தேவையான பொருட்கள்:
பால் – 800 மில்லி லிட்டர் (4 கப்)
சர்க்கரை (Sugar) – தேவையான அளவு
பாதாம்பருப்பு – 20
முந்திரிப்பருப்பு – 10
சாரப்பருப்பு – 10
பிஸ்தா – 5
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி.
செய்முறை:
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, சர்க்கரை போட்டுக் கொதிக்க விடவும்.
பாதாம்பருப்பில் 5 பாதாம்பருப்பை சீவலாக நறுக்கிக் கொள்ளவும்.
மீதமுள்ள பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சாரப்பருப்பு, பிஸ்தாவை லேஸாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கொதித்துக் கொண்டிருக்கும் பால் முக்கால் பாகமாக வற்றியதும் அரைத்து வைத்துள்ள பாதாம்பருப்பு முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி போட்டுக் கிளறவும்.
வறுத்து வைத்துள்ள பிஸ்தா, சாரப்பருப்பை போட்டுக் கிளறி இறக்கி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பரிமாறவும்.