| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
9 March 2023
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா? அதுக்கு முன்னாடி இதை படிச்சிட்டு போங்க
13 July 2021
நீட் தேர்வில் அதிரடி மாற்றம்
7 July 2021
செப்டம்பர் 5ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது
6 July 2021
2021ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
10 June 2021
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைத்து முதல்வர் உத்தரவு
10 April 2021
தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது - தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்
18 January 2021
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீக்சா கைது
31 October 2018
நீட்' தேர்வு: பதிவு நாளை துவக்கம்!

சென்னை, பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை துவங்குகிறது.
பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி
வந்தது.ஆனால், பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் காரணமாக, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ.,விடம், தேர்வு நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
என்.டி.ஏ., சார்பில், நீட் தேர்வுக்கான அட்டவணை, செப்., மாதமே அறிவிக்கப்பட்டது.
2019 மே, 5ல் நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வின் முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, தமிழ் உள்பட, 10க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நாளை துவங்க உள்ளது. என்.டி.ஏ.,வின்,www.nta.ac.inஎன்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம். நாடுமுழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்கு, 'ஆதார்' கட்டாயம் இல்லை என,
அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நீட் தேர்வு குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி வினாத்தாள்களில், மொழிமாற்றம் உள்ளிட்ட பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும். அதன் அடிப்படையிலேயே திருத்தம் செய்யப்படும்' என, தெரிவித்துள்ளார்
17 October 2018
நீட் தேர்வு பயிற்சி மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
*நீட் தேர்வு பயிற்சி மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சி வகுப்புக்கு வர அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து முதுகலை ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
13 October 2018
நீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
*மதுரையில் நீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது
*பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக சனி, ஞாயிறு அன்று 15 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்
*இவர்களுக்கு பாடம் வாரியாக ஒரு மையத்தில் தலா 5 முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது
*இதற்காக ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்ஒதுக்கீடு செய்யசி.இ.ஓ., கோபிதாஸ் உத்தரவிட்டார்
*செப்., 24 - 28 வரை நடந்த பயிற்சிக்கு 60 ஆசிரியர்கள் வரவில்லை
*ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ கோபிதாஸ்நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
28 September 2018
24 September 2018
20 September 2018
காலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.
இதற்கு, தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களால், தனியார் மையங்களில் சேர முடியவில்லை.எனவே, இவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், 412 மையங்களில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
அந்த, 10 நாட்களும், நீட் சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், நீட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 6,000 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், காலாண்டு தேர்வு விடுமுறையில், நீட் பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது
18 September 2018
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
*நீட் பயிற்சி அளிக்க புதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்
*தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்காக, அரசு சார்பில் ஒன்றியத்திற்கு ஒரு பயிற்சி மையம் வீதம் அமைத்து, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது
*விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல், இயற்பியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது
*இந்நிலையில், நீட் பயிற்சி அளிக்க புதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, இரண்டு பள்ளிகளிலும் 200 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
*இது குறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிறு கிழமைகளில் நடத்தப்படுகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி கல்வித்துறை ஈடுபடுத்தி வருகிறது
*இதனால், ஆசிரியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் பயிற்சி அளிக்க புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்க நிர்பந்தம் செய்தால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மாட்டோம்' என தெரிவித்தார்
15 September 2018
'நீட்' பயிற்சி: ஆசிரியர்கள் நிம்மதி
'நீட்' வகுப்புக்கு சுழற்சி முறையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், வகுப்பு எடுப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க, இன்று, நீட் பயிற்சி வகுப்பு துவங்குகிறது. வார இறுதி நாட்களில் நடக்கும், இவ்வகுப்புக்கு பயிற்சி அளிக்க, ஒரு பாடத்துக்கு, 30 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர்; இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனால், பள்ளிகளில் வகுப்பு கையாள்வதில், சிக்கல் இருப்பதாக புகார் எழுந்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், நீட் வகுப்பு பயிற்சி முறையில், மாற்றம் செய்ய வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நேற்று ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, மைக்கேல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில், ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
தாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட, பாடங்கள் கையாளும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பாடவாரியாக ஆய்வு நடந்தது.
சந்தேகங்களுக்கு மட்டும் விளக்கம்!
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீட் வகுப்பு கையாள, பழைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வகுப்பு எடுக்கும் போது, பணிச்சுமை இருக்காது. குறிப்பாக ஒரு மையத்துக்கு, ஒரு பாடத்துக்கு எட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்கைக்கோள் மூலம், சென்னையில் இருந்து, பாட வல்லுனர்கள் வகுப்பு நடத்துவர். வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடக்கும் வகுப்பில், ஏற்படும் சந்தேகங்களை மட்டும், ஆசிரியர்கள் நிவர்த்தி செய்வர்' என்றனர்.
Source: Dinamalar
11 September 2018
நிபந்தனை அடிப்படையிலேய நீட் பயிற்சி பெறுவோம்: ஆசிரியர்கள் பிடிவாதம்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் நிபந்தனை அடிப்படையிலேயே தாங்கள் பயிற்சி பெற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என்று கூறி உள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் 412 மையங்கள் செயல்பட உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு 12 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 4800 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர். அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மொத்தம் 36 வாரம், விடுமுறை நாள்களில் நடைபெறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதைய்டுத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், விடுமுறை நாள்களில் ஆசிரியர்களைப் பயிற்சி வழங்கச் சொன்னால், அவர்களுக்கு ஓய்வு கிடைக்காத சூழல் ஏற்படும். தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு சொல்லித் தரவே தனியாக நாங்கள் தயாராக வேண்டி யுள்ளது. இந்த நிலையில், விடுமுறையில் தொடர்ந்து பணிசெய்யும் நிலை ஏற்பட்டால், இரண்டையும் சரிவர செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். எங்களுக்கு அரசுப் பள்ளி குழந்தைகளின் நலன்தான் முக்கியம். ஆனால், இதற்கு மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று கூறி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நிபந்தனை அடிப்படையில் 'நீட்' பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
நீட் பயிற்சியில் வகுப்பில் பங்கேற்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பள்ளிப் பணியில் இருந்து விடுவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே நீட் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பள்ளி வேலை நாட்களில் பயிற்சி நடத்த வேண்டும் என்றும், சனி பயிற்சி வகுப்பிற்கு சுழற்சி முறையில் பணி வழங்கி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை களின் அடிப்படையில் பங்கேற இருப்பதாக கூறப்படுகிறது.
9 September 2018
ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நாளை துவக்கம்!
முதுகலை ஆசிரியர்களுக்கான 3நாட்கள் 'நீட்' பயிற்சி, நாளை (செப். 10) முதல் துவங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்காக, 'நீட்'தேர்வுக்கான பயிற்சியை அரசுஅளிக்கிறது. இதற்காக,முதற்கட்டமாக 412 மையங்கள்துவங்கப்பட்டு உள்ளன. இவற்றில்,மாணவர்களுக்கானஆலோசனைகள் வழங்குதல்தொடர்பாக, முதுகலைஆசிரியர்களுக்குபள்ளிக்கல்வித்துறை சார்பில்சிறப்பு பயிற்சி வகுப்புகள்நடக்கிறது.
நாளை முதல், செப். 12 வரையிலானமுகாமில், அரசு, உதவிபெறும்பள்ளிகளின் கணிதம், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல் பாட ஆசிரியர்கள்பங்கேற்கின்றனர். அக்கரைப்பட்டிஎஸ்.எஸ்.எம்., பொறியியல்கல்லுாரியில் நடக்க உள்ளபயிற்சியில், ஒருவர்கூடவிடுபடாமல் பங்கேற்க வேண்டும்என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
7 September 2018
'NEET தேர்வால் எங்களுக்கும் கஷ்டம்!' -கலங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எழுந்த
எதிர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன.
மாணவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்கின்றனர், ஆசிரியர் சங்கத்தினர்.
தமிழக அரசு, மாணவர்கள் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெறும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது. அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நீட்தேர்வை எதிர்கொள்ள அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் திரையில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு விடுமுறை நாள்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்புகள், காலாண்டுத் தேர்வு விடுமுறையில் இருந்து தொடங்க உள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் பெருமாள்சாமியிடம் பேசினோம். ``தமிழகத்தில், நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்செய்யும் விதமாக அவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுபோல இல்லாமல் இந்த ஆண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.தற்போது அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழகம் முழுவதும் 412 மையங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். ஒரு மையத்துக்கு 12 ஆசிரியர்கள் வீதம் இந்தப் பயிற்சித் திட்டத்துக்கு சுமார் 4,800 ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு, நீட் தேர்வுக்கு முன்னர் வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் நடக்கும். மொத்தம் 36 வாரம், விடுமுறை நாள்களில் நடைபெறும் விதத்தில்திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த மே மாதத்தில் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும்பணிக்கு ஈடான விடுமுறையே இன்னும் வழங்காத சூழலில், விடுமுறை நாள்களில் ஆசிரியர்களைப் பயிற்சி வழங்கச்சொன்னால், அவர்களுக்கு ஓய்வு கிடைக்காத சூழல் ஏற்படும். தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தைமாணவர்களுக்கு சொல்லித் தரவே தனியாக நாங்கள் தயாராகவேண்டியுள்ளது.
இந்த நிலையில், விடுமுறையில் தொடர்ந்து பணிசெய்யும் நிலை ஏற்பட்டால், இரண்டையும் சரிவர செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். எங்களுக்கு அரசுப் பள்ளி குழந்தைகளின் நலன்தான் முக்கியம். ஆனால், இதற்கு மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.இது தொடர்பாக, இயக்குநரிடமும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடமும் பேச தொடர்ந்து முயன்று வருகிறோம்,ஏற்கெனவே 4000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மேலும் 4000 ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்தினால், பள்ளிப் பாடமும் முழுமையடையாமல், பயிற்சியும் முழுமையடையாமல் இருக்கும். எங்களுக்கு மாணவர்கள் நலன்தான் முக்கியம்.
இதற்காகத் தனியே ஒரு திட்டம் வகுத்து, புதிதாக பணிக்கு ஆள்கள் எடுத்து இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தலாம். அதற்கெல்லாம் முன்னால் எங்களை அழைத்துப் பேச வேண்டும். இது தொடர்பாகத்தான் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினோம். எங்களுக்கு ஆசிரியர்கள் நலன், மாணவர்கள் நலன் மற்றும் சமூக நலன் ஆகிய மூன்றும் முக்கியம். ” என்று விரிவாகப் பேசினார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்வாரா?
3 September 2018
நீட்' பயிற்சிக்கு வராமல், 'டிமிக்கி' : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
*நீட்' தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது
*பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்
*இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர்
*சவால்
*அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக உள்ளது
*இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 2017 - 18ல், சிறப்பு பயிற்சி துவங்கியது
*இந்த பயிற்சி பெற்றதில், 20க்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர முடிந்து உள்ளது
*இதையடுத்து, இந்த ஆண்டு, நீட் பயிற்சியை, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது
*இதற்காக, மாவட்ட வாரியாக, 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, நீட் கற்றல் பயிற்சி தரப்படுகிறது
*ஆனால், பெரும்பாலான மாவட்டங்களின், அரசு பள்ளி ஆசிரியர்கள், நீட் கற்றல் பயிற்சி பெற வராமல், டிமிக்கி கொடுத்து வருகின்றனர்
*இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளி கல்வி உயர் அதிகாரி களுக்கு புகார் அளித்து உள்ளனர்
சஸ்பெண்ட்
*எனவே, முதல் கட்டமாக, நீட் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது
*விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால், டிமிக்கி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், 'சஸ்பெண்ட்' செய்யவும், சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது
புதிய ஆசிரியர்கள்?
*நீட்' பயிற்சியை புறக்கணிப்பது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது
*புதிய பாடத்திட்டம் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, புதிய முறையில் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுத்து, பொது தேர்வுக்கு பயிற்சி தர வேண்டியுள்ளது
*இந்த நேரத்தில், நீட் பயிற்சியில், ஆசிரியர்களால் பங்கேற்க முடியாது. தேவைப்பட்டால், நீட் பயிற்சிக்கு புதிய ஆசிரியர்களை, அரசு நியமிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்
31 August 2018
அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்தவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்திலும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஆனால், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, நீட் தேர்வுகள் நடத்தப்படுவதால், தமிழக பாடத்திட்ட மாணவர்களால், அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. எனவே, தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் நிறுவனங்களிடம் சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேரும் வகையில், தமிழக அரசு, இலவச நீட் பயிற்சி அளித்து வருகிறது.இந்த பயிற்சி, 2017 - 18ல் தாமதமாக துவங்கியதால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெற முடிந்தது.
இந்தாண்டு முன்கூட்டியே, நீட் பயிற்சியை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய நடவடிக்கையாக, தேசிய அளவில் பிரபலமான, 'பியர்சன்' நிறுவனத்துடன், தமிழக பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.இதன்படி, பிரபல எழுத்தாளர், டாக்டர் ராஜிவ் விஜய் எழுதிய, நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகத்தை, தமிழக அரசு வாங்கியுள்ளது. இந்த புத்தகம், 600 ரூபாய் மதிப்பிலானது. தமிழக மாணவர்களுக்கு இலவசமாக தரப்பட உள்ளது.இந்த புத்தகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத் திட்டத்தில், நீட் தொடர்பான கேள்வி - பதில்கள் மற்றும் உயிரியல் பாடத்தில், நீட் தேர்வுக்கான முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.






