்டே கூறுகையில் “80 சதவீத வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்டது. எஞ்சி உள்ள வங்கி கணக்குகள் கூடிய விரைவில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம்” என கூறினார்.
அதே போல் இந்தியா முழுவதும் இணைப்பில் உள்ள 142.9 கோடி செல்போன் எண்களில், 85.7 கோடி செல்போன் எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்டதாகவும் ஆதார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
9 February 2018
8 February 2018
மத்திய அரசின் அடுத்த அதிரடி: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க முடிவு
மத்திய அரசின் அடுத்த அதிரடி: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க முடிவு வெங்கட சேது.சி
வங்கி மற்றும் வருமானவரி கணக்கு எண் ஆகியவற்றைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு எண் மற்றும் வருமான வரி கணக்கு எண்ணுடன் இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. முறைகேடுகளைத் தடுப்பதற்காக, இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது.
வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்ஷூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட், தபால்துறை திட்டங்கள், செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு அடையாள ஆவணங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வாகன ஓட்டுநர் உரிமத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க தற்போது மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் போலி ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என மத்திய அரசு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
7 February 2018
உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!
இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.
1)
👇
முதலில் இதை கிளிக் செய்து கொள்ளவும்
பின்பு
2) 'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.
4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.
5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.
6) இந்தப் பக்கத்தில் Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)
7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்
8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)
9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.
10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும்.
ஒருவேளை, எந்த டிரான்ஸாக்ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.
15 January 2018
119 கோடி ஆதார் அட்டை தாரர்களின் முகங்களை மீண்டும் ‘ஸ்கேன்’ செய்ய திட்டம்!
ஆதார் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆதார் அட்டைதாரர்களின் முகத்தையும் ஸ்கேன் செய்ய ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 119 கோடி பேருக்கு மேல் ஆதார் எண் வழக்கப்பட்டுள்ளது. வங்கி பரிவர்த்தனை, ரேசன் கார்டுகள், டெலிபோன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆதார் எண் விபரங்கள் வெளியானது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரின் முகத்தையும் கூடுதல் அடையாளச் சான்றாக பதிவு செய்ய ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கும் எனவும் முகம் பதிவு செய்யப்படும்போது கைரேகை, கருவிழி அல்லது மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 November 2017
ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆதார் அடையாள அட்டையின் ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதியை மீறி அரசு இணையதளங்கள் செயல்பட்டுள்ளனவா என்ற கேள்வி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு ஆதார் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்திய தனித்துவ அடையாள அங்கீகரிப்பு ஆணையம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், ‘‘பயனாளிகள் என்ற வகையில் ஆதார் அடையாள அட்டைதாரர்களின் பெயர்கள், முகவரிகள் மத்திய, மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இது விதிமீறல் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இணையதளங்களில் இடம் பெற்றிருந்த ஆதார் தகவல்கள் நீக்கப்பட்டு விட்டன’’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘‘எங்கள் மூலமாக ஆதார் தகவல்கள் ஒருபோதும் அம்பலப்படுத்தப்பட மாட்டாது’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 November 2017
செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கப் புதிய சேவை அறிமுகம்.. இது ரொம்ப ஈசி..!
அனைத்து சேவைகளிலும், மானிய திட்டத்திலும் ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தி வரும் மத்திய அரசு, செல்போன் எண் உடனுடம் கட்டாயமாக ஆதாரை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்காகச் செல்போன் பயன்படுத்தும் அனைவரும் செல்போன் ஆப்ரேட்டர்களின் கடைக்குச் சென்று இதனை இணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இது மக்களுக்கும் மிகவும் கடுமையாக இருக்கும் காரணத்தால் இணைப்பத்தில் மக்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனை எளிமைப்படுத்தவே புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அமைப்பு
ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி கொண்டு செல்போன் எண்ணை இணைக்கும் ஒரு திட்டத்தை ஆதார் அமைப்பான UIDAI-யிடம் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்கள் சமர்ப்பித்தது .
ஒப்புதல்
இதற்கு ஆதார் அமைப்பு, டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை மற்றும் முழுமையான விளக்கம் கேட்டு, பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் எளிமையான முறையான முறையில் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என UIDAI அமைப்பின் தலைவரான அஜய் பூஷன் பான்டே கூறியுள்ளார்.
எளிமையான வழக்கம்..
ஆதார் தளத்தில் இருக்கும் மொபைல் எண்கள் அனைத்தையும் இப்புதிய சேவையின் மூலம் இணைத்துக்கொள்ள முடியும். இதனால் மக்கள் செல்போன் ஆப்ரேட்டர்கள் கடைக்குச் செல் வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3 முறைகள்
அதேபோல் டெலிகாம் துறை, டெலிகாம் நிறுவனங்களின் வாயிலாக மொபைல் எண் மற்றும் ஆதார் இணைப்பை எளிமைப்படுத்த, 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1. எஸ்எம்எஸ் வாயிலான ஓடிபி
2. ஐவிஆர்எஸ் முறை
3. டெலிகாம் சேவை நிறுவனங்களின் செயலிகள், வாயிலாக வெரிபிகேஷன் செய்துகொள்ளலாம்.
டிசம்பர் 1
ஓடிபி மற்றும் ஐவிஆர்எஸ் வாயிலான வசதிகள் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 6, 2018
மொபைல் எண் உடன் ஆதார் இணைக்க 2018ஆம் ஆண்டுப் பிப்ரவரியே கடைசித் தேதி. ஆகவே செல்போன் பயன்படுத்தும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை மறக்காமல் இணைத்துவிடுங்கள்
கடைசித் தேதி
அதேபோல் வங்கி கணக்கு, பான் எண், இன்சூரன்ஸ், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு, ஆகியவற்றுடன் டிசம்பர் 31க்குள் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்.




