t> கல்விச்சுடர் 8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 October 2021

8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கன மழையும்; ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் வேலுார் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலுார், அரியலுார், பெரம்பலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இன்று கரையை கடக்கும். அதேபோல, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. எனவே இந்த பகுதிகளுக்கு 18ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL