t> கல்விச்சுடர் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 November 2022

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்
தும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நவ.26-ஆம் தேதி குறுவள மைய பயிற்சி
நடத்தப்பட உள்ளது.

அதன்படி 1,2-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சியும்,4.5-ஆம்
வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

 இதற்காக 442 முதன்மைக் கருத்தாளர் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளும்படி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL