உயிர்வாழ் சான்று
சமர்ப்பிக்கலாம்
அஞ்சல் துறை மூலம், ஒன்றிய
அரசு மற்றும் வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு
டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் சேவையை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்
வங்கி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஒன்றிய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும்
வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவோர் நடப்பாண்டில் நவம்பர் 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேரில் சென்று
உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள்
படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ்
செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி
ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல்
ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது, இதற்கு
சேவை கட்டணமாக 370 ரொக்கமாக தபால்காரரிடம்
செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், மற்றும் ஓய்வூதிய
கணக்கு உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு
செய்தால். ஒரு சில நிமிடங்களில்,
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை
சமர்ப்பிக்கலாம். எனவே, மத்திய
அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில்
இருந்த படியே தங்கள் பகுதி
தபால்காரரிடம் உயிர்வாழ்
சான்றிதழை சமர்ப்பித்து
பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.