. -->

Now Online

FLASH NEWS


Sunday 21 May 2023

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

*தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்றுள்ள தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பதில் அளித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

*தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004-ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் தொடர் குரலாக இருக்கிறது.

*2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

*தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், The Hindu ஊடகத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பதில் அளித்துள்ளார்.


*இதுகுறித்து தங்கம் தென்ன்னரசு அளித்துள்ள பதிலில், “அரசு ஊழியர்களின் நலனில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது”.

*பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பல்வேறு சங்கங்களும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.