t> கல்விச்சுடர் கல்விச்சுடர்: WISHES . -->

Now Online


Recent Posts Widget
Showing posts with label WISHES. Show all posts
Showing posts with label WISHES. Show all posts

14 January 2021

சக்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் செய்வது எப்படி?



பொதுவான முறை :

🔥பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைத்து ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள்.

🔥பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம்.

🔥தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். 

🔥நேரம் செல்லச் செல்ல தீயின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள்.

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

🔖பச்சரிசி - 1 கிலோ

🔖பாசிப்பருப்பு - 100கிராம் 

🔖பால் - அரை லிட்டர்

🔖முந்திரி - 15_

🔖உலர் திராட்சை - 15

வெல்லம் - 800 கிராம் (பொடித்தது)

🔖நெய் - 200கிராம்_ 

🔖பச்சை கற்பூரம் - 1_ _சிறிய கட்டி (பொடித்தது)_l

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

🔖தேங்காய் துருவல் - கால் கப்

🔖தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

    🔥சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

   🔥பின்னர் ஒரு மண்பானையை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

      🔥நன்கு கொதித்ததும் அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு நன்கு கிளறவும்.

   🔥அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

     🔥பின்பு, அரிசி மற்றும் பாசிபருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து, பின்பு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளறவும்.

     🔥வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு கிளறி இறக்கினால் கடவுளுக்கு படைக்கும் சர்க்கரைப் பொங்கல் தயார்!!


வெண் பொங்கல்

தேவையான பொருட்கள் :

🔖பச்சரிசி - 4கப்_ 

🔖பாசிப் பருப்பு - 2 கப்_

மிளகு - 15

🔖சீரகம் - 2 டீ ஸ்பூன்

🔖முந்திரி பருப்பு - 15

🔖இஞ்சி (பொடியாக நறுக்கியது)

🔖சிறிதளவு கறிவேப்பிலை

🔖சிறிது தண்ணீர் - தேவையான அளவு

🔖நெய் -தேவையான அளவு

🔖உப்பு - தேவையான அளவு

செய்முறை:

     🔥வெண்பொங்கல் செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

🔥மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் முந்திரி பருப்பு, இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    🔥அடுத்து ஒரு மண் பானையை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

🔥தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் பச்சரிசி, வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

    🔥பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

   🔥இறுதியில் சிறிது நெய் விட்டு கிளறி இறக்கினால் கடவுளுக்கு படைக்க வெண் பொங்கல் தயார்.


பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?






தைத் திருநாளில் நாம் நம் வீட்டில் எந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை முதல் நாள் கொண்டாடப்படும். முதலில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் பொங்கல் விழா நடைபெறும். தைத்திருநாளில் முதலில் நாம் சூரியனைப் பார்த்து பொங்கலை வைத்து உற்சாகமாக கொண்டாடும்.

இந்த நாளில் புது பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவோம். இரண்டாவது நாள் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் நாள். மாடுகளை அலங்கரித்து, வண்ணம் பூசி பொங்கல் வைத்து படைப்பார்கள்

மூன்றாவது நாள் உறவினர்களைக் கண்டு மகிழும் நாள். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய தினங்களில் எந்தெந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

பொங்கல், ஜனவரி 14:

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

காலை 10:30 மணி முதல் 12 மணி வரை

மாட்டுப்பொங்கல், ஜனவரி 15:

காலை 9 மணி முதல் 10 மணி வரை

காலை 11:05 முதல் பகல் 1 30 மணி வரை

காணும் பொங்கல் ஜனவரி 16:

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

காலை 10:30 மணி முதல் 12 மணி வரை

3 June 2018

கலைஞர் 95... கலைஞரைப் பற்றிய‌ அரிய‌ சுவாரஸ்யமான 95 தகவல்கள்


திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி தனது 95 வயது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார்.

கலைஞர் அவர்களுக்கு கல்விச்சுடர்  இணையம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

1 June 2018

கல்விச்சுடர் இணையத்தின் கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்


குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோர் பெற்றோர்களையும் விட பெருமதிப்புக்கு உரியவர்கள். பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள், ஆசிரியர்களோ நல்வாழ்வு வாழும் கலையை கற்றுத் தருகிறார்கள்
- அரிஸ்டாட்டில்


அனைத்து ஆசிரிய நண்பர்கள் மற்றும் ஆசிரியை சகோதரிகள் அனைவருக்கும் இந்த கல்வியாண்டு சிறப்பாக அமைய

கல்விச்சுடர்

அன்புடன் வாழ்த்துகிறது

www.kalvichudar.com


18 October 2017

நாடு முழுக்க தீபாவளி உற்சாக கொண்டாட்டம்!



தமிழகம் உட்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இம்முறை பருவமழை அதிகம் பெய்து ஏரி, வாய்க்கால்களில் நீர் பெருக்கெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த வருடத்தை விட இவ்வாண்டு உற்சாகமாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகள் தங்களது தலை தீபாவளியை குடும்பதினரோடு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையொட்டி பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால் காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

30 May 2017

கலைஞரை வாழ்த்தனும் னா http://wishthalaivar.com வாங்க.


திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த முடியவில்லை என்ற வருத்ததை போக்க விஷ் தலைவர் என்ற இணையபக்கத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கும் வசதியை திமுக அறிமுகம் செய்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL