t> கல்விச்சுடர் மலச்சிக்கல் நீங்க உதவும் யோகா - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 December 2022

மலச்சிக்கல் நீங்க உதவும் யோகா




திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம், வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து மலச்சிக்கல் நீங்க உதவும் யோகா பயிற்சி வகுப்பினை நூலகத்தில் நடத்தியது. நூலகர் புகழேந்தி வரவேற்றார்.
மலச்சிக்கல் நீக்க உதவும் யோகா குறித்து
அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
யோகா என்பது உடலையும், உள்ளத்தையும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
மலச்சிக்கலை நீக்க பஸ்தி மோத்தாசனம், உஸ்ட்ராசனம், தனுராசனம், அர்த்த மஸ்தியேந்திராசனம்,
மலாசனா உள்ளிட்ட ஆசனப் பயிற்சிகள் உதவுகிறது.

நமது உடலின் செரிமான மண்டலம் சிறந்த முறையில் இயங்கவும், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், குடல் இயக்கம் நல்லமுறையில் இயங்குவது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது மலத்தை வெளியேற்றி விட வேண்டும். ஆனால், நவநாகரீக வாழ்க்கை முறையில், மல சிக்கல்களை நாள்தோறும் பலர் எதிர்கொண்டு வருகின்றனர். இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் காய்கறி கீரை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட எலும்பு அல்லது தசை தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரின் தகுந்த ஆலோசனையை பெற்று ஆசன பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

JOIN KALVICHUDAR CHANNEL