| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
19 November 2026
பள்ளி வளாகம் கழிவறை தூய்மை உள்ளிட்ட பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
பள்ளி வளாகம் கழிவறை தூய்மை உள்ளிட்ட பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!
18 November 2026
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2026
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:55.செங்கோன்மை
குறள் எண்:542
குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
பொருள்:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
பழமொழி :
Walls have ears.
சுவற்றுக்கும் காது உண்டு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் .
2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.
பொன்மொழி :
தாய்மண்ணின் மீதும் உரிமையின் மீதும் கொண்ட பற்றும் துணிவும் வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும்!
Thought for the Day :
Courage and commitment to one's land and rights create a lasting place in history.
பொது அறிவு :
1. முரசு புயலுக்கு பெயர் வழங்கிய நாடு எது?
இந்தியா.
2 . புயல் உருவாக முக்கிய காரணம் என்ன?
கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம்.
English words :
1. Lenient - கருணையுள்ள - Tolerant
2. Vivid - தெளிவான - Bright
புவியியலும் சுற்றுசூழலும் :
மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா: தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் இடையே 21 தீவுகளை உள்ளடக்கிய இந்தியாவின் முக்கிய கடல்சார் தேசிய பூங்காவாகும். கடல் பசு (Dugong) மற்றும் பவளப்பாறைகளுக்கு இது புகழ்பெற்றது.
7. கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை வனப்பகுதியாகும். இங்கு வெளிமான்கள் (Blackbuck) மற்றும் புலம்பெயர்ந்து வரும் பறவைகள் அதிகம் காணப்படும்.
NMMS :
MAT
மீனா, “அவள் என் தாயின் ஒரே மகளின் மகள்” என்கிறார். அந்தப் பெண் மீனாவுக்கு என்ன உறவு?
A. Sister / சகோதரி
B. Daughter / மகள்
C. Niece / சகோதர மகள்
D. Mother / தாய்
விடை: B) மகள்
நவம்பர் 18
வ. உ. சி அவர்களின் நினைவுநாள்
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
நீதிக்கதை
மொபைல் விளையாட்டின் மோகமும் உடல்நலப் பாதிப்பும்
ஒரு அழகான கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் ஆர்வமாக இருந்தான். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் நண்பர்களுடன் வெளியே விளையாடுவது அவனுடைய வழக்கம்.
ஒருநாள் அவனுடைய நண்பன் ஒரு புதிய மொபைல் விளையாட்டை அறிமுகப்படுத்தினான். ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காகச் சிறிது நேரம் விளையாடிய அருண், நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அடிமையானான்.
காலையில் எழுந்தவுடன் மொபைல், சாப்பிடும்போது மொபை ல், தூங்கச்செல்லும் முன்பும் மொபை ல் என்று அவனுடைய வாழ்க்கையே மாறிவிட்டது.
இதனால் அவனுக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. * நீண்ட நேரம் திரையைப் பார்த்ததால் கண்களில் சோர்வும் எரிச்சலும் ஏற்பட்டது.
* சரியான நேரத்தில் தூங்காததால் காலையில் எழுந்திருக்க முடியவில்லை .
* வெளியில் விளையாடுவதை நிறுத்தியதால் உடல் சுறுசுறுப்பு குறைந்தது.
* படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மதிப்பெண்களும் குறைந்தன.
* எப்போதும் விளையாட்டைப் பற்றியே சிந்தித்ததால் குடும்பத்தினருடன் பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் போனது.
இதையெல்லாம் கவனித்த அவனுடைய தாத்தா ஒருநாள் அவனை அழைத்து,
"அருண்! மொபைல் என்பது நமக்குப் பயன்பட வேண்டிய ஒரு கருவி. ஆனால் நாம் மொபைலுக்குப் பயன்படும் மனிதர்களாக மாறிவிடக்கூடாது. விளையாட்டு மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும்; அது நம் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதிக்கக் கூடாது!" என்றார்.
தாத்தாவின் வார்த்தைகள் அருணின் மனதில் ஆழமாகப் பதிந்தன.
அன்றிலிருந்து அவன் மொபைல் விளையாடும் நேரத்தைக் குறைத்து, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும், நண்பர்களுடன் வெளியில் விளையாடவும், படிப்பில் கவனம் செலுத்தவும் தொடங்கினான்.
சில நாட்களிலேயே அவனுடைய தூக்கமும் படிப்பில் கவனமும் மேம்பட்டன.
மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் திரும்பினான்.
### 🌟 நீதிக்கருத்து
"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. மொபைல் விளையாட்டுகளை அளவோடு பயன்படுத்துவோம்; உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாப்போம்!"
நினைவில் கொள்வோம்:
* மொபைலை விட மைதான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
* போதுமான தூக்கம் பெறுவோம்.
* கண்களுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுப்போம்.
* தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்; அதற்கு அடிமையாக மாட்டோம்!
இன்றைய செய்திகள்
18.11.2026
🗒️சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியப் பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அரசு சார்பில் அமைக்க உள்ளனர்.
🗒️கடந்த மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
🗒️டிரம்ப் அரசு கொண்டு வந்த விசா விதிகளை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏃🏻♀️ உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை வீரர் தங்கம் வென்றார்.
🏃🏻♀️ஒலிம்பிக் பதக்க வீராங்கனைக்கு அடுத்த அங்கீகாரம், சர்வதேச அமைப்பில் இடம்பிடித்த மனு பாக்கர்.
Today's Headlines
🗒️ The government plans to set up Energy Efficiency Help Centres in Chennai, Madurai, Coimbatore, Cuddalore and Tiruchirappalli.
🗒️ Wholesale inflation increased to 12% last month.
🗒️ A US court cancelled the visa rules introduced by the Trump government.
🏀 Sports News
🏃🏻♀️ A Chennai player won a gold medal at the World Youth Table Tennis Championship.
🏃🏻♀️ Olympic medal winner Manu Bhaker has received another honour by becoming a member of an international organisation.
17 November 2026
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2026
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:55.செங்கோன்மை
குறள் எண்:541
குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
பொருள்:
நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.
பழமொழி :
Wake not a sleeping tiger.
தூங்கும் புலியை இடறாதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் .
2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.
பொன்மொழி :
ஆரோக்கியமே வாழ்வின் மிகப்பெரிய செல்வம்; விழிப்புணர்வும் சரியான பராமரிப்பும் ஆரோக்கியமான சமூகத்தின் அடித்தளம்!
Thought for the Day :
Health is life's greatest wealth; awareness and proper care are the foundations of a healthy society.
பொது அறிவு :
1.2026 ஆம் ஆண்டு உருவான புயலின் பெயர் என்ன?
முரசு புயல்.
2. முரசு புயல் எந்த கடலில் உருவாகியுள்ளது?
வங்காள விரிகுடா.
English words :
1. Ambivalent - இருமனப்போக்குள்ள - Uncertain
2. Eloquence - சொற்பொழிவாற்றல் Oloquence
புவியியலும் சுற்றுசூழலும் :
ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்
• அமைவிடம்: விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட எல்லைப் பகுதி.
• சிறப்பு: அருகி வரும் இனமான சாம்பல் நிற அணில்களைப் பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சரணாலயம்.
• விலங்கினங்கள்: சாம்பல் நிற அணில்கள், பறவைகளின் பல வகைகள், சிறுத்தைகள்.
NMMS :
MAT
அருண் ரவியைக் காட்டி, “இவர் என் தந்தையின் ஒரே மகனின் மகன்” என்கிறார். ரவி அருணுக்கு என்ன உறவு?
A. Son / மகன்
B. Brother / சகோதரர்
C. Father / தந்தை
D. Nephew / மருமகன்
விடை:A) மகன்
நவம்பர் 17
லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவுநாள்
லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்
நீதிக்கதை
🌳 உதவி செய்தவரை மறக்கக் கூடாது
ஒரு அழகான கிராமத்தில் ராஜன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் புத்திசாலி. ஆனால், சில நேரங்களில் மற்றவர்கள் தனக்குச் செய்த உதவிகளை நினைவில் வைத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பான்.
ஒருநாள் ராஜன் பள்ளிக்குச் செல்லும்போது வழியில் ஒரு சிறிய பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவன் கால் தவறி கீழே விழுந்தான். அவனுடைய புத்தகப் பையும் ஆற்றில் விழுந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த சிலர் இவன் நன்றி இல்லாதவன் என்று கூறி கடந்து சென்று விட்டனர்.
அந்த வழியாக வந்த ஒரு வயதான விவசாயி அவனுடைய நிலையைக் கண்டு உடனே ஓடிவந்து அவனைப் பாதுகாப்பாகத் தூக்கினார். பின்னர் அவனுடைய புத்தகப் பையையும் எடுத்துக் கொடுத்து, வீட்டிற்குச் செல்ல உதவி செய்தார். ராஜன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த விவசாயி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. அந்த வழியாக வந்த ராஜன் அவரைப் பார்த்தான். உடனே அவருக்கு உதவி செய்து, அருகில் இருந்தவர்களின் துணையுடன் அவரை வீட்டிற்குக் கொண்டு சேர்த்தான்.
அப்போது விவசாயி ராஜனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். தான் செய்த சிறிய உதவியை ராஜன் மறக்காமல் நினைவில் வைத்திருப்பதைக் கண்டு அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அன்று முதல் ராஜன் ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொண்டான். தனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும், நம்மால் முடிந்தபோதெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் உறுதி எடுத்துக்கொண்டான்.
நீதி:
நமக்குத் துன்பம் ஏற்படும் நேரத்தில் உதவி செய்பவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது. நன்றியுணர்வுடன் வாழ்வதே சிறந்த பண்பாகும்.
பொன்மொழி:
🌷 "உதவியை மறப்பவன் உயர்வதில்லை; நன்றியை மறக்காதவன் என்றும் மதிக்கப்படுவான்."
நன்றி மறப்பது நன்றன்று
இன்றைய செய்திகள்
17.11.2026
🗒️கைத்தறி மற்றும் கதர் துறை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.
🗒️அக்வான்’ புயல் எதிரொலி.. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்
🗒️உலக பாரம்பரிய தினம்: 19-ம் தேதி தாஜ்மகாலை பார்வையிட இலவசம் என இந்திய தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
🗒️11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஆசியான் கூட்டமைப்பின் 23 வது மாநாடு பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ளது.
🏀விளையாட்டுச் செய்திகள்
🏃🏻♀️கால்பந்து : நேஷன்ஸ் லீக் குரூப் ஏ3 பிரிவில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து 15 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
🏃🏻♀️கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தல்,ஆகிப் நபிக்கு சிறப்பு பதக்கம் வென்றுள்ளது.
Today's Headlines
1. The Tamil Nadu Government has ordered the allocation of funds for announcements related to the Handloom and Khadi Department.
2. Due to Cyclone ‘Agwan’, there is a chance of very heavy rainfall in three districts, including Chennai.
3. World Heritage Day: The Archaeological Survey of India has announced that visitors can enter the Taj Mahal for free on the 19th.
4. The 23rd summit of the ASEAN bloc, which has 11 member countries, is set to take place in the Philippines.
🏀 Sports News
⚽ Football:
5. England defeated Spain in the Nations League Group A3 and secured first place with 15 points.
🏏 Cricket:
6. Aaqib Nabi won a special award for his outstanding performance in the One-Day series against New Zealand.
16 November 2026
மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு..
ஆசிரியர்கள், வழக்குகளில் இருந்து விடுவிப்பு
மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று தமிழ்நாடு அரசு அரசாணை
600 வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசியர்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக கடுமையாக போராடிய ஒரே இனம் இடைநிலை ஆசிரியர்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டும் என உச்சபட்ச இனம் காணாத இதுவரை நடந்திடாத போராட்டங்களை கடந்த ஜனவரி 2026 இல் நடத்தினார்கள்.
காவல்துறையை வைத்து உச்சபட்ச சித்திரவதைகளும், கடும் அடக்குமுறைகளும் ஆசிரியர்கள் மீது ஏவப்பட்டது. பல்வேறு பொய் வழக்குகள் பதியப்பட்டது, மாநில பொறுப்பாளர்களை அடக்குமுறைகளையும் தாண்டி வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டு எதுவும் செய்யாமல் 37 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
SSTA அமைப்பு மூலமாக தொடர்ந்து தற்போதைய மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் மூலமாக தொடர்ந்து கோரிக்கை வைத்ததின் காரணமாக இப்போது 92 ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான 5- ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பை மனதார வரவேற்று, நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.*
அதேவேளை கடுமையாக ஊதிய முரணால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் "சம வேலைக்கு சம ஊதியத்தை" தமிழக முதல்வர் அவர்கள் வழங்கி போராடிய நாட்களுக்கான ஊதியத்தையும் மீண்டும் கண்டிப்பாக தருவார் மேலும் இதன் மூலமாக மீதமுள்ள பணி நாட்களுக்கான வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் கல்வி தரத்தையும் மென்மேலும் உயர்த்திட பணிவுடன் வேண்டுகிறோம்.
_ஜே.ராபர்ட்_
_SSTA- மாநில பொதுச்செயலாளர்_
(அமைதியான முறையில் அகிம்சை வழியில் போராட அனைத்து மக்களுக்கும் உரிமை உள்ளது உச்ச நீதிமன்றமும் அதை பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தி உள்ளது.கடந்த ஆண்டுகளில் பல்வேறு பிரிவினர்கள் அவர்களால் முடிந்த அளவு (செவிலியர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், சத்துணவு அமைப்பாளர்கள், டாஸ்மார்க் பணியாளர்கள் போன்ற இன்னும் சிலர் பிரிவினர்) போராடினார்கள் தற்போது விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் மட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.மற்ற பிரிவினர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்னும் அப்படியே உள்ளது குறிப்பிடப்பட்டது.)
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2026
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:53. சுற்றந் தழால்
குறள் எண்:530
குறள்:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
பொருள்:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.
பழமொழி :
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
In youth laziness, in adulthood regrets
இரண்டொழுக்க பண்புகள் :.
1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் .
2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.
பொன்மொழி :
ஒரு சிறிய அன்பான செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை உருவாக்கும்!
Thought for the Day :
A small act of kindness can create a big difference in someone's life.
பொது அறிவு :
1. மக்களவை உறுப்பினர்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
543 உறுப்பினர்கள்.
2. மக்களவை உறுப்பினர்களில் குடியரசு தலைவரால் ஆங்கிலோ இந்திய சமூகத்தில் இருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இரண்டு உறுப்பினர்கள்.
English words :
1) Acquiesce - ஒப்புக்கொள் - Comply
2) Zealous - ஆர்வமிக்க - Fervent
புவியியலும் சுற்றுசூழலும் :
"சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்
• அமைவிடம்: ஈரோடு மாவட்டம்.
• சிறப்பு: கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் முக்கிய இணைப்புப் பகுதியாக உள்ளது. புலிகள் பாதுகாப்பு மேலாண்மைக்காகப் புகழ்பெற்றது.
• விலங்கினங்கள்: புலிகள், யானைகள், சிறுத்தைகள் மற்றும் கழுதைப்புலிகள்."
நவம்பர் 16
உலக சகிப்புத் தன்மை நாள்
உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.
நீதிக்கதை
சாலை பாதுகாப்பு – உயிரைக் காக்கும் விதிகள்
நீதிக்கதை: அவசரம் ஆபத்தைத் தரும்!
ஒரு அழகான கிராமத்தில் அருண், வருண் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர்.
அருண் எப்போதும் சாலை விதிகளைப் பின்பற்றும் பழக்கம் உடையவன். ஆனால் வருணுக்கோ எதிலும் அவசரம். பள்ளிக்குச் செல்லும்போது சாலையைக் கவனிக்காமல் ஓடுவதும், சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் வருகிறதா என்று பார்க்காமல் கடப்பதும் அவனுடைய வழக்கம்.
ஒருநாள் காலையில் இருவரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு பெரிய சாலை இருந்தது. அங்கே போக்குவரத்து சிக்னல் இருந்தும், வருண் சிவப்பு விளக்கைப் பொருட்படுத்தாமல் சாலையைக் கடக்க முயன்றான்.
உடனே அருண் அவனது கையைப் பிடித்து நிறுத்தினான்.
"வருண்! சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடக்கக் கூடாது. பச்சை விளக்கு எரியும்போது வாகனங்கள் செல்லலாம். பாதசாரிகளுக்கான பச்சை சிக்னல் வந்த பிறகும், இருபுறமும் வாகனங்கள் நின்றுவிட்டனவா என்று பார்த்துவிட்டுத்தான் கடக்க வேண்டும்" என்றான் அருண்.
மேலும், "சாலையைக் கடக்கும்போது கைப்பேசியில் பேசக்கூடாது. காதில் இயர்போன் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. சாலையில் விளையாடவும் கூடாது" என்று அறிவுரை கூறினான்.
வருண் தனது தவறை உணர்ந்து கொண்டான்.
அன்று பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ஆசிரியர் கூறிய அறிவுரை வருணின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
"தலைக்கவசம் அணிவது, காரில் இருக்கைப்பட்டை அணிவது, போக்குவரத்து விதிகளை மதிப்பது ஆகியவை நம்முடைய உயிரைப் பாதுகாக்கும் பழக்கங்கள். சாலை விதிகள் நமக்காகத்தான்; அவற்றைப் பின்பற்றுவது நம் கடமை!" என்றார் ஆசிரியர்.
அன்று முதல் வருணும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றத் தொடங்கினான். தன் நண்பர்களுக்கும் சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினான்.
நீதி: சாலையில் அவசரம் காட்டாதே! போக்குவரத்து விதிகளை மதித்து நட! உன் பாதுகாப்பு மட்டுமல்ல, பிறர் பாதுகாப்பும் உன் கையில்தான் உள்ளது.
நினைவில் கொள்வோம்:
* தலைக்கவசம் அணிவோம்.
* காரில் இருக்கைப்பட்டை அணிவோம்.
* சாலையைக் கடக்க நடைபாதைக் கடவையைப் பயன்படுத்துவோம்.
* போக்குவரத்து சிக்னல்களை மதிப்போம்.
* கைப்பேசி பயன்படுத்திக்கொண்டே சாலையைக் கடக்க மாட்டோம்.
"சாலை விதிகளை மதிப்போம்! உயிர்களைப் பாதுகாப்போம்!" 🚦
இன்றைய செய்திகள்
16.11.2026
🗒️3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்; தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
🗒️ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை புரிந்துள்ளது.
🗒️தீவிர புயலாகும் ’அக்வான்’: தமிழகத்தில் இன்று முதல் பருவமழை தீவிரமடையும்.
🏀விளையாட்டுச் செய்திகள்
🏃🏻♀️ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன்.
🏃🏻♀️ பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவு: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய எர்ரானி - பவோலினி ஜோடியினர் .
Today's Headlines
🗒️ The Tamil Nadu Electricity Board has decided to purchase 3,000 megawatts of electricity.
🗒️ SpaceX has created a record by successfully landing its Starship spacecraft on Earth for the first time.
🗒️ Cyclone 'Akwan' is expected to become a severe storm. Monsoon rains in Tamil Nadu are expected to intensify from today.
🏀 Sports News
🏃🏻♀️ Japan Masters Badminton: India's Lakshya Sen has won the championship.
🏃🏻♀️ Women's Tennis Championship – Doubles: The pair of Errani and Paolini have reached the final
13 November 2026
NHIS - 2026 - ஒருங்கிணைப்பாளர்கள் விவரம் மருத்துவமனைகள் விவரம், நோய்கள் விவரம் மற்றும் அடையாள அட்டை (E-Card) பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!!
NHIS - 2026 - ஒருங்கிணைப்பாளர்கள் விவரம் மருத்துவமனைகள் விவரம், நோய்கள் விவரம் மற்றும் அடையாள அட்டை (E-Card) பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!!
Subscribe to:
Posts (Atom)