t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:493

குறள்:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்:

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

பழமொழி :
One doth the act, another hath the blow.

பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

“திறமைக்கு வாய்ப்பு கிடைக்க காத்திருக்காதே; உன் முயற்சியால் வாய்ப்பை உருவாக்கு.”

Thought for the Day :

Democracy Day: “Respect every voice, uphold every responsibility.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை? 

 25 மாநகராட்சிகள். 

 2. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் எத்தனை? 

 137 நகராட்சிகள்.  

English words :

1. Subtle – Not easily noticed, நுட்பமான.


2. Versed – Well-informed or skilled, நன்கு அறிந்தவர் / திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆறுகள் மிக முக்கியமானவை.
முக்கிய ஆறுகள்:
காவிரி
தென்பெண்ணை
பாலாறு
வைகை
தாமிரபரணி
பவானி
அமராவதி
நொய்யல்
கொள்ளிடம்

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் 85+14=18, 96+27=24 என குறிப்பிட்டால் 14+27ன் மதிப்பு என்ன? 

 (1) 14. 

 (2) 27.

(3) 20. 

 (4) 26.

 விடை: (1) 14

செப்டம்பர் 14

அனைத்துலக சனநாயக நாள் 

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
நீதிக்கதை

ஆவியில் வேகவைத்த உணவின் சிறப்பு

நீதிக்கதை

ஒரு சிறிய ஊரில் ஜகதீஷ் மற்றும் மோனிகா என்ற அண்ணன், தங்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய அம்மா தினமும் வீட்டில் சுவை யான உணவுகளைச் சமைத்து கொடுப்பார். ஆனால் ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றின் மீதுதான் அதிக விருப்பம்.

ஒருநாள் காலை அம்மா இட்லி, இடியாப்பம் மற்றும் ஆவியில் வேகவைத்த காய்கறிகளைத் தயாரித்தார்.

“அம்மா, தினமும் இட்லி, இடியாப்பமா? எங்களுக்கு பூரியும், வடையும் வேண்டும்!” என்று ஜகதீஷ் கேட்டான்.

“ஆமாம் அம்மா, எண்ணெயில் பொரித்த உணவுதான் ரொம்ப சுவையாக இருக்கும்!” என்று மோனிகாவும் சொன்னாள். அப்போது அப்பா சிரித்துக்கொண்டே , “குழந்தைகளே , சுவை மட்டும் பார்த்து உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலுக்கு எது நல்லது என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார்.

அவர் தொடர்ந்து, “ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு அதிக எண்ணெய் தேவையில்லை . இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , ஆவியில் வேகவைத்த காய்கறிகள் போன்றவை எளிமையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.  வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவது நல்ல பழக்கம்,” என்று விளக்கினார்.

அம்மா அன்று ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் வண்ணமயமான காய்கறிகளுடன் ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை செய்து கொடுத்தார்.

இருவரும் சுவைத்துப் பார்த்துவிட்டு, “அம்மா! இது ரொம்ப சுவையாக இருக்கிறது. இனிமேல் ஆவியில் வேகவைத்த உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவோம்!” என்றனர்.

அதன்பிறகு, அவர்கள் வீடில் வாரத்தின் பல நாட்களில் இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகள் இடம்பெறத் தொடங்கின.

நீதி:

சுவையான உணவு மட்டுமல்ல; உடலுக்கு ஏற்ற சத்தான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு நல்ல பகுதியாக இருக்கலாம். 

இன்றைய செய்திகள்

15.09.2026

🗒️செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

🗒️ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை அமைக்க மத்திய அரசு திட்டம்.

🗒️தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தலில்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேல்  உள்ளவர்கள் தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன் பட்டம் வென்றார்

🏀ஜப்பான் பாரா பேட்மிண்டன்: பிரமோத் பகத்துக்கு இரட்டை பதக்கம் இந்தியாவின் பிரமோத் பகத், சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து சாதனை.

🏀உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்.

Today's Headlines

🗒️ “Artificial Intelligence is ruling the world in all fields,” said High Court Judge Anand Venkatesh.

🗒️ The Central Government plans to set up the country’s first DRI plant that will run using hydrogen fuel.

🗒️ In the Tamil Nadu and Puducherry by-elections, the Election Commission has allowed persons with disabilities and people above 85 years of age to vote by postal ballot.

🏀 Sports News

🏀 Asian Junior Badminton: Tanvi won the championship title.

🏀 Japan Para-Badminton: Pramod Bhagat won two medals. He defeated fellow Indian U. Kumar and created a record.

🏀 Dheeraj made history by winning gold in the World Archery Championship.


11 September 2026

`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!


தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது தொடர்பாக கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் குமரேசனிடம் பேசினோம்:

“இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கணினி பாடமானது முக்கியமானது என மத்தியக் கல்வி அமைச்சகம் ஆய்வு செய்து ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) என்ற திட்டத்தைக் கடந்த 2018-2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவை வளர்க்கவும், தகவல் தொடர்புத் துறை பற்றி பள்ளி வயது முதலே தெரிந்துகொள்ளச் செய்யவுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மற்ற மாநிலங்கள் அனைத்தும் தங்களது பள்ளிகளில் நடைமுறைப்படுத்திவிட்டன. குறிப்பாக, பக்கத்து மாநிலமான கேரளாவில் கணினி அறிவியலை 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆறாவது பாடமாகக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.

ஆனால், தமிழக அரசானது இதில் இதுவரை எந்த ஆர்வமும் காட்டவில்லை. 2021 முதல் தற்போது வரை கணினி அறிவியலுக்காக மத்திய அரசானது தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹400 கோடிக்கும் மேல் ஒதுக்கியும், அதைச் சம்பந்தப்பட்ட பாடத்திற்குப் பயன்படுத்தவில்லை. இல்லம் தேடி கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட சரியாக முடிக்காமல் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறையில் தரவுப் பதிவு (Data Entry) செய்பவர்களுக்கும் கடந்த திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த நிதியைப் பயன்படுத்தியது.

👉குமரேசன்:

மத்திய அரசு கணினி அறிவியலுக்காக ஒதுக்கிய இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவும் வந்தது. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் அரசே இதை முறைப்படுத்தி கணினிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் செய்முறைத் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பயன்படுகின்றனவே தவிர, முழுமையாகக் கணினியைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தலைதூக்கியிருக்கும் இந்தக் காலத்தில், கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்ற சாதாரண விஷயம்கூட கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியவில்லை.

கல்வியில் தமிழகம்தான் முன்னிலை எனப் பெருமைகொள்ளும் அரசானது இந்த விஷயத்தில் மட்டும் பின்தங்கியே நிற்கிறது. எனவே, மற்ற பாடங்களைத் தனிப் பாடமாகப் கற்பிப்பது போல கணினி அறிவியலையும் சேர்ப்பதோடு, அதற்கான தகுதியான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்” என்றார் கோரிக்கையாக.

இது குறித்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பால் ஜெயகுமாரிடம் கேட்டோம்:

“பள்ளிப் பருவத்தில் நாம் படிக்கும் எந்த ஒரு படிப்பும் எதிர்காலத்தில் நமக்கு உதவத்தான் போகிறது; அது கணினிப் படிப்பிற்கும் பொருந்தும். மேல்நிலைப் பள்ளிகளில் குறிப்பாகக் கணினி அறிவியலைப் பாடமாக எடுத்துப் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும்தான் கணினியைப் படிக்க வேண்டும் என்ற தற்போதைய நடைமுறை முற்றிலும் முரணானது. இதில் தமிழ் வழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு படிக்கும் ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே கணினியை ஒரு பாடமாக வைத்து, அதைப் பற்றிய புரிதலைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

👉பால் ஜெயகுமார்:
ஆனால், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருக்கிறது. இதற்காகத்தான் மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தைக் கொண்டு வந்தது. கிராமப்புற ஏழை மாணவர்கள் கணினி அறிவியலில் மேம்படுவதோடு, பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சிறந்து விளங்க கணினி ஒரு அடிப்படைக் கருவியாக இருக்கும் என்பதால் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் கைப்பேசியிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருந்தாலும், அடிப்படையான கணினி விஷயங்கள் தெரியாததால் வேலைக்குச் செல்லும்போது பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். எனவே, அரசானது கணினி அறிவியலை ஊக்குவிக்க மத்திய அரசின் இத்தகைய திட்டங்களை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தித் தர வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

👉ராஜ்மோகன்:


பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம்:

”கல்வியை ஊக்குவிப்பதும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதும்தான் தற்போதைய அரசின் பிரதான குறிக்கோள். கணினி அறிவியல் பாடத்திற்காக மத்திய அரசானது நிதியைப் போதுமான அளவு வழங்கவில்லை. வழங்கப்பட்ட நிதியை இதற்கு முந்தைய அரசு தற்காலிகப் பணியாளர்களுக்கும் ஆய்வகப் பராமரிப்பிற்கும்தான் பயன்படுத்தியது. தற்போதைய ஆண்டிற்கான நிதியைக் கல்வித் துறை சார்பில் கோரியிருக்கிறோம். ஆனால், அந்த நிதி இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் நிதியைத் தவறாகப் பயன்படுத்தாமல் நிச்சயமாகச் சம்பந்தப்பட்ட கணினிப் பாடத்திற்கே பயன்படுத்துவோம்” என்றார்.


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் , 
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:492

குறள்:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 

பொருள்:

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

பழமொழி :
Once bitten, twice shy.

சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“இளைஞர்களின் உழைப்பும் திறமையும் இணைந்தால், நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்.”

Thought for the Day :

Engineers’ Day: “Innovate today to build a better tomorrow.”

பொது அறிவு : 

1. தென்னாட்டின் ஜான்சி ராணி என்றழைக்கப்படுபவர் யார்? 

அஞ்சலை அம்மாள். 

2. தென்னாட்டின் பகத்சிங் என்றழைக்கப்படுபவர் யார் ? 

வாஞ்சிநாதன்

English words :

1. Lucid – Easy to understand, எளிதில் புரியக்கூடிய.


2. Proficient – Highly skilled, திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இதற்காக கிராம மக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். மக்கள் பெரிய தொழிற்சாலைகளை மட்டும் சாராமல், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும் என்றார்.கதர் மற்றும் கைத்தறி
கதர் நூற்பு, நெசவு போன்ற கிராமக் கைத்தொழில்களை ஊக்குவித்தார். இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார்.

NMMS :

SAT 

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் _____

(1) சென்னை

(2) டெல்லி 

(3) மும்பை

(4) கொல்கத்தா

விடை:  (2) டெல்லி

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
நீதிக்கதை

 நேரம் தவறாமை

ஒரு அழகான காட்டில் அணில், முயல், குரங்கு ஆகிய மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆந்தை ஆசிரியராக இருந்தார்.

ஒருநாள், மறுநாள் காலை காட்டில் ஒரு முக்கியமான அறிவுப் போட்டி நடைபெறும் என்று ஆந்தை ஆசிரியர் அறிவித்தார். போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும், அனைவரும் 7:45 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

அணில் அன்று இரவே தனது புத்தகங்களையும் தேவையான பொருட்களையும் தயார் செய்து வைத்தது. காலையில் சீக்கிரமாக எழுந்து, நேரத்திற்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்றது.

முயலும் சரியான நேரத்தில் வந்தது. ஆனால் குரங்கு, “இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று நினைத்து விளையாடிக் கொண்டிருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் போனது.

குரங்கு அவசரமாக ஓடி வந்தபோது போட்டி தொடங்கிவிட்டது. அதனால் முதல் சுற்றில் கலந்துகொள்ள முடியவில்லை.

போட்டி முடிந்ததும், ஆந்தை ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்:

“நேரத்தை மதிப்பவன் தனது வாழ்க்கையையும் மதிக்கிறான். கடந்துபோன நேரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது. எனவே, ஒவ்வொரு செயலையும் சரியான நேரத்தில் செய்வது மிகவும் முக்கியம்.”

அப்போது குரங்கு தனது தவறை உணர்ந்தது. இனிமேல் எந்த வேலையையும் தாமதப்படுத்தாமல், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது.

🌟 நீதி:

“நேரம் பொன்னைவிட மதிப்புமிக்கது; நேரத்தை மதிப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவான்.”

 மாணவர்களுக்கான நினைவுச் சொல்:

“இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு தள்ளாதே; நேரம் தவறாமல் செய்!”

இன்றைய செய்திகள்

11.09.2026

🗒️சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மூலம்
263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், பள்ளியிலும்  சேர்க்கப்பட்டுளனர்.

🗒️தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம்  எனத் தமிழக அரசு விளக்கம்.

🗒️வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.

🗒️பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஸ்குவாஷ் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில்  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று பாராட்டு நடந்தது. விழாவில் நிதியுதவி , சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

Today's Headlines

🗒️ In the Chennai Corporation, a special camp was held for children with disabilities who were not attending school. Through this camp, 263 children were admitted to vocational training centres and schools.

🗒️ The Tamil Nadu Government said that Chief Minister Joseph Vijay is travelling to the United Kingdom to attract more industrial investments.

🗒️ Due to the impact of the Gulf War, the price of crude oil has again crossed 100 dollars per barrel. So, petrol and diesel prices may increase in India.

🗒️ The BRICS Summit is going to be held in Delhi. World leaders are expected to visit India to participate in the summit.

🏀 Sports News

🏀 A felicitation ceremony was held yesterday at Nehru Stadium, Chennai, for Tamil Nadu squash players. At the event, Minister Aadhav Arjuna presented financial assistance and certificates to the players.


10 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:491

குறள்:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.  


பொருள்:

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம்.பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டாம்.

பழமொழி :
Old is gold.

பழமையே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கைத்தொழில் கற்ற இளைஞன், தன் கைகளால் தன் எதிர்காலத்தை வடிவமைக்கிறான்.”

Thought for the Day :

You can learn from yesterday and prepare for tomorrow, but don’t forget to actually live today.

பொது அறிவு : 

1. தென்னாட்டின் திலகர் என்றழைக்கப்படுபவர் யார்? 

வ. உ .சிதம்பரனார். 

2. தென்னாட்டின் சாக்ரடீஸ் என்றழைக்கப்படுபவர் யார்? 

பெரியார்.

English words :

1. Feasible – Possible to do, செய்யக்கூடியது.


2. Impartial – Fair to everyone, பாரபட்சமற்றவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

காந்தியடிகளின் கிராம சுயாட்சி (Gram Swaraj) என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் அல்ல. 

ஒவ்வொரு கிராமமும்:

தன்னிறைவு + உள்ளூர் வேலைவாய்ப்பு + உள்ளூர் உற்பத்தி + மக்களின் பங்கேற்பு + சுயநிர்வாகம் என்ற அடிப்படையில் வளர வேண்டும் என்பதாகும்.

NMMS :

SAT 

மனிதக் கண்ணால் __________________ மில்லியன் நிறங்களை வேறுபடுத்திக் காண இயலும். 

(1) 12-24.

 (2) 10-20. 

(3) 1-10. 

(4) 10-12. 

விடை: (4) 10-12.

நீதிக்கதை

 பிடிவாதத்தின் விலை


ஒரு சிறிய ஊரில் மித்ரா என்ற பெண் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் புத்திசாலியும் திறமையானவளும்தான். 


ஆனால் அவளிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது—தனக்குப் பிடித்ததுதான் சரி என்று நினைப்பது.

பெற்றோர் ஏதாவது அறிவுரை கூறினால்,

“எனக்குத் தெரியும்! நீங்கள் எப்போதும் என்னையே குறை சொல்கிறீர்கள்!” என்று கோபமாகப் பேசுவாள்.


ஒருநாள் மித்ரா தனது நண்பர்களுடன் வெளியே செல்ல முடிவு செய்தாள். அன்று மாலை வீட்டிற்கு சீக்கிரம் வரும்படி அவளுடைய அம்மா கூறினார்.

“மித்ரா, இன்று மழை வரப்போகிறது. சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிடு. தாமதமாக வெளியே இருக்க வேண்டாம்,” என்றார் அம்மா.


ஆனால் மித்ரா, “எனக்கு ஒன்றும் ஆகாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் தேவையில்லாமல் அறிவுரை சொல்லாதீர்கள்!” என்று கோபமாகப் பேசிவிட்டு சென்றாள்.


மாலை நேரம் ஆனது. வானம் இருண்டு, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் மித்ரா இன்னும் வீடு திரும்பவில்லை.


நேரம் செல்லச் செல்ல அவளுடைய பெற்றோரின் கவலை அதிகரித்தது. அம்மா மீண்டும் மீண்டும் வாசலுக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா மித்ராவின் நண்பர்களுக்கு தொலைபேசி செய்து அவள் எங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார். 


மழையையும் பொருட்படுத்தாமல், அப்பா அவளைத் தேடி அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்றார். அம்மா வீட்டில் இருந்து அவள் பாதுகாப்பாக வர வேண்டும் என்று கவலையுடன் காத்திருந்தார்.


“காலையில் என்னிடம் கோபமாகப் பேசினாலும் பரவாயில்லை... என் மகள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்தால் போதும்,” என்று அம்மா கண்ணீருடன் கூறினார்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, மித்ரா தனது நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. அவள் வீட்டிற்கு வந்தபோது, வாசலில் கவலையுடன் காத்திருந்த பெற்றோரைப் பார்த்தாள்.

அவள் அவர்களிடம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றாள்.


அம்மா கோபப்படாமல், “நீ பாதுகாப்பாக வந்துவிட்டாயே, அதுதான் எங்களுக்கு முக்கியம்,” என்று மட்டும் கூறினார்.

அந்த வார்த்தைகள் மித்ராவின் மனதைத் தொட்டன.


“நான் அவர்களிடம் கோபமாகப் பேசினேன். அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. ஆனால் நான் தாமதமானதும், அவர்கள் கோபத்தைப் பற்றி நினைக்காமல் என்னுடைய பாதுகாப்பைப் பற்றித்தான் கவலைப்பட்டிருக்கிறார்கள்,” என்று அவள் எண்ணினாள்.


அப்போது பாட்டி மித்ராவிடம் மெதுவாகக் கூறினார்:

“கண்ணே, பெற்றோர் சொல்வதெல்லாம் கட்டளை அல்ல; பல நேரங்களில் அவர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாதுகாப்பான வழி. கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாகச் சொல்லலாம். ஆனால் அவர்களை எதிர்த்து, காயப்படுத்தும் வார்த்தைகளில் பேசுவது நல்லதல்ல.

உனக்காக வாழும் மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பிடிவாதம் நம்மை உயர்த்தாது; அன்பானவர்களின் மனதை மட்டுமே காயப்படுத்தும்.”


மித்ராவின் கண்களில் கண்ணீர் வந்தது.

“பாட்டி, இனிமேல் எனக்குப் பிடித்ததை மட்டும் நினைக்காமல், அம்மா அப்பாவின் அக்கறையையும் புரிந்துகொள்வேன். அவர்களுடன் கருத்து வேறுபாடு வந்தாலும் மரியாதையாகப் பேசுவேன்,” என்றாள்.


அன்று முதல் மித்ரா தனது பிடிவாதத்தைக் குறைத்து, பெற்றோரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசத் தொடங்கினாள்.


🌸 நீதி:


பெற்றோர்களின் அறிவுரையின் பின்னால் அவர்களின் அன்பும் அக்கறையும் இருக்கும். கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரியவர்களை எதிர்த்து பேசாமல் மரியாதையுடன் பேசுவதே நல்ல பண்பு.

இன்றைய செய்திகள்

10.09.2026

🗒️தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🗒️இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்
போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கினார்.

🗒️கடல்சார் ஆய்வில் புதிய மைல்கல்: ‘சாகர் மந்தன்’ ஆய்வுக் கப்பல் செயல்பாட்டை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
தொடங்கி வைத்தார்.

🗒️விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்திய அண்டார்டிகா: தற்காலிகமாக 695 பில்லியன் டன் பனி அதிகரித்
துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: 2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா... 

🏀ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Today's Headlines

🗒️ The quarterly examination timetable for government, government-aided, and private schools in Tamil Nadu has been released.

🗒️ Minister Rajmohan distributed prizes to the winners of the State Art Competitions for young artists.

🗒️ New milestone in marine research: Union Minister Jitendra Singh launched the operations of the research vessel ‘Sagar Manthan’.

🗒️ Antarctica surprises the scientific world: Antarctica temporarily gained 695 billion tonnes of ice.

🏀 Sports News

🏀 Para World Archery: India won two gold medals.

🏀 The Indian team comprising Harvinder Singh and Vijay Chandi defeated Slovakia 6–2 to win the gold medal.


9 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:490

குறள்:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள்:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பது போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பழமொழி :
Nothing is impossible to a willing heart.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“உன் திறமைக்கு எல்லை இல்லை; உன் முயற்சிக்கு மட்டும் எல்லை வைக்காதே.”

Thought for the Day :

“Your future is shaped by what you learn, practise, and create today.” 🌱

பொது அறிவு : 

1. 10 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 கோனார் சூரிய கோயில் (ஓடிஸா) 

2. மனித உடலில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது? 

60 சதவீதம் 

English words :

1. Coherent – Clear and logical, தெளிவான மற்றும் தர்க்கரீதியான.


2. Discreet – Careful and private, ரகசியம் காப்பவர் / நிதானமானவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தொட்டபெட்டா பகுதி புல்வெளிகள், சோலைக்காடுகள் மற்றும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள தொட்டபெட்டா சிகரக் காட்சி முனையம் (Doddabetta Peak Viewpoint) சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.இது தமிழ்நாடு சுற்றுலாவின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

NMMS :

MAT 

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ___________ முட்டைகள் இடும்.

 (1) 600. 

 (2) 500.

 (3) 5000. 

 (4) 6000. 

 விடை: (2) 500

செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong (உதவி·தகவல்), Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த 
கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்
நீதிக்கதை

 நண்பர்களின் அன்பு 

ஒரு அடர்ந்த காட்டில் யானை , மான், குரங்கு, முயல், கிளி ஆகியவை நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் காலை , வழக்கம்போல் எல்லோரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் மான் மட்டும் வரவில்லை .

“மான் எங்கே போய்விட்டது?” என்று முயல் கவலையுடன் கே ட்டது.

“நேற்று மாலை மானுக்கு உடல்நிலை சரியில்லை என்று கிளி சொன்னது!” என்றது குரங்கு.

உடனே யானை , “அப்படியா? நண்பன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது நாம் இங்கே விளையாடிக் கொண்டிருக்கலாமா? வாருங்கள், மானைப் பார்த்து நலம் விசாரிப்போம்!” என்றது.

அனைவரும் மானின் குடிலுக்குச் சென்றனர்.

“மான் நண்பா! எப்படி இருக்கிறாய்?” என்று யானை அன்புடன் கேட்டது.

“உங்களைப் பார்த்ததும் எனக்கு பாதி உடல்நலம் வந்துவிட்டது!” என்று மான் சிரித்தது.

முயல், “உனக்காக இனிப்பான பழங்கள் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

குரங்கு உடனே , “நான் உனக்காக மரத்திலிருந்து பறித்த தேனும் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

அதைப் பார்த்த மான் மிகவும் மகிழ்ந்தது. “நண்பர்கள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதுதான் உண்மையான அன்பு!” என்றது.

அன்றிலிருந்து காட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை யென்றாலும், ஏதேனும் துன்பம் ஏற்பட்டாலும், எல்லா விலங்குகளும் ஒன்றாகச் சென்று அவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கத் தொடங்கின.

நீதி:

🌷 நாம் அறிந்தவர்களை அன்புடன் சந்தித்து நலம் விசாரிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும்

இன்றைய செய்திகள்

09.09.2026

🗒️மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சென்னை 35 வது இடத்தில் உள்ளது.

🗒️நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது.

🗒️தமிழ்நாட்டுக்கு காவிரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

🗒️இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் கடும் பாதிப்பு: மீண்டும் இயங்கத் தொடங்கிய விமான நிலையங்கள்.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: ஷீத்தல் தேவி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

🏀அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சரிதா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங் ஷூயிடிங்கை எதிர்கொள்கிறார்.

Today's Headlines

🗒️ The Central Government has released the 2026 national ranking of cities with clean air. Chennai is ranked 35th.

🗒️ A postgraduate course in Theatre Arts will be started in Chennai by the Tamil Nadu Government.

🗒️ The Cauvery Water Regulation Committee has recommended releasing 6,000 cusecs of water to Tamil Nadu.

🗒️ Indonesia was badly affected by a volcanic eruption. Airports have now started operating again.

🏹 Sports News

🏀 Para World Archery: Indian archer Sheetal Devi has reached the final.

🏀 Indian archer Sarita, who lost in the semi-final, will face China’s Wang Shuiding in the bronze medal match.


8 September 2026

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்

பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இன்னோசன்ட் திவ்யா IAS நியமனம்!

தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (08.09.2026) வெளியிடப்பட்ட G.O.(Rt.) No.3213 மூலம் பல்வேறு முக்கியத் துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 


பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக ஜெ. இன்னசென்ட் திவ்யா, IAS நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான CO-OPTEX-ன் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்தார். பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த டாக்டர் பி. சந்திர மோகன், IAS, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 


தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமனம்.
ஆர். லில்லி, IAS – கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கதர் துறை செயலாளராக மாற்றம்.
டாக்டர் பி. சந்திர மோகன், IAS – வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம்.
இ. சரவணவேல்ராஜ், IAS – எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையராக நியமனம்.
அஜய் யாதவ், IAS – குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக நியமனம்.
எஸ். சிவராசு, IAS – பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமனம்; ஆவின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார்.
எஸ். சிவானந்தம், IAS – நிதித்துறை துணைச் செயலாளராக நியமனம். 

இதுதவிர, என். முருகானந்தம், IAS, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் (TANSI) கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகவும்; டி.என். வெங்கடேஷ், IAS, TUFIDCO-வின் முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குநராகவும் பணியமர்த்தப்பட உள்ளனர். கே.எஸ். கந்தசாமி, IAS, தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், கவிதா ராமு, IAS, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது, துறையின் நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:489

குறள்:

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

பொருள்:

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.

பழமொழி :
No smoke with out fire

நெருப்பில்லாமல் புகையாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“இளமையில் கற்ற திறமை, வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.”

Thought for the Day :

“A skilled generation is the foundation of a strong nation.”

பொது அறிவு : 

1. 50 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

ஹம்பி (கர்நாடகா) 

2. 20 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 எல்லோரா குகை (மகாராஷ்டிரம்)  

English words :

1. Audacious – Bold and brave, துணிச்சலானவர்.


2. Astounding – Very surprising, மிகவும் ஆச்சரியமான.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – தொட்டபெட்டா
உயரம்: சுமார் 2,637 மீட்டர்
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஊட்டி நகருக்கு அருகில் அமைந்துள்ளது.“தொட்டபெட்டா” என்ற பெயர் பொதுவாக “பெரிய மலை” என்ற பொருளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

NMMS :

MAT 

ஹைட்ரோஃபோபியா என்பது : 

 (1) நீரைக் கண்டு பயப்படுவது

 (2) ஒலியைக் கண்டு பயப்படுவது 

 (3) பசியின்மை

 (4) தோல் தடிப்பு 

 விடை: (1) நீரைக் கண்டு பயப்படுவது 

செப்டம்பர் 08

அனைத்துலக எழுத்தறிவு நாள் 

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
நீதிக்கதை

“ஆசிரியரின் அறிவுரை ”

ஒரு பள்ளியில் நிவேதா என்ற மாணவி படித்து வந்தாள். ஒருநாள் ஆசிரியர் வகுப்பில் அனைவருக்கும் ஒரு சிறிய பணியை வழங்கினார். நிவேதா அதைச் சரியாகச் செய்யவில்லை .

ஆசிரியர் அன்பாக, “நிவேதா, இன்னும் கொஞ்சம் கவனமாகச் செய்தால் நன்றாக இருக்கும்,” என்று அறிவுரை கூறினார்.

அதைக் கேட்ட நிவேதா கோபமடைந்து, ஆசிரியரிடம் எதிர்த்து பேசினாள். வகுப்பு முடிந்ததும் அவளுடை ய தோழி அவளிடம், “ஆசிரியர் உன்னைத் தாழ்த்துவதற்காக சொல்லவில்லை, உன் தவறைச் சுட்டிக்காட்டி முன்னேற உதவுவதற்காகத்தான் சொன்னார்,” என்றாள்.

நிவேதா தனது தவறை உணர்ந்தாள். மறுநாள் ஆசிரியரிடம் சென்று, “ஆசிரியரே , நேற்று நான் கோபத்தில் உங்களிடம் எதிர்த்துப் பேசியது தவறு. என்னை மன்னியுங்கள். இனிமேல் உங்கள் அறிவுரையை மதிப்பேன்,” என்றாள்.

ஆசிரியர் மகிழ்ச்சியுடன் நிவேதாவைப் பாராட்டினார்.

🌱 நீதி:

ஆசிரியர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும். அவர்களின் அறிவுரையைப் பொறுமையாக கேட்டு, தவறு இருந்தால் பணிவுடன் திருத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.09.2026

🗒️டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

🗒️அரசு   கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு  இன்று முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்... 

🗒️சர்வதேச விமான கண்காட்சிக்காக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து சென்றடைந்தது.

விளையாட்டுச் செய்திகள்

 🏀 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் காலிறுதியில்  நேருக்கு நேர் மோதும்  நாவேரா மற்றும் ஜெசிகா பெகுலாவே ஆகிய இரு அமெரிக்க வீராங்கனைகள்.

Today's Headlines

🗒️ TNPSC Group 2 and 2A Exam: Candidates can apply online through www.tnpsc.gov.in until September 9.

🗒️ Government Colleges of Education: Applications for the second phase of student admissions can be submitted from today until September 15.

🗒️ Indian Air Force: The Sarang Helicopter Aerobatic Team has reached Egypt to take part in an international air show.

Sports News 🏀

🗒️ US Open: After 10 years, two American players, Navarro and Jessica Pegula, will face each other in the quarter-finals.


7 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:488

குறள்:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பொருள்:

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

பழமொழி :
No Pains ; No Gains.

உழைப்பின்றி ஊதியம் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கனவு காணும் இளைஞன் ஒரு படி முன்னேறுகிறான்; திறனை வளர்க்கும் இளைஞன் இலக்கை அடைகிறான்.”

Thought for the Day :

“Skills turn ideas into action and dreams into reality.”

பொது அறிவு : 

1. 200 ரூபாய் நோட்டிற்குப் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 சாஞ்சி ஸ்தூபி (மத்திய பிரதேசம்) .

2. 100 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ராணி கி வாவ் (குஜராத்)  

English words :

1. Resourceful – Finds clever ways to solve problems, சமயோசித புத்தி உடையவர்.

2. Punctilious – Great attention to detail and correct behavior, நேர்த்தியான ஒழுக்கமுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.
முக்கிய மலைத்தொடர்கள்:
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்கு தொடர்ச்சி மலை
நீலகிரி மலை
சேர்வராயன் மலை
கல்வராயன் மலை
கொல்லிமலை
ஜவ்வாது மலை
ஏலகிரி மலை ஆகும்

NMMS :

MAT 

விதைத் தாவரங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு. வகுப்பு------>துணை வகுப்பு---------> வரிசை. 

 (1) தலாமிஃபுளோரே-------> பாலிபெட்டலே-------> டைகாட்டிலிடனே

 (2) டைகாட்டிலிடனே-------> பாலிபெட்டலே-----------> தலாமிஃபுளோரே

 (3) பாலிபெட்டலே---------> டைகாட்டிலிடனே---------> தலாமிஃபுளோரே 

 (4) பாலிபெட்டலே --------> தலாமிஃபுளோரே-------------> டைகாட்டிலிடனே 

 விடை: (2) டைகாட்டிலிடனே-------------> பாலிபெட்டலே-------------> தலாமிஃபுளோரே

நீதிக்கதை

 “பெரிய இலக்கு”

ஒரு கிராமத்தில் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய சாதனை செய்ய வே ண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த இலக்கை நினைத்தாலே , “இவ்வளவு பெரிய இலக்கை எப்படி அடைவது?” என்று கவலைப்பட்டான்.

ஒருநாள் அவன் ஆசிரியரிடம் தனது கவலையைச் சொன்னான்.

ஆசிரியர் ஒரு சிறிய விதையை க் காட்டி,

“இந்த விதை இன்று ஒரு பெரிய மரமாகிவிடுமா?” என்று கே ட்டார்.

“இல்லை ஆசிரியரே ,” என்றான் சூர்யா.

“அப்படித்தான் பெரிய இலக்கும். ஒரே நாளில் வெற்றியை எதிர்பார்க்காமல், தினமும் சிறிது சிறிதாக உழைத்தால் பெரிய இலக்கையும் அடையலாம்.” என்றார் ஆசிரியர்.

அன்றிலிருந்து சூர்யா தனது இலக்கைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் விடாமுயற்சியுடன் உழைக்கத் தொடங்கினான். தோல்விகள் வந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் முயன்றான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் கனவு நனவானது.

அப்போது சூர்யாவுக்கு ஆசிரியரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:

“பெரிய இலக்கை நினைத்து பயப்படாதே ; அதை அடைய ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அடியை எடுத்து வை .”

🌸 நீதி: பெரிய இலக்கை அடைய  பொறுமையுடனும் திட்டமிட்ட முறையிலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். விடாமுயற்சி இருந்தால் கனவும் நனவாகும்.

இன்றைய செய்திகள்

07.09.2026

🗒️புதுதில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக, செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🗒️விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. 10 நாட்களில் 4,000 டன் வெங்காயம் விற்பனை செய்த்தாக மத்திய அரசு தகவல். 

🗒️நவம்பர் 27' சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
 
*விளையாட்டுச் செய்திகள்*

🏀சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Today's Headlines

🗒️ Due to the BRICS Summit in New Delhi, the 57th GST Council meeting, which was planned for September 12, has been postponed.

🗒️ Steps to control price rise: The Central Government said that 4,000 tonnes of onions were sold in 10 days.

🗒️ The United Nations has declared November 27 as the International Day for the Elimination of Child Marriage.

🏀 Sports News

🏀 India’s Satwik Sairaj Rankireddy and Chirag Shetty won the championship title in the China Masters Super 750 International Badminton Tournament.


5 September 2026

TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 8.3 DIRECT LINK ATTACHED

TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 8.3

App performance and SDK version update added
Click 👇 

3 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:487

குறள்:

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்:

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்

பழமொழி :
No man can serve two masters

ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“இளையோரின் தனித்திறமைதான் நாட்டின் மறைந்திருக்கும் பெரும் செல்வம்.”

Thought for the Day :

“The best investment a young person can make is in learning useful skills.”

பொது அறிவு : 

1.புதிய 2000 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 மங்கள்யான். 

2.புதிய 500 ரூபாய் நோட்டில் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ரெட் ஃபோர்ட் ( டில்லி) . 

English words :

1. Candid – Truthful and straightforward, வெளிப்படையானவர்.

2. Magnanimous – Very generous and forgiving, பெருந்தன்மையானவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

"விவசாயத்திற்கு முக்கியத்துவம்
இந்திய கிராமங்களின் முதன்மையான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்."

NMMS :

SAT 

பின்வரும் நிகழ்வுகளைக் காலக் கிரமப்படி வரிசைப்படுத்துக. 

 (i) ஆம்பூர் போர்

 (ii) பிளாசிப் போர் 

 (iii) வந்தவாசிப் போர்

 (iv) பெரும் புரட்சி

 (1) (i), (ii), (iii), (iv) 

 (2) (i), (iv), (iii) , (ii) 

 (3) (iii), (ii), (i), (iv) 

 (4) (iii), (iv), (i), (ii) 

 விடை: (1) (i), (ii), (iii), (iv)

செப்டம்பர் 03

சாக்சி மாலிக் அவர்களின் பிறந்தநாள்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.
நீதிக்கதை

 “சிறிது ஓய்வு… நிறைய வெற்றி!”

ஒரு சிறிய ஊரில் விக்னேஷ் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவன். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தினமும் இடை விடாமல் படித்துக்கொண்டே இருந்தான்.

“இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்… ஓய்வு எடுத்தால் நேரம் வீணாகிவிடும்!” என்று நினைத்து, விளையாடுவதையும் நண்பர்களுடன் பேசுவதையும் தவிர்த்தான்.

சில நாட்களில் அவனுக்கு படித்தது எதுவும் சரியாக நினைவில் நிற்கவில்லை .

சிறிய விஷயங்களுக்குக்கூட எரிச்சல் ஏற்பட்டது. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து,

“விக்னேஷ், மனதுக்கும் உடலைப் போலவே ஓய்வு தே வை . தொடர்ந்து படிப்பது மட்டும் வெற்றியைத் தராது. சிறிது நேரம் ஓய்வெ டுத்து, இயற்கை யை ரசித்து, பிடித்த விஷயங்களைச் செய்வதும் அவசியம்,” என்றார்.

அன்று மாலை விக்னேஷ் புத்தகங்களை மூடிவிட்டு சிறிது நேரம் வெளியே சென்று நடந்தான். நண்பர்களுடன் விளை யாடினான். வீட்டிற்கு வந்துஅமை தியாக இரவு உணவு சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்கினான்.

மறுநாள் காலை அவன் மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. படித்த பாடங்கள் எளிதாக நினைவுக்கு வந்தன. அப்போது அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது:

“ஓய்வு என்பது நேரத்தை வீணாக்குவது அல்ல; மீண்டும் சிறப்பாக செயல்படுவதற்கான தயாரிப்பு.” அதன்பிறகு விக்னேஷ் படிப்புக்கும் ஓய்வுக்கும் சரியான நேரத்தை ஒதுக்கி, மகிழ்ச்சியாகப் படிக்கத் தொடங்கினான்.

🌸 நீதி:

அதிகமாக கவலைப்படாமல், தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்தால் மனம் புத்துணர்ச்சி பெறும். மன அமைதியுடன் செயல்படும்போது வெற்றியும் எளிதாக கிடை க்கும்.

இன்றைய செய்திகள்

03.09.2026

🗒️சென்னை மெட்ரோவில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டம் காரணமாக  28 புதிய ரெயில்கள் வாங்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

🗒️ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் வைத்து சிறப்பு பூஜை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம் செய்தனர்.

🗒️ரூ.1.25 கோடி நன்கொடை... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின்  ஒலிம்பிக் சாம்பியன் ஜெங் கின்வென்
 உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
 
*விளையாட்டுச் செய்திகள்* 

🏀21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டி லூதியானாவில் நடைபெற்று வருகிறது.

🏀100 மீட்டரில் புதிய வரலாறு... ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனையை தகர்த்த தமிழக வீரர் நீல் சாம்ராஜ்

Today's Headlines

🗒️ Due to the increasing number of passengers on the Chennai Metro, the railway administration plans to buy 28 new trains.

🗒️ ISRO scientists performed a special puja and prayer with a model of the GSLV-F17 rocket.

🗒️ ₹1.25 crore donation: Chinese Olympic champion Zheng Qinwen has extended a helping hand to people affected by the floods.

Sports News

🏀 The 21st National Youth Athletics Championship 2026 is being held in Ludhiana.

🏀 New record in the 100 metres: Tamil Nadu athlete Neel Samraj broke the national record twice in the same day, creating history.


2 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.09.2026




    


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:486

குறள்:

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.  

பொருள்:

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

பழமொழி :
An old man's sayings are seldom untrue.

மூத்தோர் சொல் பொய்ப்பது அரிது.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“திறமையைத் தேடு, பயிற்சி செய், பகிர்ந்து கொள்; உலகம் உன் திறனை அறியும்.”

Thought for the Day :

“Learn, practise, improve, and let your skills speak for you.”

பொது அறிவு : 

1. தென்னிந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படுவது எது? 

 ஆலப்புழா. 

2.தென்னிந்தியாவின் நயகரா என்றழைக்கப்படுவது எது? 

 ஒகேனக்கல். 

English words :

1. Diplomatic – Handles sensitive matters tactfully, சாதுரியமாக கையாள்பவர்.


2. Adaptable – Adjusts easily to new conditions, சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்பவர்k

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் பரப்பளவு சுமார் 1,30,058 சதுர கி.மீ ஆகும்.
பரப்பளவில் இந்தியாவில் தமிழ்நாடு 10-வது இடத்தில் உள்ளது.மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள்

NMMS :

MAT 

கல்வி நிலையங்களை பராமரிப்பவர்களுக்காக. வழங்கப்பட் நிலங்கள் ____________________ ஆகும்.

 (1) சாலபோகம் 

 (2) தேவதானம்

 (3) பிரம்மதேயம்

 (4)பள்ளிச் சந்தம் 

 விடை: (1) சாலபோகம்

செப்டம்பர் 02

உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]

வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது
நீதிக்கதை

 “நட்பைத் தேர்ந்தெடுத்த நிவின்”

ஒரு சிறிய ஊரில் நிவின் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினான். அவனுக்கு சில நண்பர்கள் இருந்தனர்.

அவர்களில் விஷால் என்ற நண்பன் எப்போதும் பள்ளி வேலைகளைத் தவிர்ப்பதும், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் குறும்புகள் செய்வதும் வழக்கமாக இருந்தது.

“நிவின், இன்று வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம். வா, வெளியே விளையாடலாம்!” என்று விஷால் அடிக்கடி அழைப்பான்.

முதலில் நிவின் மறுத்தான். ஆனால் தினமும் நண்பனின் பேச்சைக் கேட்டதால், அவனும் படிப்பில் கவனம் செலுத்தாமல் போனான். தேர்வில் அவன் மதிப்பெண்களும் குறைந்தன.

இதைக் கவனித்த ஆசிரியர் நிவினை அழைத்து, “நிவின், நாம் யாருடன் பழகுகிறோமோ, அவர்களின் பழக்கங்கள் நம்மை யும் பாதிக்கலாம். நல்ல நண்பன் நம்மை முன்னேற்றுவான்; தவறான நண்பன் நம்மை பின்னுக்கு இழுப்பான்,” என்று அறிவுரை கூறினார்.

நிவினுக்கு தனது தவறு புரிந்தது. அவன் விஷாலிடம் சென்று,

“நாம் இருவரும் நல்ல விஷயங்களைச் செய்து முன்னேறுவோம். தவறான பழக்கங்களை விட்டுவிடுவோம்,” என்றான்.

விஷாலும் தனது தவறை உணர்ந்து, நிவினுடன் சேர்ந்து படிப்பிலும் நல்ல செயல்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினான்.

இன்றைய செய்திகள்

02.09.2026

⭐ தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

⭐ உக்ரைன்-ரஷ்யா போரில், ஏராளமான ஏவுகணைகளை நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்து விட்டதால் தற்போது நேட்டோ நாடுகளிடம் குறைவான அளவில்தான் ஏவுகணைகள் இருக்கின்றன.

⭐திபெத் - நேபாளம் எல்லை பகுதியில் உள்ள சுமார் 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியிருந்த இயற்கை தடுப்பு ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் புதிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

🏀 லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாடிய புகழ்பெற்ற 20 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணம் நிறைவுக்கு வருகிறது.

Today's Headlines

*Head lines:*         

 ⭐ The Tamil Nadu government has announced that a large Digital Finance Centre will be built in Coimbatore at a cost of ₹400 crore to take Tamil Nadu’s industrial growth to the next level.

⭐ In the Russia-Ukraine war, NATO countries have given many missiles to Ukraine. So, NATO countries now have fewer missiles available.

⭐ A natural reservoir near the Tibet-Nepal border, which held about 2.5 million cubic metres of water, has broken. Water is flowing out, creating a new flood danger in the area.

*Sports news*

🏀Lionel Messi has announced his retirement from international football. This brings an end to his legendary 20-year international football journey with the Argentina national team.


1 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:485

குறள்:

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள்:

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

பழமொழி :


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“நேரத்தை வீணாக்காத இளைஞன், திறமையை வீணாக்காத எதிர்காலத்தை உருவாக்குகிறான்.”

Thought for the Day :

“A talented youth becomes powerful when talent is guided by practice.”

பொது அறிவு : 

1. தென்னிந்தியாவின் தாஜ்மஹால் என்றழைக்கப்படுவது எது? 

 திருமலை நாயக்கர் மஹால். 

2. தென்னிந்தியாவின் கங்கை என்றழைக்கப்படுவது எது? 

 காவிரி. 

English words :

1. Tenacious – Holds firmly to a purpose, தளராத உறுதியுடையவர்.


2. Empathetic – Understands others' feelings, பிறர் உணர்வுகளை புரிந்துகொள்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

தெற்கில் மன்னார் வளைகுடா மற்றும் பால்க் நீரிணை உள்ளன.
தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியாவின் தீவிர தென்முனையான கன்னியாகுமரி அமைந்துள்ளது.

NMMS :

SAT 

தவறான இணையைத் தேர்ந்தெடு.

 (1) ஜலகண்டேஸ்வரர் கோவில் - வேலூர்

 (2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

 (3) வரதராஜ பெருமாள் கோவில் - காஞ்சிபுரம் 

 (4)இராமநாதசுவாமி கோவில் - இராமேஸ்வரம் 

 விடை: (2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

செப்டம்பர் 01

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) அனுசரிக்கப்படுகிறது. 
மறைந்துவரும் கலை: இணையம் மற்றும் செல்பேசி காலத்தில், கைகளால் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் குறைந்து வருகிறது. அதைக் காக்க இந்த நாள் உதவுகிறது.
உணர்வுபூர்வமான தொடர்பு: கடிதங்கள் மூலம் வெளிப்படும் பாசமும் நினைவுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
வரலாற்றுப் பகிர்வு: நம் முன்னோர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கடிதத் தொடர்புகளை நினைவுகூரும் நாளாக இது அமைகிறது. 
நீதிக்கதை

“ஆசையின் விலை ”

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் மிகவும் ஆசை . நண்பர்கள் வைத்திருக்கும் பொருட்களை ப் பார்த்தாலே , அதைப் போலவே தனக்கும் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிப்பான்.

ஒருநாள் அவனுடை ய நண்பன் புதிய வண்ணமயமான பள்ளிப் பையை கொண்டுவந்தான்.

“அம்மா, எனக்கும் இதே மாதிரி பை வேண்டும். இப்போதே வாங்கித் தர வேண்டும்!” என்று அருண் அடம்பிடித்தான்.

அம்மா, “அருண், உன்னுடைய பை இன்னும் நன்றாகத்தானே இருக்கிறது. இப்போது வாங்க முடியாது,” என்று அன்பாகக் கூறினார்.

ஆனால் அருண் கேட்காமல் தொடர்ந்து தொந்தரவு செ ய்தான். அவனுடைய பெற்றோர் மிகவும் வருத்தமடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அருணின் அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மிகவும் கவலையாக இருந்தார். அப்பாவிடம் காரணம் கேட்டபோது, வேலை குறைந்ததால் இந்த மாதம் குடும்பச் செலவுகளை சமாளிப்பது சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.அப்போது அருணுக்கு தான் செய்தது புரிந்தது.

“அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நம்முடைய குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் நான் தேவையில்லாத பொருட்களுக்காக உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன். இனிமேல் தேவையான பொருட்களை மட்டுமே கேட்பேன்,” என்றான்.

அன்று முதல் அருண் தன்னிடம் இருப்பதை மதிக்கத் தொடங்கினான்.பெற்றோரிடம் அடம்பிடிப்பதையும் விட்டுவிட்டான். அவனுடைய மாற்றத்தைக் கண்டு பெற்றோரும் மகிழ்ந்தனர்.

🌸 நீதி:

நமக்குத் தேவையானவற்றை மட்டும் பெற்றோரிடம் கேட்கவேண்டும்.

தேவையில்லாத பொருட்களுக்காக அடம்பிடித்து அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. இருப்பதைக்கொண்டு மகிழ்ந்து, பெற்றோரின் உழைப்பையும் மதிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.09.2026

🗒️கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் “கோயம்புத்தூர் டிஜிட்டல் நிதி மையம்” முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

🗒️தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு  2027-ன் முதற்கட்ட பணிகள் நிறைவு
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும்.

🗒️பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியை விண்ணில் ஏவியது நாசா. 

 *விளையாட்டுச் செய்திகள்*

 🏀இந்தியா, பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி அக்டோபர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

Today's Headlines

🗒️ Tamil Nadu Chief Minister Joseph Vijay has announced a “Coimbatore Digital Finance Centre” in Coimbatore. It will be developed by the Tamil Nadu Industrial Development Corporation at a cost of ₹400 crore.

🗒️ The first phase of the 2027 Census in Tamil Nadu has been completed. The second phase of the Census will be conducted across India in January and February 2027.

🗒️ NASA has launched a powerful telescope into space to help scientists discover the secrets of the universe.

🏀 Sports News

🗒️ A friendly football match between India and Brazil will be held on October 3.


31 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:484

குறள்:

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

பொருள்:

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், உலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

பழமொழி :
Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“கைகளில் கைத்திறன், மனதில் நம்பிக்கை, செயல்களில் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.”

Thought for the Day :

“Don’t wait for opportunities; build skills that create opportunities.”

பொது அறிவு : 

1.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படுவது எது? 

மதுரை.

 2. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படுவது எது? 

பாளையங்கோட்டை. 

English words :

1)Benevolent – Well-meaning and kind, நற்குணமுள்ளவர் / தாராள மனப்பான்மை உடையவர்.


2)Astute – Sharp and shrewd, கூர்மையான அறிவுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் புவியியல் தமிழ்நாடு இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது.
வடக்கில் ஆந்திரப் பிரதேசம், வடமேற்கில் கர்நாடகம், மேற்கில் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கிழக்கிலும் தென்கிழக்கிலும் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

NMMS :

MAT 

எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது ________________________ ஆகும். 

 (1) அசௌர்யா

 (2) சத்யா

 (3) அகிம்சை

 (4) அரிக்கிரகா 

 விடை: (3) அகிம்சை

ஆகஸ்ட் 31

மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

நீதிக்கதை

 🍚 நீதிக்கதை : “அலை பே சி இல்லாமல் உணவு”

ஒரு சிறிய நகரத்தில் நிகில் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சாப்பிடும் நேரத்தில் அலைபேசியில் கார்ட்டூன் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் அவன் அம்மா உணவு பரிமாறியபோது, “அம்மா, போனை கொடுத்தால்தான் நான் சாப்பிடுவேன்!” என்றான்.

அம்மாவும் அவன் சாப்பிட வேண்டும் என்பதற்காக அலைபேசியைக் கொடுத்தார்.

நிகில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டே உணவை சாப்பிட்டான். நாள்கள் செல்லச் செல்ல, அலை பேசி இல்லாமல் சாப்பிடவே முடியாது என்ற பழக்கம் நிகிலுக்கு ஏற்பட்டது. உணவின் சுவையையும், அம்மா அன்புடன் பேசுவதை யும் அவன் கவனிக்காமல் போனான்.

ஒருநாள் அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் போனது. நிகில் சாப்பிட மறுத்துவிட்டான். அப்போது அவனுடை ய தாத்தா அவனை அருகில் அழைத்து,

“நிகில், உணவு உன் உடலுக்கு சக்தி தருகிறது. அலைபேசி உன் உணவுக்கு துணையாக இருக்க வேண்டியதில்லை . சாப்பிடும்போது உணவை ரசித்தும், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டும் சாப்பிடக் கற்றுக்கொள்,” என்றார்.

நிகிலுக்கு தன் பழக்கம் புரிந்தது. அன்று முதல் சாப்பிடும் நேரத்தில் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உணவு சாப்பிடத் தொடங்கினான்.

🌱 நீதி:

குழந்தைகள் உணவு சாப்பிடுவதற்காக அலைபேசியை க்கொடுப்பதை விட,

உணவின் முக்கியத்துவத்தையும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தையும் கற்றுக்கொடுப்பது சிறந்தது.

இன்றைய செய்திகள்

31.08.2026

🗒️சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைப்பு.இந்த ரெயில்களை தமிழகத்தில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🗒️உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

🗒️உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஒலிய தராஜலி தோ'ஸ்த்லிக்' விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

🏀சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர்
 வேலவன் செந்தில்குமார்.

Today's Headlines

🗒️ Two Amrit Bharat trains made at Chennai ICF have been handed over to Southern Railway. Passengers have requested that these trains be operated in Tamil Nadu.

🗒️ Prime Minister Narendra Modi has appealed to people to buy products made in India.

🗒️ At a Yoga event in Tashkent, the capital of Uzbekistan, Indian Prime Minister Narendra Modi was presented with Uzbekistan’s highest award, the Order of Friendship.

🏀 Sports News

🏀 Tamil Nadu player Velavan Senthilkumar won the championship title at the International Squash Open tournament.


30 August 2026

1.7.2026 அன்று முதல் அரசு ஊழியர்களுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவம் மேற்கொள்ள மருத்துவமனை பட்டியல் வெளியீடு

1.7.2026 அன்று முதல் அரசு ஊழியர்களுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவம் மேற்கொள்ள மருத்துவமனை பட்டியல் CLICK HERE TO DOWNLOAD

28 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:482

குறள்:

 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

பொருள்:

காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

பழமொழி :
Never cast the oar till you are out.

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். 

 2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

பொன்மொழி : 

“ஒரு இளைஞனின் திறமை வளர்ந்தால், ஒரு குடும்பத்தின் எதிர்காலம் வளரும்.”

Thought for the Day :

“Every skill you learn today adds strength to your future.”

பொது அறிவு : 

1.இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் யார்?

வில்லியம் ஹார்வி. 

2.இரத்த வகைகளை கண்டறிந்தவர் யார்? 

லேண்டஸ்டைனர்.

English words :

1. Disciplined – Showing controlled behavior and self-control, ஒழுக்கமான.

2. Compassionate – Feeling sympathy and concern for others, இரக்கமுள்ள

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராமங்களில் வாழும் மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில், சிறுதொழில், வணிகம் மற்றும் சேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பே கிராமப் பொருளாதாரம். இதை முன்னேற்றினால் இந்தியா தானாக முன்னேறி விடும் என்று காந்தியடிகள் நம்பினார்

NMMS :

SAT - Maths

NMMS வினா 



3, 8, 15, 24, 35, ?



அடுத்த எண் எது?



A) 46

B) 48

C) 50

D) 52



💡 குறிப்பு: எண்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப் பாருங்கள்.



3 → 8 = +5

8 → 15 = +7

15 → 24 = +9

24 → 35 = +11

35 → ? = +13

அதனால், 35 + 13 = 48 

ஆகஸ்ட் 28

இராபர்ட்டு கால்டுவெல்
(திராவிட மொழியியலின் தந்தை)- அவர்களின் நினைவு நாள்

இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814–28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும், பழங்கிரேக்கத்திலும், தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார்.திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.
நீதிக்கதை

 சிறிய உதவி – பெரிய மாற்றம்

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவதில் அவனுக்கு அதிக ஆர்வம் இல்லை.

ஒருநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில், வயதான ஒருவர் சாலையோரத்தில் கனமான ஒரு மூட்டையைத் தூக்க முடியாமல் சிரமப்படுவதை அருண் பார்த்தான். அவர் பலமுறை முயன்றும் மூட்டையைத் தூக்க முடியவில்லை.

அருண் அவரைப் பார்த்துவிட்டு, “எனக்கு பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டது” என்று நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

சிறிது தூரம் சென்றபோது, அவனுடைய மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. “நான் இரண்டு நிமிடம் உதவி செய்திருந்தால் என்ன குறைந்துவிடும்?” என்று எண்ணினான்.

உடனே திரும்பிச் சென்று, அந்த வயதானவரின் மூட்டையைத் தூக்கி அவருடைய வீட்டுவரை எடுத்துச் சென்றான்.

அந்த முதியவர் மகிழ்ச்சியுடன், “மகனே, நீ செய்த உதவி சிறியதாகத் தோன்றலாம். ஆனால் இன்று எனக்கு அது மிகப் பெரிய உதவி” என்றார்.

அன்று பள்ளியில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்:

“நாம் மற்றவர்களுக்கு உதவும்போது நமக்கு என்ன கிடைக்கும்?”

பல மாணவர்கள் பல பதில்களைக் கூறினர்.

அருண் எழுந்து, “அவர்களுக்கு உதவிய மகிழ்ச்சியும், நம் மனதிற்கு கிடைக்கும் நிம்மதியும் கிடைக்கும்” என்றான்.

ஆசிரியர் புன்னகையுடன், “மிகச் சரி. நாம் செய்யும் சிறிய நன்மை கூட ஒருவருடைய நாளையே மாற்றக்கூடும்” என்றார்.

அன்றிலிருந்து அருண், தன்னால் முடிந்த ஒவ்வொரு சிறிய உதவியையும் செய்யத் தொடங்கினான். அவனுடைய அந்த மாற்றத்தைப் பார்த்து, அவன் நண்பர்களும் மற்றவர்களுக்கு உதவத் தொடங்கினர்.

சில நாட்களில், அந்தச் சிறிய கிராமமே ஒருவருக்கொருவர் உதவும் அழகான சமூகமாக மாறியது.

நீதி:

நாம் செய்யும் சிறிய உதவியும் மற்றொருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

“ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்துகொள்ளும் போது உலகம் அழகானதாக மாறும்”.

இன்றைய செய்திகள்

28.08.2026

🗒️பி.எம்.எப்.எம்.இ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருது அமைச்சர் மதன்ராஜா பெற்றுக் கொண்டார்
பி.எம்.எப்.எம்.இ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் 19,800 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

🗒️ "சீனா - நேபாள எல்லையில் 2ம் கட்ட வெள்ள அபாயம்!சீன அரசு அவசர எச்சரிக்கை.

🗒️இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஜப்பானுடன் பேச்சுவார்த்தை என பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀கிரிக்கெட்: கொழும்பு டெஸ்ட் போட்டியில்  'டிரா' கடைசி நாளில் தோல்வி கண்ட இந்திய அணி.

Today's Headlines

🗒️ Minister Madan Raja received an award for successfully implementing the PMFME scheme. Under this scheme, Tamil Nadu has approved a total of 19,800 businesses so far.

🗒️ Second-stage flood risk at the China-Nepal border! Chinese government issues urgent warning.

🗒️ Piyush Goyal said that India is in talks with Japan to increase the export of Basmati rice from India.

Sports News

🏀 Cricket: India lost to Sri Lanka on the last day of the Colombo Test match, which ended in a draw.


27 August 2026

பள்ளி காலை வழிபட்டு செயல்பாடுகள் - 27.08.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:481

குறள்:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 


பொருள்:

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

பழமொழி :
Necessity is the mother of invention.

தேவையே கண்டுபிடிப்பின் தாய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. 1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். 

 2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

பொன்மொழி : 

“கல்வி அறிவைத் தரும்; திறமை அந்த அறிவைச் செயலாக மாற்றும்.”

Thought for the Day :

“Skill is the bridge between a young person’s dream and achievement.”

பொது அறிவு : 

1.மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது? 

எலும்பு மஜ்ஜை. 

2. இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு? 

120 நாட்கள்.

English words :

1.Optimistic – Hopeful and confident about the future, நம்பிக்கையுடன் சிந்திப்பவர்.

2.Cooperative – Willing to work together with others, ஒத்துழைக்கும் தன்மையுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

அந்தமான் மற்றும் இலட்சத்தீவுகள் இரண்டும் இந்தியாவின் கடல் எல்லை, இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் மிகவும் முக்கியமானவை.

NMMS :

MAT 

கொடுக்கப்பட்ட வரைபடத்தை கன சதுரமாக மடித்தால் எண் 5க்கு நேர் எதிரே உள்ள எண் எது? 



(1) 3. 

(2) 2. 

(3) 4. 

(4) 6. 



விடை: (2) 2

நீதிக்கதை

 நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம்


ஒரு சிறிய கிராமத்தில் அகிலேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது. நண்பர்கள் அனைவரும் நீச்சல் பயிற்சிக்குச் சென்றாலும், “எனக்கு நீச்சல் கற்றுக்கொள்ளத் தேவையில்லை” என்று அவன் நினைத்தான்.


ஒருநாள் அகிலேஷ் தனது நண்பர்களுடன் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறி தண்ணீரில் விழுந்தான். பயந்துபோன அவன் உதவிக்காகக் குரல் கொடுத்தான். 


அருகில் இருந்த நீச்சல் பயிற்சியாளர் உடனே வந்து அவனைப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார்.

அன்று அகிலேஷ் தனது தவறை உணர்ந்தான். மறுநாள் முதல் நீச்சல் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினான்.


 பயிற்சியாளர் அவனுக்கு நீரில் பாதுகாப்பாக இருப்பது, முறையாக நீந்துவது, அவசர நேரத்தில் அமைதியாக இருப்பது போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தார்.


சில மாதங்களில் அகிலேஷ் நன்றாக நீந்தக் கற்றுக்கொண்டான். “நீச்சல் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல; நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் ஒரு முக்கியமான திறமை” என்பதை அவன் புரிந்துகொண்டான்.


அதன்பிறகு, தன்னுடைய நண்பர்களிடமும் நீச்சலை முறையாகப் பயிற்சி செய்து கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினான்.


நீதி: 

பயிற்சி திறமையை வளர்ப்பதோடு, நம்முடைய பாதுகாப்பிற்கும் உதவுகிறது. எந்தப் பயிற்சியையும் தகுதியான பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் கற்றுக்கொள்வது சிறந்தது.


இன்றைய செய்திகள்

27.08.2026

🗒️நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பேரிடர் மற்றும் வெள்ளத்தில், 105 இந்தியர்கள் உட்பட 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 93 நேபாள குடிமக்களும் என மொத்தம் 384 பேர் காணாமல் போயுள்ளனர். திடீர் வெள்ளத்திற்கு காரணம் பனிமலை உருகி ஆற்றில் விழுந்தது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

🗒️ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உள்ளிட்ட 2 பேர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

🗒️செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நதி நீரை  முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.

🗒️தொழில்முறை சந்திப்புகளின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையை சேர்ந்த இளம் பயிற்சியாளர்கள் 
உடன் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரிலிருந்து  ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’ கப்பல்  புறப்பட்டது
  
*விளையாட்டுச் செய்திகள்*

🏀பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய ஜோடி உயர்வு.  


Today's Headlines

🗒️ In a sudden disaster and flooding in Nepal, a total of 384 people have gone missing, including 291 foreign tourists, among them 105 Indians and 93 Nepali citizens. The Nepalese government has announced that the sudden flooding was caused by a glacier melting and falling into the river

🗒️ Retired Judge R.N. Manjula and one other person have been appointed as members of the State Human Rights Commission.

🗒️ On September 1, Chief Minister Joseph Vijay will open the water from the Mettur Dam for irrigation.

🗒️ As part of professional visits, the Indian Navy’s training ship INS Sudarshini, carrying young trainees, has left Lisbon, Portugal.

Sports News

🏀 The Indian pair has moved up in the badminton rankings in the latest rankings list.


25 August 2026

TET-ல் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தீர்மானம்



2010 முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்


டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்தார். இதனையடுத்து தீர்மானத்தை ஆதரித்து திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். தொடர்ந்து ஒருமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் சுருக்கம்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விலக்கு தொடர்பாக முன்மொழியப்பட்ட அரசின் தனித் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
1. TET தேர்வுக்கு முழுமையான விலக்கு கோருதல்:
23.08.2010-க்கு முன்பாக அப்போதைய நடைமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி அனுபவம் மற்றும் பணிப்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. சட்டத் திருத்தம் மற்றும் சுற்றறிக்கை:
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மூலமாக தெளிவான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
3. பணிப்பலன்கள் மற்றும் பதவி உயர்வு பாதுகாப்பு:
நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து பணிப்பலன்களும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

JOIN KALVICHUDAR CHANNEL